அமேசானின் சரவெடி தீபாவளி ஆபர்: ரூ.7,499 முதல் கிடைக்கும் ஸ்மார்ட் டிவிகள்: இதோ பட்டியல்.!

|

அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேல் 2022 வரும் அக்டோபர் 23-ம் தேதி முடிவடைகிறது. மேலும் தற்போது நடைபெறும் சிறப்பு விற்பனையில் ஸ்மார்ட்போன், டிவி, பவர்பேங்க், லேப்டாப் உள்ளிட்ட பல சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

 32-இன்ச் ஸ்மார்ட் டிவி

குறிப்பாக Amazon தளத்தில் ஸ்மார்ட் டிவிகளை வாங்க சரியான நேரம் இதுதான். ஏனெனில் பல்வேறு நிறுவனங்களின் தரமான ஸ்மார்ட் டிவிகளுக்குதள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. சரி இப்போது விஷயத்துக்கு வருவோம், அதாவது அமேசான் தளத்தில் 32-இன்ச் ஸ்மார்ட் டிவிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளைப் பார்ப்போம்.

32-இன்ச் ஏசர் N Series ஸ்மார்ட் டிவி (AR32NSV53HD)

32-இன்ச் ஏசர் N Series ஸ்மார்ட் டிவி (AR32NSV53HD)

முன்பு ரூ.14,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 32-இன்ச் ஏசர் N Series ஸ்மார்ட் டிவி (AR32NSV53HD) மாடலை அமேசான் தளத்தில் தற்போது ரூ.7,999-விலையில் வாங்க முடியும். மேலும் 1366 x 768 பிக்சல்ஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட்,யுஎஸ்பி போர்ட்உள்ளிட்ட பல சிறப்பு வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த ஏசர் ஸ்மார்ட் டிவி.

BSNL-க்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் இடத்தை பிடித்த ஜியோ: எதில் தெரியுமா?BSNL-க்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் இடத்தை பிடித்த ஜியோ: எதில் தெரியுமா?

32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி (L32M6-RA/L32M7-RA)

32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி (L32M6-RA/L32M7-RA)

ஆண்ட்ராய்டு 11 ஆதரவு கொண்ட32-இன்ச் ரெட்மி ஸ்மார்ட் டிவி (L32M6-RA/L32M7-RA) மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

குவாட்-கோர் பிராசஸர், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், க்ரோம்காஸ்ட் ஆதரவு, PatchWall 4, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த ரெட்மி ஸ்மார்ட் டிவி வெளிவந்துள்ளது.

32-இன்ச் ஒன்பிளஸ்  Y Seriesஸ்மார்ட் டிவி

32-இன்ச் ஒன்பிளஸ் Y Seriesஸ்மார்ட் டிவி

முன்பு ரூ.19,999-க்கு விற்பனை செய்யப்பட்ட 32-இன்ச் ஒன்பிளஸ் Y Series ஸ்மார்ட் டிவி மாடலை தற்போது அமேசான் தளத்தில் ரூ.11,999-க்கு வாங்க முடியும். இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு டிவி 9.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது.

மேலும் 64-பிட் பவர்ஃபுல் பிராசஸர், பெசல்-லெஸ் டிசைன், கூகுள் அசிஸ்டண்ட், க்ரோம்காஸ்ட் ஆதரவு, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள்,எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் ஸ்மார்ட் டிவி.

32-இன்ச் எல்ஜி ஸ்மார்ட் எல்இடி டிவி  (32LM563BPTC)

32-இன்ச் எல்ஜி ஸ்மார்ட் எல்இடி டிவி (32LM563BPTC)

எல்ஜி 32-இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவி மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,980 விலையில் வாங்க முடியும். குறிப்பாக அமேசான் தளத்தில் இந்த டிவிக்கு 41 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த எல்ஜி டிவி ஆனது Web OS மூலம் இயங்குகிறது. மேலும் 10 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்ஜி டிவி.

குறிப்பாக குவாட்-கோர்ட் பிராசஸர், வைஃபை ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த எல்ஜி 32-இன்ச் ஸ்மார்ட் டிவி மாடல். மேலும் இந்த ஸ்மார்ட் டிவியின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

32-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி (32HDX900S)

32-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி (32HDX900S)

அமேசான் தளத்தில் 32-இன்ச் கோடாக் ஸ்மார்ட் டிவி (32HDX900S) மாடலுக்கு 53 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்
டிவியை ரூ7,499-விலையில் வாங்க முடியும். 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த கோடாக் ஸ்மார்ட் டிவி.

 32-இன்ச் Toshiba  ஸ்மார்ட் டிவி (32V35KP)

32-இன்ச் Toshiba ஸ்மார்ட் டிவி (32V35KP)

அமேசான் தளத்தில் 32-இன்ச் Toshiba ஸ்மார்ட் டிவி (32V35KP) மாடலுக்கு 56 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்
டிவியை ரூ.10,999-விலையில் வாங்க முடியும்.

இந்த ஸ்மார்ட் டிவி ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 1ஜிபி ரேம், 8ஜிபி ஸ்டோரேஜ், 16 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், குவாட்-கோர் பிராசஸர், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளுடன் வெளிவந்துள்ளது.

32-இன்ச் Vu ஸ்மார்ட் டிவி (32UA)

32-இன்ச் Vu ஸ்மார்ட் டிவி (32UA)

அமேசான் தளத்தில் 32-இன்ச் Vu ஸ்மார்ட் டிவி (32UA) மாடலுக்கு 48 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட் டிவியை ரூ.10.499-விலையில் வாங்க முடியும். மேலும் Linux smart OS, 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள், பெசல்-லெஸ் டிசைன், எச்டிஎம்ஐ போர்ட், யுஎஸ்பி
போர்ட் உள்ளிட்ட பல சிறப்பான வசதிகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட் டிவி.

Best Mobiles in India

English summary
Amazon Sale: Incredible discount on 32-inch Smart TVs: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X