ஹானர் 7எக்ஸ் மீது அதிரடி விலைகுறைப்பு; இந்தியர்கள் குஷி.!

அந்த அடியை இன்னும் பலமாக கொடுக்கும் முனைப்பின் கீழ் ஹானர் 7 எக்ஸ் ஸ்மார்ட்போனின் மீதான விலைக்குறைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

|

சியோமியின் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம், ஹூவாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான ஹானர் இந்தியாவில் அதன் ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனை, ரூ.12,999/- என்கிற ஒரு நம்பமுடியாத விலைப்புள்ளியின் கீழ் அறிமுகம் செய்தது.

நிறுவனத்தின் ஹைஎண்ட் சாதனமான ஹானர் 7எக்ஸ் வெறும் ரூ.13கே பட்ஜெட்டில் கிடைத்ததால், எதிர்பார்த்தபடியே சியோமியின் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களுக்கு ஆதி விழுந்தது. அந்த அடியை இன்னும் பலமாக கொடுக்கும் முனைப்பின் கீழ் ஹானர் 7 எக்ஸ் ஸ்மார்ட்போனின் மீதான விலைக்குறைப்பு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.!

விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.!

இந்தியாவில் ஹானர் 7எக்ஸ் மீது நிரந்தரமான ரூ.1000/- விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புடன் சேர்த்து ஹானர் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ அப்டேட்டையும் உறுதிப்படுத்தியுள்ளது. ஆகமொத்தம் ரூ.12,999/-க்கு கிடைத்த ஹானர் 7எக்ஸ் -ன் அடிப்படை மாறுபாடு (4ஜிபி ரேம் + 32 ஜிபி) ஆனது ரூ.11,999/-க்கும், பிரீமியம் மாறுபாடு (4ஜிபி ரேம் + 64 ஜிபி) ஆனது ரூ.15,999-க்கு பதிலாக ரூ.14,999/-க்கும் வாங்க கிடைக்கிறது.

ஒரு கம்பீரமான மற்றும் பிரீமியம் தோற்றத்தை உறுதி செய்கிறது.!

ஒரு கம்பீரமான மற்றும் பிரீமியம் தோற்றத்தை உறுதி செய்கிறது.!

ஹானர் 7எக்ஸ் ஆனது ஒரு விரிவான 18: 9 காட்சி விகிதத்தின் கீழ் பெஸல்லெஸ் வடிவமைப்பை பெற்றுள்ளது. அதாவது ஹானர் 9ஐ மற்றும் ஹானர் 8 ப்ரோ ஸ்மார்ட்போன்களை போன்றே பெஸல்லெஸ் வடிவமைப்பையும், ஒரு மேட் பின்பக்கம் மற்றும் உலோக உடலமைப்பையும் கொண்டுள்ளது. இவைகள் எல்லாம் சேர்ந்து ஒரு கம்பீரமான மற்றும் பிரீமியம் தோற்றத்தை உறுதி செய்கிறது.

பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கான கைரேகை சென்சார்.!

பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கான கைரேகை சென்சார்.!

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் முன்பக்க உடலில் எந்த பொத்தான்களும் இல்லை, அனைத்தும் மெய்நிகர் விசைகள் தான். நோட்டிபிகேஷன்களை ஸ்லைட் செய்வது உட்பட பல வேலைகளை குறைப்பதற்கான மற்றும் பல்வேறு வகையான செயல்பாடுகளுக்கு பயன்படுத்தக்கூடிய ஒரு கைரேகை சென்சாரும் இக்கருவியை இடம்பெற்றுள்ளது. உடன் சமீபத்தில் பேஸ் அன்லாக் அம்சமும் இணைக்கப்பட்டது.

எட்ஜ்-டூ-எட்ஜ்ம்பி டிஸ்பிளே.!

எட்ஜ்-டூ-எட்ஜ்ம்பி டிஸ்பிளே.!

ஹானர் 7எக்ஸ் ஆனது 2160x1080 (முழு எச்டி ப்ளஸ் ) என்கிற தீர்மானம் கொண்ட மற்றும் 18: 9 என்கிற விகிதத்திலான 5.9 அங்குல டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இதன் குறைந்த முன்பக்க பெஸல்கள் ஒரு வழக்கமான 5.5 இன்ச் டிஸ்பிளேவை, 5.9 இன்ச் டிஸ்ப்ளேவாக வடிவ மாற்றம் செய்துள்ளது.

கேமிங் மற்றும் மல்டிமீடியா பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.!

கேமிங் மற்றும் மல்டிமீடியா பிரியர்களுக்கு வரப்பிரசாதம்.!

பிராகாசமான, துல்லியமான மற்றும் பிரீமியமான உணர்வை அளிக்கும் வண்ணம் இதன் டிஸ்பிளே 2.5டி கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருக்கும். இதன் 18: 9 என்கிற விகிதம் கேமிங் மற்றும் மல்டிமீடியா பிரியர்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும். இக்கருவியின் மேல் மற்றும் கீழ் பெஸல்களானது எல்ஜி ஜி6 அல்லது கேலக்ஸி எஸ்8 போன்ற ஸ்மார்ட்போன்களில் காணப்படும் அளவிற்கு சிறியதாக இல்லை என்றாலும் கூட இந்த அளவிலான மலிவு விலையில் கிடைக்கும் சிறந்த கருவியாக ஹானர் 7எக்ஸ் திகழும்.

இதர அம்சங்கள் மற்றும் மென்பொருள்.!

இதர அம்சங்கள் மற்றும் மென்பொருள்.!

ஹானர் 7எக்ஸ் அதன் விலையை மீறிய மிகவும் சக்தி வாய்ந்த அம்சங்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஹூவாய் நிறுவனத்தின் சொந்த ஹைசிலிகான் கிரின் 659 சிப்செட் உடனான 4ஜிபி ரேம் கொண்டு இயங்குகிறது. மற்றும் நிறுவனத்தின் கூற்றுப்படி 12 மணி நேர வீடியோ பின்னணி மற்றும் 91 மணி இசை பின்னணியை வழங்கும் ஒரு 3340எம்ஏஎச் பேட்டரி கொண்டு இயக்கப்படுகிறது.

32ஜிபி அல்லது 64ஜிபி என்கிற உள்ளடக்க சேமிப்பு.!

32ஜிபி அல்லது 64ஜிபி என்கிற உள்ளடக்க சேமிப்பு.!

மேலும் மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக 256ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவுடன் 32ஜிபி அல்லது 64ஜிபி என்கிற உள்ளடக்க சேமிப்பு கொண்டுள்ளது. மென்பொருளைப் பொறுத்தவரை, ஹானர் 7எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு 7.0 நௌவ்கட் அடிப்படையிலான நிறுவனத்தின் தனிபயன் கஸ்டம் இஎம்யூஐ 5.1 கொண்டு இயங்குகிறது. வரும் அப்டேட்டில் ஓரியோ கிடைக்கப்பெறும். இணைப்பு ஆதரவுகள் ஹானர் 7எக்ஸ் ஆனது 4ஜி வோல்ட், டூயல்-பேண்ட் வைஃபை, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், மற்றும் க்ளோநாஸ் ஆகியவற்றை ஆதரிக்கிறது. டைப் சி யூஎஸ்பி-க்குப் பதிலாக சார்ஜ் செய்ய மற்றும் தரவு பரிமாற்றத்திற்கான ஒரு மைக்ரோ யூஎஸ்பி போர்ட் இருப்பது ஒரு பின்னடைவாகும்.

இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி.!

இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி.!

இன்றைய ஸ்மார்ட்போன்களில் அகற்றப்படும் ஒரு அம்சமான 3.5மிமீ ஹெட்ஜாக், இக்கருவியில்ரு இடம்பெற்றுள்ளதென்பதில் இசைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி. மற்றொரு ஏமாற்றமாக இக்கருவி ஒரு கலப்பு சிம் ஸ்லாட் கொண்டு வருகிறது. இதன் அர்த்தம் நீங்கள் இரண்டு சிம் கார்டுகளைப் பயன்படுத்தும்போது, உள் சேமிப்புகளை விரிவாக்கும் நோக்கத்திலான மைக்ரோஎஸ்டி அட்டையை பயன்படுத்த முடியாது.

இரட்டை கேமராக்கள்.!

இரட்டை கேமராக்கள்.!

ஹானர் 6எக்ஸ் போன்றே, ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஒரு இரட்டை கேமரா அமைப்பை கொண்டு வருகிறது, இது போக்கே விளைவுகளை கைப்பற்றஅனுமதிக்கிறது என்பது கூடுதல் சிறப்பு. பின்பக்கம் ஒரு முதன்மை 16எம்பி சென்சார் உள்ளது உடன், ஆழமான காட்சிகளை கைப்பற்றும் நோக்கம் கொண்ட ஒரு 2எம்பி இரண்டாம்நிலை சென்சார் கொண்டுள்ளது. முன்பக்கம், ஒரு 8எம்பி சென்சார் வருகிறது. இதுவொரு ஒற்றை முன்பக்க சென்சார் கொண்டுள்ள போதிலும், மென்பொருள் வழிமுறைகள் மூலம் உற்பத்தி செய்யப்படுவதால் பின்பக்கத்தினை போலவே செல்பீ கேமராவும் பொக்கே விளைவு காட்சிகளை ஏற்படுத்தும். இதன் கேமரா பயன்பாடானது,பில்டர்ஸ், டைம் லேப்ஸ், லைட் பெயிண்டிங், ஸ்லோ மோஷன் வீடியோ கேப்ச்சர் மற்றும் பனோரமா போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் ஆர்வமுள்ளவர்கள் ஐஎஸ்ஓ, எக்ஸ்போஷர், ஷட்டர் ஸ்பீட் மற்றும் பலவற்றில் விளையாட அனுமதிக்கக்கூடிய முழுமையான ப்ரோ பயன்முறையும் உள்ளது.

Best Mobiles in India

English summary
Honor, Honor 7X, Receives Cut in India, Specs, Smartphone, Technology, News, India, ஹானர், அம்சங்கள், ஸ்மார்ட்போன், தொழில்நுட்பம், செய்திகள்

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X