Home
Deal of the day

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.25,000 பட்ஜெட்ல 43 இன்ச் 4K டிவி.. டால்பி ஆடியோ.. கூகுள் டிவி ஓஎஸ்.. எந்த மாடல்?

ஒனிடா நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகளுக்கு இந்திய மார்கெட்டில் தனியிடம் இருக்கிறது. கரோக்கி சீரிஸ் மாடல்கள் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. இதில் ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் டிவி (ONIDA Karaoke Series 43 inch TV) மாடலானது தள்ளுபடி விலைக்கு கிடைக்கிறது. டால்பி ஆடியோ, கூகுள் டிவி ஓஎஸ், இன்-பில்ட் கரோக்கி போன்ற பீச்சர்களுடன் விற்பனையில் சக்கைப்போடு போடுகிறது. இந்த ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் டிவிக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

இன்-பில்ட் கரோக்கி கிடைக்கும் டிவி மாடல்களுக்கு மவுசு இருக்கிறது. இந்த மாடல்கள் சற்று கூடுதலாக விலையில் கிடைக்கும். ஆனால், இந்த ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் டிவி மாடலானது 17 சதவீத விலை குறைப்பு போக ரூ.26,499 விலைக்கு கிடைக்கிறது. மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.1,250 தள்ளுபடியும் கொடுக்கப்பட்டு உள்ளது.

லட்டு மாதிரி ஆஃபர்.. ரூ.25,000 பட்ஜெட்ல 43 இன்ச் 4K டிவி.. மாடல்?

ஆகவே, ரூ.25,349 விலைக்கு வாங்கி கொள்ளலாம். இதுபோக ஈஎம்ஐ ஆப்ஷனில் வாங்கும் கஸ்டமர்களுக்கு ரூ.1,750 தள்ளுபடி கொடுக்கப்படுகிறது. ஆகவே, இந்த ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் டிவியை மேலும் மலிவான விலைக்கு வாங்கி கொள்ளலாம். 1 வருட வாரண்டியுடன் விற்பனைக்கு கிடைக்கிறது. பிளாக் கலரில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.

ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் டிவி அம்சங்கள் (ONIDA Karaoke Series 43 inch TV Specifications): 60 Hz ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 43 இன்ச் (3840 x 2160 பிக்சல்கள்) எல்இடி (LED) டிஸ்பிளேவை இந்த ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி 2025 எடிஷன் கொடுக்கிறது. 4K அல்ட்ரா எச்டி (4K Ultra HD) ரெசொலூஷன் கிடைக்கிறது.

மேலும், எம்இஎம்சி (MEMC), எச்டிஆர்10 (HRD10), ஃபிலிம் மேக்கர் மோட் (Filmmaker Mode), ஏஐ பிக்சர் ஆப்டிமைசேஷன் (AI Picture Optimisation) கொடுக்கப்பட்டு உள்ளது. நெக்ஸ்ஜி ப்ராசஸரை இந்த ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் டிவி கொடுத்து உள்ளது. டால்பி ஆடியோ (Dolby Audio) மற்றும் டால்பி டிஜிட்டல் (Dolby Digital) கிடைக்கிறது.

கூகுள் 5.0 ஓஎஸ் (Google 5.0 OS) கிடைக்கிறது. கூகுள் காஸ்ட் (Google Cast), கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் (Google Voice Assistant) மற்றும் கூகுள் பிளே ஸ்டோர் (Google Play Store) உள்ளது. அமேசான் பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஜியோஹாட்ஸ்ட் உள்ளிட்ட ஓடிடி ஆப்களை இந்த ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி 2025 எடிஷன் கொடுக்கிறது.

வாய்ஸ் அசிஸ்டன்ட் ரிமோட் கிடைப்பதால், கரோக்கியாக பயன்படுத்தி கொள்ளலாம். ஆகவே, இன்-பில்ட் கரோக்கி கொண்ட மாடலாகவும் இருக்கிறது. இதற்காக ஹாட்-கீ கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் வோகல் வால்யூம், பிடி மைக் வால்யூம், எக்கோ உள்ளிட்ட கன்ட்ரோல்களை செய்து கொள்ளலாம். கரோக்கி மோடில் (Karaoke Mode) பயன்படுத்தி கொள்ளலாம்.

ஆப்டிகல், ஏவி இன், ஆடியோ ஜாக் மற்றும் எல்ஏஎன் போர்ட்கள் கிடைக்கின்றன. மேலும், யுஎஸ்பி, எச்டிஎம்ஐ உள்ளிட்ட போர்ட்களும் கொடுக்கப்பட்டு உள்ளன. ப்ளூடூத், வை-பை, ஸ்கிரீன் மிரரிங் உள்ளிட்ட வயர்லெஸ் கனெக்டிவிட்டிகளையும் இந்த ஒனிடா கரோக்கி சீரிஸ் 43 இன்ச் அல்ட்ரா எச்டி 4கே எல்இடி ஸ்மார்ட் டிவி 2025 எடிஷன் மாடல் கொடுத்து உள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
ONIDA Karaoke Series 43 inch Ultra HD 4K LED Smart Google TV 2025 Edition Price Drop on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X