நேருக்கு நேர்: ஹானர் 7எக்ஸ் VS மோட்டோ ஜி5எஸ் பிளஸ், எது வெல்லும்.?

|

சமீபத்தில் நாங்கள் ஹானர் 7எக்ஸ் மற்றும் நோக்கியா 6 ஆகிய ஸ்மார்ட்போன்களின் விரிவான ஒப்பீடு ஒன்றை வழங்கினோம். இரண்டு சாதனங்களும் மிட்ரேன்ஜ் விலைப்புள்ளியில் கிடைக்கும் பிரபலமான ஆண்ட்ராய்டு கைபேசிகளாகும். இருப்பினும் ஹானர் 7எக்ஸ் ஆனது நோக்கியா 6-ஐ விட சிறப்பான பண மதிப்பு மிக்க சாதனமாக தேர்வானது.

நேருக்கு நேர்: ஹானர் 7எக்ஸ் VS மோட்டோ ஜி5எஸ் பிளஸ், எது வெல்லும்.?

அதனை தொடர்ந்து இன்று மற்றொரு பிரபலமான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆன மோட்டோ ஜி5எஸ் பிளஸ் கருவியுடன் ஹானர் 7எக்ஸ்-ஐ ஒப்பிடவுள்ளோம். மிகவும் மேம்பட்ட மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது, ஹானர் 7 எக்ஸ் போன்றே இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுள்ளது. சரி வாருங்கள், இந்த இரண்டில் எது பண மதிப்புமிக்க ஸ்மார்ட்போனாக, இறுதியில் தேர்வாகிறது என்பதை பார்ப்போம்.

டிசைன் மற்றும் டிஸ்பிளே

டிசைன் மற்றும் டிஸ்பிளே

ஹானர் 7எக்ஸ் மற்றும் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆகிய இரண்டுமே யூனிபாடி உலோக வடிவமைப்பை கொண்டுள்ளன. மேலும் இரண்டுமே நிறுவனங்களின் பிரீமியம் வடிவமைப்பை பெற்ற கருவிகளாகும். எனினும், ஹானர் 7 எக்ஸ் ஆனது ஒட்டுமொத்த தோற்றத்தில் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் கருவியை விட ஒரு படி மேலே செல்கிறது. அதற்கு காரணம் அதன் எட்ஜ்-டூ-எட்ஜ் மற்றும் மெல்லிய வடிவம் தான்.

புதுமையும் பாரம்பரியமும்.!

புதுமையும் பாரம்பரியமும்.!

மேலும் ஹானர் 7 எக்ஸ் ஆனது சிறந்த பிக்சல் அடர்த்தி வழங்கும் 18: 9 விகிதம் கொண்ட முழுஎச்டி+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது வீடியோ பின்னணி, வலை உலாவல் மற்றும் விளையாட்டு ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமானது. ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன்-டூ-பாடி விகிதமானது சிறிய உள்ளடக்கங்களை கூட சிறப்பாக காட்சிப்படுத்தும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. மறுகையில் உள்ள மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது பாரம்பரியம் மிக்க மிகவும் பாதுகாப்பான 16: 9 விகித காட்சி அளவை கொண்டுள்ளது. இருப்பினும் இன்றைய தேதிக்கு இந்த அளவிலான விகிதம் சற்று பழைய அம்சமாகும். தவிர ஹானர் 7 எக்ஸ் கைகளுக்குள் கச்சிதமாக பொருந்தும் மறுபக்கம் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் சற்று பருமனானதாக இருப்பதால், அதை ஒரு கையால் பயன்படுத்த சற்று கடுமையாக உள்ளதென்றே கூறலாம்.

ஹானர் 7எக்ஸ்-ன் மல்டிட்கஸ்கிங்

ஹானர் 7எக்ஸ்-ன் மல்டிட்கஸ்கிங்

இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் ஏராளமான பயன்பாடுகளை ஒரே நேரத்தில் இயக்க போதுமான ரேம்
உள்ளது. ஆனால் நிகழ்நேர பயன்பாடும் என்று வருகிற போது எந்த செயல்திறன் குறைவுமின்றி பல்பணி செய்யும் சாதனமாக ஹானர் 7எக்ஸ் திகழ்கிறது. குறிப்பாக அதன் 18: 9 விகித திரையில் எந்தவிதமான உள்ளடக்கத்தையும் இழக்காமல் பயன்பாடுகளை நீங்கள் இயக்கலாம். மென்மையான 7எக்ஸ் ஆனது ஆண்ட்ராய்டு நோக்கியாவின் ஸ்ப்ளிட் ஸ்க்ரீன் அம்சத்தையும் கொண்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

பேட்டரி மற்றும் நினைவகம்

பேட்டரி மற்றும் நினைவகம்

பேட்டரி மற்றும் நினைவக என்று வரும்போது, ​​மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது ஹானர் 7 எக்ஸ்-ஐ விட சற்று சிறிய சக்தி வாய்ந்த பேட்டரி கொண்டுள்ளது. மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது ஒரு 3000எம்ஏஎச் பேட்டரி கொண்டிருக்க மறுகையில் உள்ள ஹானர் 7 எக்ஸ் ஆனது ஒரு 3,340எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. சேமிப்பு ஆதரவை பொறுத்தமட்டில், இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 64 ஜிபி என்கிற உள் நினைவகத்துடன் வருகின்றன. இருப்பினும், 7எக்ஸ் உள் சேமிப்பு விரிவாக்கம் 256 ஜிபி ஆகும். மறுகையில் உள்ள மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனதின் விரிவாக்கம் 128ஜிபி மட்டுமே ஆகும்.

இரட்டை கேமரா அமைப்பு

இரட்டை கேமரா அமைப்பு

மேற்குறிப்பிட்டபடி இரண்டு கைபேசிகளுமே இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பை கொண்டுள்ளன. ஆனால் செயல்திறன் நிறைய வேறுபடுகிறது. ஹானர் 7 எக்ஸ் ஆனது 16எம்பி + 2எம்பி என்கிற பின்புற கேமரா அமைப்பையும் மறுகையில் உள்ள மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது 13எம்பி + 13எம்பி என்கிற இரட்டை லென்ஸ் கேமரா அமைப்பையும் கொண்டுள்ளது. பொக்கே விளைவுகளை மிக மென்மையாக ஹானர் 7 எக்ஸ் கையாளும் மறுபக்கம் மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஆனது சற்று நேரம் எடுத்துக்கொள்ளகிறது.

5 வது தலைமுறை இரட்டை லென்ஸ் கேமரா

5 வது தலைமுறை இரட்டை லென்ஸ் கேமரா

இந்த விடயத்தில் மோட்டோ ஜி 5 எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனை நாம் குற்றம் சொல்ல முடியாது ஏனெனில் இதுதான் நிறுவனத்தின் முதல் இரு லென்ஸ் கேமரா அமைப்பு கொண்ட சாதனமாகும். மறுபக்கம் உள்ள ஹானர் நிறுவனமானது அதன் 5 வது தலைமுறை இரட்டை லென்ஸ் கேமராவை ஹானர் 7எக்ஸ்-ல் பொதித்துள்ளது. ஒட்டுமொத்தமாக, சந்தேகத்திற்கு இடமின்றி 7எக்ஸ் ஒரு சிறந்த இரட்டை லென்ஸ் கேமரா ஸ்மார்ட்போனாகும்.

விலை நிர்ணயம்

விலை நிர்ணயம்

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் 32 ஜிபி வேரியண்ட் ஆனது ரூ.12,999/-க்கு இந்தியாவில் வாங்க கிடைக்கின்ற மறுகையில் மோட்டோ ஜி5 எஸ் பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.15.999/-க்கு விற்பனையாகிறது.

முடிவு

முடிவு

இரண்டு கருவிகளும் அதற்கே உரிய பணமதிப்பு மிக்க கருவிகளாக திகழ்ந்தாலும் கூட, ஒப்பீடு என்று வரும்போது ஏதாவது ஒன்றுதானே சிறப்பான இடத்தை அடையும். அப்படியாக ஹானர் 7 எக்ஸ் ஆனது உங்கள் பணத்திற்கான சிறந்த அம்சங்களை வழங்குகிறது. இது மோட்டோ ஜி5எஸ் பிளஸ் ஸ்மார்ட்போனை விட மலிவு மற்றும் அதிக அம்சங்கள் ஏற்றப்பட்டுள்ளது. மேலும் குறைவான செலவில் எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே, சிறந்த இரட்டை கேமரா அமைப்பு, பெரிய பேட்டரி மற்றும் நேர்த்தியான எதிர்கால வடிவமைப்பு ஆகியவற்றை அனுபவிக்கலாம்.

Best Mobiles in India

English summary
Honor 7X vs Moto G5S Plus: Battle of the two most popular mid-range Android smartphones. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X