ரூ.5,299 க்கு இப்படி ஒரு Phone கிடைக்கும்போது ரூ.8,000 மாடல்கள் எதுக்கு?

|

ஒருவேளை ஐடெல் (Itel) என்பது ஒரு இந்திய மொபைல் பிராண்ட் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருந்தால்.. அதில் தவறு ஒன்றும் இல்லை. ஏனெனில் நம்மில் பலரும் அப்படிதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம்.

ஆனால் உண்மை என்னவென்றால், ஐடெல் மொபைல் என்பது சீனாவின் ஷென்சென் நகரை தலைமையிடமாகக் கொண்ட, ஒரு சீன ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனம் ஆகும்.

பல பட்ஜெட்வாசிகளுக்கு ஐடெல் தான் ஆபத்பாண்டவன்!

பல பட்ஜெட்வாசிகளுக்கு ஐடெல் தான் ஆபத்பாண்டவன்!

நம்மில் பலருக்கும் ரூ.10,000 என்பது தான் ஒரு ஸ்மார்ட்போனை வாங்குவதற்கான 'பேஸிக் பட்ஜெட்' ஆகும். ஆனால் சிலருக்கு ரூ.5.000 - ரூ.6,000 தான் புதிய மொபைல் போனை வாங்குவதற்கான அதிகபட்ச பட்ஜெட் ஆக இருக்கும்.

அப்படியானோர்களுக்கு ஐடெல் தான் ஆபத்பாண்டவன். ஏனெனில் ரூ.6,000 க்குள் வாங்க கிடைக்கும் பெஸ்ட் ஸ்மார்ட்போன்களை தேடினால் நோக்கியா, சாம்சங், ரியல்மி மாடல்களை பின்னுக்கு தள்ளி ஐடெல் மொபைல் போன்கள் தான் முன் வந்து நிற்கும்!

இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!இந்த லிஸ்டில் உள்ள Xiaomi, Redmi, Poco போன் உங்ககிட்ட இருக்கா? ரொம்ப பாவம் நீங்க!

அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ள 5,299 ரூபாய் போன்!

அந்த லிஸ்டில் புதிதாக சேர்ந்துள்ள 5,299 ரூபாய் போன்!

ரூ.10,000 என்பது பட்ஜெட் பிரிவு என்றால்.. ரூ.5,000 என்பதை 'சூப்பர் பட்ஜெட்' பிரிவு என்றே கூறலாம். அப்படியான சூப்பர் பட்ஜெட் விலையின் கீழ், ஐடெல் நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஸ்மார்ட்போனாக Itel A23s இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? எப்போது முதல், எதன் வழியாக வாங்க கிடைக்கும்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.5,500 க்குள் என்கிற பட்ஜெட்டில் இதுக்கு மேல வேற என்ன வேணும்?

ரூ.5,500 க்குள் என்கிற பட்ஜெட்டில் இதுக்கு மேல வேற என்ன வேணும்?

Itel A23s ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஓஎஸ்-ஐ கொண்டு இயங்குகிறது. மேலும் இது யுனிசாக் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. உடன் இந்த மலிவு விலை மொபைல் போனில் 3020mAh பேட்டரி மற்றும் HD+ டிஸ்ப்ளேவும் உள்ளது.

இதன் விலை ரூ.5,500 க்குள் இருப்பதால், மேற்கண்ட அம்சங்களை "மொக்கையான ஸ்பெக்ஸ்" என்று எடுத்துக்கொள்ளவே முடியாது. விலைக்கு ஏற்ற சரியான அம்சங்கள் என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!இவ்ளோ கம்மி விலைக்கு 50MP கேமரா; 6.6-இன்ச் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி-ஆ!

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

எதன் வழியாக வாங்க கிடைக்கும்?

முன்னரே குறிப்பிட்டபடி, ஐடெல் ஏ23எஸ் ஆனது ரூ.5,299 க்கு வாங்க கிடைக்கும். நீங்கள் இந்த ஸ்மார்ட்போனை ஸ்கை சியான், ஸ்கை பிளாக் மற்றும் ஓஷன் ப்ளூ என்கிற 3 கலர் ஆப்ஷன்களின் கீழ் வாங்கலாம்.

விற்பனையை பொறுத்தவரை, ஐடெல் ஏ23எஸ் ஆனது ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் சேனல்கள் என இரண்டின் வெளியாகவும் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் மீது ஐடெல் நிறுவனம் ஒரு சலுகையையும் வழங்குகிறது.

அது ஒன்-டைம் ஸ்க்ரீன் ரீப்ளேஸ்மென்ட் ஆபர் ஆகும். ஆனால் இந்த சலுகையை நீங்கள் ஐடெல் ஏ23எஸ் ஸ்மார்ட்போனை வாங்கிய 100 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.

மிகவும் பழைய டிசைன்; ஆனாலும் கிரேடியன்ட் ஃபினிஷ்!

மிகவும் பழைய டிசைன்; ஆனாலும் கிரேடியன்ட் ஃபினிஷ்!

பத்தாண்டுகளுக்கு முன்பு இருந்த பழைய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை நினைவூட்டும் வகையில், மிகவும் எளிமையான வடிவமைப்பை பெற்று இருந்தாலும் கூட இந்த ஐடெல் ஸ்மார்ட்போன் ஆனது கர்வ்டு எட்ஜ்கள் மற்றும் கிரேடியன்ட் பினிஷ் உடன் வருகிறது.

மேலும் ஸ்மார்ட்போனின் வலது பக்கத்தில் வால்யூம் ராக்கர் மற்றும் பவர் பட்டன் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் "தடிமனான" பெசல்களுடன் (அகலமான நெற்றி மற்றும் கன்னப்பகுதி உடன்) வருகிறது. இது 5-இன்ச் அளவிலான HD+ (480×854 பிக்சல்ஸ்) டிஸ்பிளேவையும் பேக் செய்கிறது.

10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!10 பைசா வாங்காமல் 30 நாட்களுக்கு இலவச சேவை; Airtel அறிவித்துள்ள அதிரடி ஆபர்!

ப்ராசஸர், ஸ்டோரேஜ், பேட்டரி எல்லாம் எப்படி?

ப்ராசஸர், ஸ்டோரேஜ், பேட்டரி எல்லாம் எப்படி?

இந்த ;லேட்டஸ்ட் ஐடெல் ஸ்மார்ட்போன் ஆனது Unisoc SC9832E Quad-Core SoC-ஐக் கொண்டுள்ளது. இது 2GB RAM மற்றும் 32GB அளவிலான இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

சுவாரசியமாக இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கலாம். இது 3,020mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் முன்னரே குறிப்பிட்டபடி இது Android 11 Go எடிஷனின் கீழ் செயல்படுகிறது.

ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள் எப்படி?

ரியர் மற்றும் செல்பீ கேமராக்கள் எப்படி?

கேமராக்களைப் பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போன் LED ஃபிளாஷ் கொண்ட 2MP ரியர் கேமரா சென்சார்-ஐ கொண்டுள்ளது. பின்பக்க கேமராவிற்கு LED ஃபிளாஷ் ஆதரவும் இருக்கிறது.

முன்பக்கத்தை பொறுத்தவரை, இது ஒரு VGA செல்பீ கேமராவை கொண்டுள்ளது. சுவாரசியமாக இது ஸ்மார்ட் ஃபேஸ் அன்லாக் அம்சத்துடன் வருகிறது.

பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!பாவம் POCO ரசிகர்கள்.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி ஏமாறுவாங்களோ?!

வேறு என்னென்ன அம்சங்களை வழங்குகிறது?

வேறு என்னென்ன அம்சங்களை வழங்குகிறது?

டூயல் சிம் ஆதரவு கொண்ட ஐடெல் ஏ23எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 4ஜி, வைஃபை 802.11 பி/ஜி/என், ப்ளூடூத் 4.2, ஜிபிஎஸ் + க்ளோனாஸ் போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் வழங்குகிறது.

கூடுதலாக இந்த ஸ்மார்ட்போனில், நிறுவனத்தின் ஒரு தனித்துவமான சோஷியல் டர்போ செயல்பாடும் அணுக கிடைக்கும். இதன் கீழ் வாட்ஸ்அப் கால் ரெக்கார்டிங், பீக் மோட், கால் அலாரம் மற்றும் ஸ்டேட்டஸ் சேவிங் போன்ற ஆதரவுகள் அணுக கிடைக்கும்.

ரூ.6000 க்குள் வாங்க கிடைக்கும் வேறு சில ஸ்மார்ட்போன்கள் பற்றி?

ரூ.6000 க்குள் வாங்க கிடைக்கும் வேறு சில ஸ்மார்ட்போன்கள் பற்றி?

ஒருவேளை ஐடெல் ஏ23எஸ் ஸ்மார்ட்போனின் அம்சங்கள் உங்களை ஈர்க்கவில்லை என்றால், நீங்கள் லாவா இசட்21, ஜியோனி மேக்ஸ், சாம்சங் கேலக்ஸி M01 கோர் (32GB), சாம்சங் கேலக்சி A2 கோர், சியோமி ரெட்மி 2, லாவா BEU போன்ற மாடல்களை கருத்தில் கொள்ளலாம்.

Photo Courtesy: Itel, Lava

Best Mobiles in India

English summary
Itel A23s New Budget Mobile Phone Under Rs 6000 Launched in India Check Price Full Specifications

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X