எது வேணுமோ அள்ளு.. ஒரே நேரத்தில் 9 Motorola போன்கள் மீது ஆபர்.. Flipkart Moto Days-ல் ஆர்டர் அள்ளுது!
மோட்டோரோலா நிறுவனத்தின் லேட்டஸ்ட் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஆக மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமான வேகத்தில், முன்னதாக வெளியான மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ மாடல் மீது தான் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்று எங்களை போலவே நீங்களும் எதிர்பார்த்து இருந்தால்.. உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்!
பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது, மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ மாடலுடன் சேர்த்து மேலும் பலமோட்டோரோலா ஸ்மார்ட்போன்களின் மீதான தள்ளுபடி விற்பனையை உள்ளடக்கிய மோட்டோ டேஸ் (Moto Days) என்கிற சிறப்பு விற்பனையை அறிவித்துள்ளது. மோட்டோரோலா ஸ்மார்ட்போன்கள் மீது பிளிப்கார்ட் பகிர்ந்துள்ள ஆபர் (பேங்க் டிஸ்கவுண்ட் உட்பட) விலைகள் இதோ:

மோட்டோ ஜி57 பவர் (Moto G57 Power) - ரூ.15,999 முதல்
மோட்டோரோலா எட்ஜ் 60 பியூஷன் (Motorola Edge 60 Fusion) - ரூ.22,999 முதல்
மோட்டோ ஜி96 (Moto G96) - ரூ.18,999 முதல்
மோட்டோரோலா எட்ஜ் 70 பியூஷன் (Motorola Edge 70 Fusion) - ரூ.24,999 முதல்
மோட்டோரோலா எட்ஜ் 60 ப்ரோ (Motorola Edge 60 Pro (256GB) ரூ.28,999 முதல்
மோட்டோ ஜி67 பவர் (Moto G67 Power) -ரூ.16,499 முதல்
மோட்டோ ஜி35 (Moto G35) - ரூ.12,499 முதல்
மோட்டோரோலா எட்ஜ் 70 (Motorola Edge 70) - ரூ.28,999 முதல்
மோட்டோ சிக்னேச்சர் (Moto signature) - ரூ.52,499 முதல்
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.8-இன்ச் சூப்பர் எச்டி (1,272x2,772 பிக்சல்ஸ்) எக்ஸ்ட்ரீம் AMOLED 10-பிட் டிஸ்பிளே
- குறிப்பிட்ட ஆப்களில் 144Hz வரையிலான ரெஃப்ரெஷ் ரேட்
- 5,200 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 360Hz டச் சாம்பிளிங் ரேட்
- 96.8 சதவீத ஸ்கிரீன்-டு-பாடி ரேஷியோ
- 450ppi பிக்சல் டென்சிட்டி
- 100 சதவீத DCI-P3 கலர் கேமட்
- HDR10+ ஆதரவு
- SGS ப்ளூ லைட் ரிடக்ஷன் மற்றும் SGS மோஷன் ப்ளர் ரிடக்ஷன் சான்றிதழ்கள்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP68+IP69 ரேட்டிங்
- MIL-STD 810H நீடித்துழைப்பு சான்றிதழ்
- ஆக்டா கோர் மீடியாடெக் டைமென்சிட்டி 8500 எக்ஸ்ட்ரீம் சிப்செட்
- 12ஜிபி வரையிலான LPDDR5x ரேம் மற்றும் 256ஜிபி UFS 4.1 இன்டர்னல் ஸ்டோரேஜ்
- பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன் ஸ்க்ரீன் பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- சோனி LYT-710 சென்சார் மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) கொண்ட 50-மெகாபிக்சல் (f/1.8) ப்ரைமரி கேமரா
- 122-டிகிரி [பீல்ட் ஆப் வியூ மற்றும் ஆட்டோஃபோகஸ் கொண்ட 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா
- குறிப்பிடப்படாத மூன்றாவது சென்சார்
- ஆட்டோஃபோகஸ் உடனான 50-மெகாபிக்சல் (f/1.9) செல்பீ கேமரா
- 4K/60 fps வரை வீடியோக்களை பதிவு செய்யும் திறன்
- 6,500mAh பேட்டரி
- 90W வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவு
புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ விலை விவரங்கள்: இந்தியாவில் மோட்டோரோலா எட்ஜ் 70 ப்ரோ ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.38,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.41,999 என்கிற விலை நிர்ணயத்தை பெற்றுள்ளது.
ஆக்சிஸ் வங்கி மற்றும் எச்டிஎஃப்சி பேங்க் கார்டுகளுடன், மோட்டோரோலா நிறுவனம் ரூ.2,000 வரை உடனடி வங்கி தள்ளுபடியை வழங்குகிறது. மாற்றாக, வாடிக்கையாளர்கள் ரூ.2,000 வரையிலான எக்ஸ்சேஞ்ச் போனஸை தேர்வு செய்யலாம். மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய ஸ்மார்ட்போன் வருகிற ஏப்ரல் 29 ஆம் தேதி அன்று இந்தியாவில் விற்பனைக்கு வரும்.


Click it and Unblock the Notifications








