ஓஎல்இடி டிஸ்பிளே, டூயல் 16எம்பி கேம் : அடுத்த ரெட்மீ புயல் ரெடி.!

|

சியோமி என்ற ஒரு சீன பெருநிறுவனத்தின் சூப்பர்ஹிட் ஸ்மார்ட்போன்களான ரெட்மீ வரிசை கருவிகளானது இந்திய சந்தையிலும் அதன் ஆதிக்கத்தை நிகழ்த்த தவறவில்லை என்றே கூறலாம். பல விமர்சனங்களை சந்திக்கும் ரெட்மீ கருவிகள் மறுபக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கவும் தவறவில்லை.

அதற்கு காரணமாக அதன் பட்ஜெட் விலையிலான ஹை-எண்ட் அம்சங்கள் தான் காரணம். அப்படியாக, சியோமி மேலும் அதன் ஆதிக்கத்தை நீட்டிக்கும் பொருட்டு ரெட்மி ப்ரோ கருவியின் அப்கிரேட்டட் ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும், அதன் அம்சங்கள் சார்ந்த முழு விபரங்களும் சீனாவின் மி.காம் வலைத்தளத்தில் வெளியிடபட்டுள்ளதாகவும் அறிக்கையொன்று தெரிவிக்கிறது.

ஸ்க்ரீன்ஷார்ட்

ஸ்க்ரீன்ஷார்ட்

வெளியான சியோமி ரெட்மீ ப்ரோ 2 கருவி சார்ந்த தகவல்கள் சீனாவின் மி.காம் வலைத்தளத்தில் விரிவாக பட்டியலிடப்பட்டு பின்பு அகற்றப்பபட்டுள்ளது. இருப்பினும் ஸ்க்ரீன்ஷார்ட் செய்யப்பட்ட தகவல்கள் வரவிருக்கும் புதிய ரெட்மீ சாதனத்தின் விவரக்குறிப்புகள் மற்றும் விலையை வெளிப்படுத்துகிறது.

கேமரா

கேமரா

வெளியான தகவலின்படி ரெட்மி ப்ரோ 2 ஆனது முன்னோடியான ரெட்மீ ப்ரோ கருவியுடன் ஒப்பிடும் போது ஒரு இரட்டை பின்புற கேமரா அமைப்பை பதிவு செய்கிறது. மேலும் ரெட்மீ ப்ரோவின் 13எம்பி கேமராவுடன் ஒப்பிடுகையில், ரெட்மீ ப்ரோ 2 பிக்சல் அளவு 16எம்பி கேமராவாக மேம்படுத்தப்படும்.

இந்திய மதிப்பில்

இந்திய மதிப்பில்

மேலும், சியோமி ரெட்மீ ப்ரோ 2 ஆனது ஒரு 5.5 அங்குல ஓல்இடி காட்சி மற்றும் ஸ்னாப்டிராகன் 660 செயலி கொண்டு இயக்கப்படுகிறது. விலை நிர்ணயம் என்று பார்க்கும்போது இதை ஸ்மார்ட்போன் 1199 யுவானுக்கு பட்டியலிடப்பட்டது, அதாவது, இந்திய மதிப்பில் சுமார் ரூ.11,000/- ஆகும்.

தேதி

தேதி

ரெட்மி ப்ரோ 2 கருவி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று அறியப்படுகிறதே தவிர சரியான தேதி அறியப்படவில்லை. சியோமியின் ரெட்மீ ப்ரோ ஆனது இந்திய சந்தையை எட்டவில்லை என்பதால் ரெட்மீ ப்ரோ 2 இந்தியாவில் அறிமுகமாகும் என்பதை நிச்சயமாக சொல்ல முடியாது.

மூன்று வகை

மூன்று வகை

சியோமி ரெட்மீ ப்ரோ கடந்த ஆண்டு சீனாவில் தொடங்கப்பட்டது. இது 5.5 அங்குல ஓல்இடி (1080பி) டிஸ்ப்ளே கொண்டு மூன்று வகைகளில் வந்தது. நுழைவு நிலை மாறுபாடு ஒரு மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்20 செயலி, 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு கொண்டிருந்தது. மற்ற மாறுபாடுகள் ஒரு மீடியா டெக் ஹெலியோ எக்ஸ்25 செயலி, 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அல்லது 128 ஜிபி உள் சேமிப்புடன் வந்தன.

சியோமி மி மேக்ஸ் 2

சியோமி மி மேக்ஸ் 2

இதற்கிடையில், சியோமி சீனாவின் பெய்ஜிங்கில், மே 25 அன்று மி மேக்ஸ் 2 கருவியை தொடங்க தயாராக உள்ளது என்றும் அறியப்படுகிறது. குறிப்புகள் அடிப்படையில், சியோமி மி மேக்ஸ் 2 ஆனது ஒரு 6.4 அங்குல முழு எச்டி தீர்மானம் டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 626 செயலி, 4ஜிபி ரேம் மற்றும் ஒரு பாரிய 5000எம்ஏஎச் பேட்டரி ஆகிய அம்சங்கள் கொண்டிருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Pro with OLED display, dual 16MP rear camera. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X