GPay, PhonePe, Paytm-ல் பணத்தை மாற்றி அணுப்பிவிட்டீர்களா? இப்படி செஞ்சா ரிட்டர்ன் வந்துடும்.!

|

சமீப காலமாக யூனிஃபைட் பேமென்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payment Interface) என்று கூறப்படும் யுபிஐ (UPI) பரிவர்த்தனை இந்தியாவில் அதிகரித்துக் கொண்டே வருகிறது. UPI ID, மொபைல் எண் அல்லது QR கோட் மூலமாக சுலபமான முறையில் ரோட்டுக்கடை, பெட்டிக்கடை முதல் பெரிய பெரிய வர்த்தக வளாகங்கள் வரை அனைத்திலும் பணம் செலுத்த முடியும்.

தவறான கணக்கிற்குப் பணம் செலுத்திவிட்டால் என்ன செய்வது?

தவறான கணக்கிற்குப் பணம் செலுத்திவிட்டால் என்ன செய்வது?

ஆனால், இந்த முறையில் இருக்கும் ஒரு பெரிய ரிஸ்க் என்னவென்றால், தவறான கணக்கிற்குப் பணம் செலுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பது தான்.! அப்படி ஒருவேலை நடந்துவிட்டால் என்ன செய்வது? பதட்டப்படாமல், சரியான வழிமுறைகளைப் பின்பற்றினால் பணத்தைத் திரும்பப் பெறலாம் என்று RBI மக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.

இப்படி நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.! கவனம் மக்களே.!

இப்படி நடப்பதற்கு அதிக வாய்ப்புள்ளது.! கவனம் மக்களே.!

கூகுள் பே (Google Pay), போன் பே (Phone Pe), பேடிஎம் (Paytm) மாதிரியான செயலிகளைப் பயன்படுத்தும் பொழுது கவனக்குறைவினால் தவறான தொலைப்பேசி எண்ணைச் செலுத்துவதினாலோ, தவறான க்யூ-ஆர் கோடை (QR Code) ஸ்கேன் செய்வதினாலோ நீங்கள் அனுப்ப நினைக்கும் நபரைத் தவிர்த்து வேறு ஒருவருக்குப் பணம் அனுப்ப வாய்ப்புகள் அதிகம்.

உங்களை Mobile-ல் விளம்பரங்கள் தொல்லை செய்கிறதா? அப்போ இதை செய்யுங்க.! இனி No Ads.!உங்களை Mobile-ல் விளம்பரங்கள் தொல்லை செய்கிறதா? அப்போ இதை செய்யுங்க.! இனி No Ads.!

தவறாக அனுப்பிய பணத்தை எப்படி மீண்டும் பெறுவது?

தவறாக அனுப்பிய பணத்தை எப்படி மீண்டும் பெறுவது?

அப்படி தவறான எண்ணிற்குப் பணத்தை அனுப்பிவிட்டால் முதல் வேலையாக நீங்க எந்த செயலியைப் பயன்படுத்தி பணம் அனுப்பினீர்களோ அந்த செயலியின் கஸ்டமர் கேரை (Customer Care) அழைத்து விபரத்தை உடனே சொல்ல வேண்டும்.

இதை கூகிளில் தேடக் கூடாது. சம்பவம் நடந்த உடன் அவர்களை அழைத்து புகார் கொடுத்தால் உங்களுக்குப் பணத்தை திருப்பி கொடுக்க தேவையான நடவடிக்கைகளை அவர்கள் உடனே எடுக்க முடியும்.

உடனே இந்த பக்கத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.!

உடனே இந்த பக்கத்திற்கு சென்று புகார் அளிக்க வேண்டும்.!

பணத்தை மாற்றி அனுப்பிய நபர் இந்தியத் தேசிய பணம் செலுத்தும் கழகம் (National Payments Corporation of India) மூலமும் புகார் அளிக்கலாம்.

இதற்கு முதலில் https://www.npci.org.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று டிஸ்ப்யூட் ரெட்ரெஸல் மெக்கானிசம் (Dispute Redressal Mechanism) என்பதை தேர்வு செய்து அதில் உள்ள புகார் பிரிவில் இருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தை நிரப்ப வேண்டும்.

Amazon Prime-அ இப்படி கம்மி காசுக்கும் கூட வாங்கலாமா? இந்த சமாச்சாரம் தெரியாம போச்சே.!Amazon Prime-அ இப்படி கம்மி காசுக்கும் கூட வாங்கலாமா? இந்த சமாச்சாரம் தெரியாம போச்சே.!

தவறுதலாக பணம் அனுப்பிய யூபிஐ ID முக்கியம் பாஸ்.!

தவறுதலாக பணம் அனுப்பிய யூபிஐ ID முக்கியம் பாஸ்.!

அந்த விண்ணப்பத்தில் நீங்கள் தவறுதலாக அனுப்பிய யூபிஐ பரிவர்த்தனையின் ஐடி (UPI Transaction ID), உங்கள் விர்ச்சுவல் பேமென்ட் அட்ரஸ் (Virtual Payment Address), நீங்கள் தவறாகச் செலுத்திய பணத்தைப் பரிவர்த்தனை செய்த தேதி, மின்னஞ்சல் முகவரி (email) மற்றும் தொலைப்பேசி எண் ஆகிய தகவல்களை நிரப்ப வேண்டும்.

இப்படி செய்தால் பணத்தை திரும்ப பெற முடியும்.!

இப்படி செய்தால் பணத்தை திரும்ப பெற முடியும்.!

மேலும், புகார் அளிக்கும் நபர் உங்கள் வங்கி கணக்கில் இருந்து அந்த பணம் எடுக்கப்பட்டதுக்கான சான்றாக பேங்க் ஸ்டேட்மெண்டையும் (Bank Statement) இணைக்க வேண்டும்.

புகாருக்கான காரணத்தைத் தேர்வு செய்யும் இடத்தில் தவறாக வேறொரு கணக்கிற்கு பணம் அனுப்பப்பட்டுவிட்டது (Incorrectly transferred to another account) என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

இப்படி புகார் அளிப்பதன் மூலம் தவறாக அனுப்பிய பணத்தைச் சட்டத்தின் உதவியுடன் திரும்பப்பெற முடியும்.

இந்த Xiaomi போனுக்காக இன்னும் எவ்வளவு நாள் வெயிட் செய்யணும்? டைமிங் இது தானா?இந்த Xiaomi போனுக்காக இன்னும் எவ்வளவு நாள் வெயிட் செய்யணும்? டைமிங் இது தானா?

இந்த உயர் அதிகாரி பெயரை நினைவில் வச்சுக்கோங்க.!

இந்த உயர் அதிகாரி பெயரை நினைவில் வச்சுக்கோங்க.!

பேமெண்ட் ஆப்ஸ் மூலம் உதவி கிடைக்கத் தவறும் பட்சத்தில் RBI-யின் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான அம்பட்ஸ்மென்-ஐ (Ombudsman for Digital Transactions) தொடர்புகொண்டு புகார் அளிக்கலாம். "அம்பட்ஸ்மென்" என்பது டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தொடர்பான பிரச்சனைகளைக் கையாள RBI நியமித்திருக்கும் ஒரு உயர் அதிகாரி.

மொத்தம் எத்தனை அம்பட்ஸ்மென்கள் உள்ளனர் தெரியுமா?

மொத்தம் எத்தனை அம்பட்ஸ்மென்கள் உள்ளனர் தெரியுமா?

நீங்கள் பயன்படுத்திய UPI செயலி RBI கட்டுப்பாடுகளுக்கு உட்படாமல் ஏதாவது செய்தாலோ, நீங்கள் தவறாகப் பணம் பரிவர்த்தனை செய்துவிட்டாலோ அல்லது நீங்கள் தவறாக பணம் செலுத்திய நபர் பணத்தைத் திருப்புத் தராமல் பிரச்சனை செய்தாலோ இந்த அம்பட்ஸ்மென்னிடம் புகார் எழுப்பலாம். இந்தியாவில் இப்போது வரை 21 அம்பட்ஸ்மென்கள் உள்ளனர்.

6G சேவைக்கு மனித உடலில் இருந்து பவர் எடுக்குறீங்களா? ஷாக்கிங் தகவலை சொன்ன விஞ்ஞானிகள்.!6G சேவைக்கு மனித உடலில் இருந்து பவர் எடுக்குறீங்களா? ஷாக்கிங் தகவலை சொன்ன விஞ்ஞானிகள்.!

அம்பட்ஸ்மென்களுக்கான அலுவலகம் தமிழ்நாட்டில் எங்கிருக்கிறது?

அம்பட்ஸ்மென்களுக்கான அலுவலகம் தமிழ்நாட்டில் எங்கிருக்கிறது?

ஒவ்வொரு மாநிலத்தினுடைய தலைநகரங்களிலும் அம்பட்ஸ்மென்களுக்கான அலுவலகம் இருக்கும்.

இந்தத் திட்டத்தின் Annex 1-ல் அம்பட்ஸ்மென் அலுவலகங்களின் முகவரியும் தொடர்பு எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கும்.

உங்களது புகாரை வெள்ளைதாளில் எழுதி அனுப்பலாம் அல்லது email செய்யலாம்.தமிழ்நாட்டிற்கான அம்பட்ஸ்மென் அலுவலகம் அதன் தலைநகரான சென்னையில் உள்ளது.

இனி கவலை வேண்டாம்.. பணத்தை திருப்ப பெறலாம்.!

இனி கவலை வேண்டாம்.. பணத்தை திருப்ப பெறலாம்.!

அதன் முகவரி, Dr. Balu K C/o Reserve Bank of India Fort Glacis, Chennai 600 001 STD Code: 044 Tel No. 25395964 Fax No. 25395488. இதே போல இந்தியாவில் இருக்கும் அனைத்து அம்பட்ஸ்மென்களின் முகவரி மற்றும் தொடர்பு எண் அந்த Annex 1-ல் இருக்கும். தேவைப்படுவோர் அதனைப் பயன்படுத்திப் பயனடையலாம். சூப்பர்ல.!

Best Mobiles in India

English summary
How to get back wrongly sent money from Gpay Phonepe Paytm mobile apps

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X