2017-ல் வெளியான டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: உங்களிடம் இருக்கிறதா.?

|

2018-ஆம் ஆண்டை கலக்கப்போகும் ஸ்மார்ட்போன்கள் ஒருபக்கம் இருக்கட்டும். 2017-ஆம் ஆண்டு முடிவடையும் தருணத்தில் நம் மனதில் நிற்கும் மற்றும் நம் கைகளில் தவழும் ஸ்மார்ட்போன்கள் பல. அவைகளில் பட்ஜெட் விலை நிர்ணயத்தில் களமிறங்கிய ஸ்மார்ட்போன்களை பற்றிய ஒரு பார்வையே இக்கட்டுரை.

2017-ல் வெளியான டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: உங்களிடம் இருக்கிறதா.?2017-ல் வெளியான டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: உங்களிடம் இருக்கிறதா.?

2017-ஆம் ஆண்டில் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து பல வகையான பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் வெளியாகினாலும் கூட அனைத்துமே வெற்றியை தன்பக்கம் இழுத்துக்கொள்ளவில்லை.

 ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.! ஒரு சின்ன கேள்வி, சரியாக பதில் சொன்னால் - ஹானர் 7எக்ஸ் இலவசம்.!

2017-ல் வெளியான டாப் 5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்: உங்களிடம் இருக்கிறதா.?

ஆனால் இங்கே தொகுக்கப்பட்டுள்ள 5 ஸ்மார்ட்போன்கள் பெருவாரியான மக்களின் மனதை கவர்ந்து விற்பனையில் சக்கை போடு போடுகிறது. அதெப்படி.? ஏனெனில் இவைகள் இரட்டை பின்புற கேமராக்கள் அல்லது புதிய 18: 9 திரை விகிதம் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் பட்ஜெட் பிரிவில் புகுத்தினார்கள்.

சியோமி  மி ஏ1

சியோமி மி ஏ1

இது சியோமி நிறுவனத்தின் முதல் ஆண்ட்ராய்ட் ஒன் ஸ்மார்ட்போன் ஆகும், இது கூகுள் உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் சமீபத்தில் விலைக் குறைப்பைப் பெற்றதென்பதும் இப்போது ரூ.13,999/- க்கு கிடைக்கிறதென்பதும் குறிப்பிடத்தக்கது. இதன் முழுமையான அம்சங்களை அறிய இந்த இணைப்பை சொடுக்கவும்.

மோட்டோ ஜி 5 பிளஸ்

மோட்டோ ஜி 5 பிளஸ்

மோட்டோரோலா மோட்டோ ஜி தொடரின்கீழ் வெளியான மோட்டோ ஜி 5 பிளஸ் ஆகிய கருவி மிகவும் பிரபலமான ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். சில நல்ல வன்பொருள் சேர்ந்து ஒரு உலோக யூனிபாடி வடிவமைப்பு ஏற்றப்பட்ட இக்கருவி அதன் போட்டியாளர்களுக்கு கடினமான போட்டியை கொடுக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இரண்டு வகைகளில் வருகிறது - 3 ஜிபி ரேம் + 16 ஜிபி சேமிப்பு சேமிப்பு மற்றும் 4 ஜிபி ரேம் + 32 ஜிபி சேமிப்பு முறையே ரூ.13,999/-க்கும் மற்றும் ரூ.16,999/-க்கும் வாங்க கிடைக்கிறது. இதன் முழுமையான அம்சங்களை அறிய இந்த இணைப்பை சொடுக்கவும்.

ஹானர் 7 எக்ஸ்

ஹானர் 7 எக்ஸ்

இந்த ஆண்டில் மிட்-ரேன்ஜ் பட்ஜெட்டில் ஒரு டூயல் கேம் புரட்சியை ஏற்படுத்திய கருவி என்றால் அது ஹானர் 7எக்ஸ் தான். ஹூவாய் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன ஹானர் விலையை மீறிய புதிய தொழில்நுட்பங்களை பட்ஜெட்டின் கீழ் கொடுக்கும் ஒரு சாதனம் தான் ஹானர் 7எக்ஸ். பிரீமியம் பிரிவில் மட்டுமே வரையறுக்கப்பட்ட இரட்டை-கேமரா அமைப்பை பட்ஜெட் பிரிவின்கீழ் வழங்குகிறது. இதன் முழுமையான அம்சங்களை அறிய இந்த இணைப்பை சொடுக்கவும்.

லெனோவா கே8 பிளஸ்

லெனோவா கே8 பிளஸ்

ஒருகையில் லெனோவா அதன் ஸ்மார்ட்போன் அறிமுகங்களை குறைத்துக்கொள்ள மறுகையில் மோட்டோரோலா மிகவும் பிஸியாக புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்படுவதை சிலர் உணரலாம். இருப்பினும் ஒரு நீண்ட இடைவெளி கழித்து வெளியான லெனோவா கே8 பிளஸ், வெற்றியை தன்பக்கம் இழுக்க தவறவில்லை. இதன் 3 ஜிபி ரேம் மாறுபாடு ரூ.8,999/-க்கும் மற்றும் 4 ஜிபி ரேம் மாறுபாடு ரூ.10,999/-க்கும் வாங்க கிடைக்கும். இதன் முழுமையான அம்சங்களை அறிய இந்த இணைப்பை சொடுக்கவும்.

யு யுரேகா பிளாக்

யு யுரேகா பிளாக்

மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் உப-பிராண்ட் ஆன யு அதன் புதிய யு யுரேகா பிளாக் ஸ்மார்ட்போனை கடந்த ஜூன் மாதம் ரூ.8,999/-க்கு அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் ஒரு அட்டகாசமான கருப்பு பூச்சுடன் முழு உலோக உடல் கொண்டுள்ளது. இந்த கருப்பு வண்ண பூச்சு ஜெட் கருப்பு பதிப்பாய் அளிப்பதால் இதனை ஐபோன் 7 என்றே எண்ண தோன்றுகிறது அந்த அளவிற்கு ஒரு நம்பமுடியாத பிரீமியம் வடிவமைப்பை வழங்குகிறது. இதன் முழுமையான அம்சங்களை அறிய இந்த இணைப்பை சொடுக்கவும்.

Best Mobiles in India

English summary
2017 Device Roundup: Top 5 budget smartphones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X