என்ன குருநாதா புது சிப்செட் வச்சு 4ஜி போனை அனுப்புனா நாங்க வாங்கிருவோமா? 5ஜி போனை அனுப்புங்க.!

|

ஜியோ நிறுவனம் தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் 5ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளதால் விரைவில் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து 5ஜி போனை இந்தியாவில் அறிமுகம் செய்யத் திட்டமிட்டுள்ளது.

கூகுள்

கூகுள்

குறிப்பாக கூகுள் நிறுவனத்துடன் இணைந்து ஜியோ நிறுவனம் 5ஜி போனை அறிமுகம செய்யும் என்பதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஆனாலும் இந்நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த ஜியோபோன் 4ஜி மாடலுக்கு அவ்வளவு வரவேற்பு இல்லை என்றுதான் கூறவேண்டும்.

JioPhone Next போன்

JioPhone Next போன்

அதாவது ஜியோ நிறுவனம் ஏற்கனவே அறிமுகம் செய்த JioPhone Next ஆனது Qualcomm Snapdragon 215சிப்செட் உடன் வெளிவந்தது. மேலும் இது 2GB ரேம் மற்றும் 32GB ஸ்டோரேஜ், 3500 எம்ஏஎச் பேட்டரி, 13எம்பி ரியர் கேமரா, 8எம்பி செல்பி கேமரா 5.4-இன்ச் டிஸ்பிளே உள்ளிட்ட அம்சங்களுடன் அறிமுகமானது.

 புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி போன்

புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி போன்

இந்நலையில் ஜியோ நிறுவனம் மீண்டும் புதிய சிப்செட் வசதியுடன் 4ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. அதாவது கீக்பெஞ்ச் தளத்தில் வெளிவந்த தகவலின்படி, ஜியோ நிறுவனம் Unisoc SC9863A சிப்செட் வசதியுடன் ஒரு 4ஜி போனை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த போனின் மாடல் எண் LS1602UWAB என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Realme 10 Pro Plus Review: டிஸ்பிளேவை லேசா வளைச்சி விட்டதுக்கு இவ்ளோ சீன்-ஆ? நம்பி வாங்கலாமா? வேண்டாமா?Realme 10 Pro Plus Review: டிஸ்பிளேவை லேசா வளைச்சி விட்டதுக்கு இவ்ளோ சீன்-ஆ? நம்பி வாங்கலாமா? வேண்டாமா?

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்

ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம்

அதேபோல் இந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள புதிய 4ஜி போனில் 2ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த போனின் சில அம்சங்கள் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து அம்சங்களும் தெரியவரும். குறிப்பாக ஜியோவின் புதிய 4ஜி போன் குறைந்த விலையில் அறிமுகமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5ஜி ஸ்மார்ட்போன்

5ஜி ஸ்மார்ட்போன்

மேலும் இந்நிறுவனம் அடுத்த ஆண்டு துவக்கத்தில் 5ஜி ஸ்மார்ட்போன் மாடலையும் அறிமுகம் செய்ய உள்ளது. அண்மையில் இதன் அம்சங்கள் ஆன்லைனில் கசிந்துள்ளது. இப்போது ஆன்லைனில் கசிந்த ஜியோபோன் 5ஜி மாடலின் அம்சங்களைப் பார்ப்போம்.

ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்

ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட்

ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 480 பிளஸ் சிப்செட் வசதியுடன் வெளிவரும். பின்பு Adreno 619 GPU ஆதரவையும் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஜியோபோன் 5ஜி.

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்

ஜியோபோன் 5ஜி மாடல் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வசதியுடன் அறிமுகமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளம், 64ஜிபி ஸ்டோரேஜ் வசதி மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய போன் அறிமுகமாகும்.

5000 எம்ஏஎச் பேட்டரி

5000 எம்ஏஎச் பேட்டரி

ஜியோபோன் 5ஜி மாடலில் 5000 எம்ஏஎச் பேட்டரி வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஜியோபோன் 5ஜி ஆனது 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவுடன் இந்த போன் அறிமுகமாகும். இந்த புதிய 5ஜி போன் ரூ.12,000-விலையில் அறிமுகமாகும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 புதிய சிப்செட் வசதி

புதிய சிப்செட் வசதி

அதேபோல் ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள 5ஜி போனுக்கு நல்ல வரவேற்பு இருக்கும். ஆனால் இந்நிறுவனம் புதிய சிப்செட் வசதியுடன் அறிமுகம் செய்ய உள்ள 4ஜி போனுக்கு அவ்வளவு வரவேற்பு இருக்காது என்றே கூறலாம்.

Best Mobiles in India

English summary
Jio to launch new 4G phone with Android 12 OS, Unisoc chipset soon: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X