Home
News

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் 7 புதிய விதிகள்.. ஃபாஸ்டாக் முதல் பான் கார்டு வரை.. அவசியம் தெரிஞ்சுக்கோங்க..

2026 ஏப்ரல் 1 முதல் பல முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வரவுள்ளன. அதுவும் இந்த புதிய மாற்றங்கள் சாமானிய மக்களின் நிதிநிலையை நேரடியாக பாதிக்கும். குறிப்பாக இந்த மாற்றங்களில் ஃபாஸ்டாக் கட்டண உயர்வு முதல் பான் கார்டு வரை அனைத்தும் அடங்கும். இப்போது இது குறித்த விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

ஃபாஸ்டாக்
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI )ஃபாஸ்டாக் வருடாந்திர பாஸின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அதாவது ஃபாஸ்டாக் (fastag) புதிய விதிமுறை 2026 ஏப்ரல் 1 முதல் நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளில் அமலப்படுத்தப்படுகிறது.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் 7 புதிய விதிகள்..

அடிக்கடி நெடுஞ்சாலைகளில் பயணம் செய்யும் கார் மற்றும் இலகுரக வாகன உரிமையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஃபாஸ்டாக் ஆண்டு சந்தா விலை உயர உள்ளது. பழைய கட்டணம் ரூ.3000-ஆக இருந்த நிலையில் தற்போது ரூ.3075 புதிய கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது ரூ.3075 கட்டணத்தைச் செலுத்தினால் ஓராண்டு காலத்திற்குள் அல்லது 200 முறை சுங்கச்சாவடிகளைக் கடக்கலாம்.

ஏடிஎம்

ஏடிஎம் மையங்களில் யுபிஐ (UPI) சேவை மூலம் பணம் எடுக்கும் வசதியான யுபிஐ ஏடிஎம் வித்ட்ராவல்கள் (UPI ATM Withdrawals) விரைவில் மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பிற்குள் (Monthly free transaction cap) சேர்க்கப்படும் என்று எச்டிஎப்சி வங்கி தெரிவித்துள்ளது. குறிப்பாக வாடிக்கையாளர்கள் இலவச வரம்பை மீறினால் ஒவ்வொரு கூடுதல் பரிவர்த்தனைக்கும் ரூ.23 மற்றும் பொருந்தக்கூடிய வரிகள் வசூலிக்கப்படும்.

குறிப்பாக ஏடிஎம் மையங்களில் UPI மூலம் பணம் எடுப்பது தனிப்பட்ட முறையில் இலவசமாக இருந்தது. ஆனால் இனி அப்படி இருக்காது என அறிவித்துள்ளது HDFC வங்கி. இதுவும் DEPIT கார்டு மூலம் பணம் எடுப்பதைப் போன்றே கணக்கில் கொள்ளப்படும் என அறிவித்துள்ளது. ஆக இனி உங்கள் மாதாந்திர இலவச பரிவர்த்தனைகள் முடிவடையும் பட்சத்தில் கூடுதல் கட்டணங்கள் விதிக்கப்படும். அதுவும் இந்த விதி வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும்.

பணம் எடுக்கும் வரம்பு குறைக்கப்படுகிறது
பஞ்சாப் நேஷனல் வங்கி வெளியிட்ட அறிவிப்பின்படி, வரும் ஏப்ரல் முதல் சில குறிப்பிட்ட டெபிட் கார்டுகளுக்கான பணம் எடுக்கும் வரம்பை குறைத்துள்ளது. அதாவது ரூபே என்.சி.எம்.சி. பிளாட்டினம் (உள்நாட்டு மற்றும் சர்வதேசம்), ரூபே பி.என்.பி. பலாஷ், ரூபே பிசினஸ் பிளாட்டினம் என்.சி.எம்.சி., மாஸ்டர்கார்டு பிளாட்டினம், விசா கோல்ட் மற்றும் பி.என்.பி. மாஸ்டர்கார்டு பிளாட்டினம் ரைஸ், ரூபே வுமன் பவர் பிளாட்டினம் ஆகிய கார்டுகளுக்கு தினசரி வரம்பு ரூ.50000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

மேலும் பிஎன்பி ரூபே செலக்ட் நியோ/எக்செல், ரூபே செலக்ட் டெபிட் கார்டு, விசா சிக்னேச்சர் மற்றும் மாஸ்டர்கார்டு பிசினஸ் டெபிட் கார்டுகளுக்கான வரம்பு ரூ.75000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.

எல்பிஜி விலை
வரும் ஏப்ரல் 1-ம் தேதி எரிபொருள் விலைகள் திருத்தி அமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் ATF (விமான எரிபொருள்), CNG மற்றும் PNG ஆகியவற்றின் விலைகளும் மாறக்கூடும் என்று கூறப்படுகிறது. இந்த மாற்றங்கள் போக்குவரத்துச் செலவை அதிகரித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான கட்டணம்
ரயில் டிக்கெட் ரத்து செய்வதற்கான பணம் திரும்ப அளிப்பது தொடர்பான சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை வரும் ஏப்ரல் 1-ம் தேதி அமலுக்கு வரும்.

1. நீங்கள் பயணம் செய்வதற்கு 72 மணி நேரத்திற்கு முன்பு அல்லது மூன்று நாட்களுக்கு முன்பு திட்டத்தை மாற்றி டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு அதிகபட்ச ரீஃபண்ட் கிடைக்கும்.

2. அதே ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட் ரத்து செய்தால் உங்கள் டிக்கெட் தொகையில் 25 சதவீதம் அபராதமாகப் பிடிக்கப்படும். மீதமுள்ள 75 சதவீதம் தொகை மட்டுமே திரும்ப வழங்கப்படும்.

3. அதேபோல் பயணத்திற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் டிக்கெட் ரத்து செய்யும் பட்சத்தில், டிக்கெட் கட்டணத்தில் சரிபாதி அதாவது 50 சதவீதம் பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

4.நீங்கள் ரயில் புறப்படுவதற்கு முந்தைய 8 மணி நேரத்துக்குள் ரத்து செய்தால் கட்டணம் திருப்பித் தரப்படாது. அதாவது 100 சதவீதத் தொகையும் ரத்து கட்டணமாகவே கருதப்படும். தற்போது ரயில் புறப்படும் 8 மணி நேரத்துக்கு முன்பே சார்ட் போடப்படுகிறது. சார்ட் போட்ட பிறகு நீங்கள் கேன்சல் செய்தால் ஒரு ரூபாய் கூட ரீஃபண்ட வராது.

டிவி, ஏசி, வாஷிங் மிஷன் விலைகள் உயரும்
வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் டிவி, பிரிட்ஜ், ஏசி, வாஷிங் மெஷின் போன்ற பொருட்களின் விலை உயரும் நிலை உருவாகி உள்ளது. அதாவது மூலப்பொருட்களின் விலை உயர்வு, விநியோகச் சங்கிலி (Supply Chain) சிக்கல்கள், கப்பல் கட்டணம் அதிகரிப்பு மற்றும் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு போன்ற காரணங்களால் இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.

பான் கார்டு
வரும் ஏப்ரல் 1, 2026 முதல் பான் கார்டுக்கு (PAN Card) விண்ணப்பிக்கும்போதும் ஆதார் கார்டு (Aadhaar) மட்டுமே போதுமானதாக இருக்காது. அதாவது இனிமேல் பிறந்த தேதிக்கான சான்றிதழ் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. அதாவது பிறப்பு சான்றிதழ், 10-ம் வகுப்பு சான்றிதழ், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அட்டை, பாஸ்போர்ட், மாஜிஸ்திரேட் வழங்கிய பிரமாணப் பத்திரம் போன்றவற்றில் ஏதேனும் ஒன்றை பான் கார்டுக்கு விண்ணப்பிக்கும்போதும் பயன்படுத்தலாம்.

ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் 7 புதிய விதிகள்..

அதேபோல் பான் கார்டில் உள்ள பெயர் இனி ஆதார் கார்டில் உள்ளபடியே இருக்கும். மேலும் பழைய விண்ணப்பப் படிவங்கள் வரும் ஏப்ரல் 1-ம் தேதிக்குப் பிறகு செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பான் கார்டு வைத்திருக்கும் மக்களுக்கு சில முக்கிய விதிகள் அமலுக்கு வருகிறது. இது குறித்த தகவல்களையும் இப்போது பார்க்கலாம்.

1. ஆண்டுக்கு ரூ.10 லட்சத்திற்கு மேல் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு பான் எண் வழங்க வேண்டும்.

2. ரூ.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள் வாகனத்தை ஒரு வாங்கினால், அப்போது பான் எண் வழங்க வேண்டியிருக்கும்.

3.ஒருவர் விலையுயர்ந்த ஹோட்டல்களை முன்பதிவு செய்யும்போது பான் எண்ணைக் கொடுக்க வேண்டும்.

4.ரியல் எஸ்டேட்டில் ரூ.20 லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள நிலம் அல்லது வீட்டை வாங்கினாலோ, பரிசாகப்
பெற்றாலோ பான் கார்டு தேவைப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
From FASTag to PAN Card, the first 7 changes that will come into effect from April 1, 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X