Home
Mobile

விலைக்கும், அம்சங்களுக்கும் சம்பந்தமே இல்லாத ஹானர் 7எக்ஸ்.!

இக்கருவியின் அடிப்படை சேமிப்பு மாதிரியின் விலை நிர்ணயம் வெறும் ரூ.12,999/- என்கிற நிலைப்பாட்டில், இதர இடைப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை பாதிப்படைவதில்லை ஒரு ஆச்சரியமும் இல்லை.

By Muthuraj

ஹூவாய் நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடான ஹானர் 7எக்ஸ், சந்தையில் உள்ள இதர இடைப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனையை கடுமையாக பாதித்துள்ளது.

விலைக்கும், அம்சங்களுக்கும் சம்பந்தமே இல்லாத ஹானர் 7எக்ஸ்.!

எட்ஜ் டூ எட்ஜ் டிஸ்பிளே, மெல்லிய யூனிபாடி வடிவமைப்பு மற்றும் டூயல் கேமரா அமைப்பு கொண்டுள்ள இக்கருவியின் அடிப்படை சேமிப்பு மாதிரியின் விலை நிர்ணயம் வெறும் ரூ.12,999/- என்கிற நிலைப்பாட்டில், இதர இடைப்பட்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களின் விற்பனை பாதிப்படைவதில்லை ஒரு ஆச்சரியமும் இல்லை.

குறிப்பாக இக்கருவியின் மென்பொருள் அம்சங்கள் இன்னும் சிறப்பானவைகளாக உள்ளது. ஹானர் 7எக்ஸ் ஆனது ஹூவாய் நிறுவனத்தின் கிரின் 659 சிப்செட்டை கொண்டுள்ளது. அமேசான்.காம் வலைத்தளத்தில் நடந்த ப்ளாஷ் விற்பனையில் ஒரு மில்லியன் கணக்கில் முன்பதிவுகளை பெற்றுள்ளதென்றால் சாதாரணமான விடயமல்ல.

ஹானர் 7எக்ஸ்-ன் பின்னால் இருக்கும் உந்து சக்தி

ஹானர் 7எக்ஸ்-ன் பின்னால் இருக்கும் உந்து சக்தி

மிட் ரேன்ஜ் சாதனம் என்பதால் அடிப்படையான வன்பொருள் கொண்டிருக்குமென்று தவறாக மதிப்பிட வேண்டாம். இக்கருவி ஹூவாய் நிறுவனத்தின் தனிப்பயனாக்கப்பட்ட ஸ்கின் இஎம்யூஐ 5.1 ஆனது ஆண்ட்ராய்ட் 7.0 நௌவ்கட்டை பயன்படுத்தப்படுகிறது. அது ஹானர் 7எக்ஸ்-ன் பின்னால் இருக்கும் உந்து சக்தியாகும். அப்படியென்ன சக்தியது என்பதை விரிவாக காண்போம்.

தனிப்பயனாக்கத்தின் ஆழமான நிலை

தனிப்பயனாக்கத்தின் ஆழமான நிலை

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் தனிபயனாக்கங்களைப் பற்றிப் பேசுகையில், ஹானர் ஒரு முழுமையான புதிய மட்டத்திற்கு செல்கிறது. நிறுவனத்தின் இன்டஸ் எமோஷன் யூஐ 5.1 ஆனது பயனர் இடைமுகத்தின் ஒவ்வொரு அம்சத்திலும் தனிப்பயனாக்கங்களின் ஆழமான நிலைகளை வழங்குகிறது. உதாரணமாக -ஸ்டாண்டர்ட், ஆப் டிராயர் மற்றும் சிம்பிள் மோட் என உங்கள் விருப்பப்படி 'ஹாம் ஸ்க்ரீனில்' தேர்வுகளை நிகழ்த்தலாம்.

ப்ளோட்டிங் டாக்

ப்ளோட்டிங் டாக்

நோட்டிபிகேஷன் பாணியை மாற்றியமைக்கலாம் மற்றும் ஒவ்வொரு நாளும் உங்கள் ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் தீம் மற்றும் ஐகான்களையும் மாற்றலாம். பின்புறம் செல்ல, ஹோம் செல்ல, சமீபத்திய விண்டோக்களுக்கு செல்ல, ஸ்க்ரீன் லாக் செய்ய மற்றும் ஒன் டச் ஆப்டிமைசேஷன் போன்ற பல விருப்பங்களை வழங்கும் ப்ளோட்டிங் டாக்-தனை டிஸ்பிளேவில் எங்கு வேண்டுமானாலும் இடம்பெற செய்யலாம்.

ஸ்மார்ட் கைரேகை ஸ்கேனர்

ஸ்மார்ட் கைரேகை ஸ்கேனர்

ஹானர் 7எக்ஸ் ஒரு துருப்பிடிக்காத கைரேகை ஸ்கேனரை கொண்டுள்ளது மற்றும் அது ஒரு சிறந்த பயோமெட்ரிக் சென்சாரை உறுதி செய்கிறது. சாதனத்தின் பின்புறம் வசதியாக நிலைபெற்றுள்ள கைரேகை ஸ்கேனரானது கைபேசியை அன்லாக் செய்யமட்டுமின்றி பல முக்கியமான செயல்பாடுகளை செய்யவும் அனுமதிக்கிறது. இஎம்யூஐ 5.1 ஆதரவுடன் இந்த ஸ்மார்ட் கைரேகை ஸ்கேனர் ஆனது புகைப்படங்களை எடுக்கவும், வீடியோவை பதிவு செய்யவும், உள்வரும் அழைப்புக்கு பதிலளிக்கவும், அலாரத்தை நிறுத்தவும், அறிவிப்பு பேனலை அணுகுவதற்குக்கும், கேலரியில் உள்ள படங்களை உலவவும் உதவுகிறது.

ஸ்மார்ட் பேட்டரி பயன்பாடு அம்சங்கள்

ஸ்மார்ட் பேட்டரி பயன்பாடு அம்சங்கள்

ஹானர் இஎம்யூஐ 5.1 கிரின் 659 சிபியூ உடன் இணைந்து பேட்டரி துறைகளில் குறிப்பிடத்தக்க மென்பொருள் முன்னேற்றங்களைக் கொண்டு வருகிறது. ஹானர் 7எக்ஸ் ஆனது புத்திசாலித்தனமாக பயன்பாடுகள் மற்றும் அதன் 'வளங்களின்' செயல்பாட்டை கண்காணிக்க இரண்டு அர்ப்பணிக்கப்பட்ட மோட்களை கொண்டு வருகிறது.

அல்ட்ரா பவர் சேவிங் மோட்

அல்ட்ரா பவர் சேவிங் மோட்

'பவர் சேவிங் மோட்' ஆனது பின்னணி பயன்பாட்டு செயல்பாட்டை கட்டுப்படுத்துகிறது, இமெயில் ஆட்டோ சின்க், சிஸ்டம் சவுண்ட் மற்றும் ஸ்க்ரீன் விஷுவல் எப்பெக்ட்ஸ் ஆகியவைகளின் மூலம் பேட்டரி சக்தியை பாதுகாக்கிறது. இன்னும் கடினமான சூழ்நிலைகளை கையாள 'அல்ட்ரா பவர் சேவிங் மோட்' தனை நீங்கள் செயல்படுத்தலாம். எல்லாவற்றிக்கும் மேலாக ஸ்க்ரீன் லாக் செய்யப்பட்ட பின்னும் கூட ​​தனிப்பட்ட பயன்பாட்டின் செயல்பாட்டை நீங்கள் கண்காணிக்க முடியும்.

பயன்படுத்த மிக எளிது

பயன்படுத்த மிக எளிது

ஒரு ஸ்மார்ட்போனின் பயனர் இடைமுகமானது அந்த சாதனத்தை சிறப்பான ஒன்றாக்கும் அல்லது வெறுப்பை உண்டாகும். கருவியானது பயன்படுத்த எளிதானது என்றால், பயனர்களுடன் அது நீண்ட காலம் ஒட்டிக்கொள்கின்றன. இந்த விடயத்தை எமோஷன் யூஐ கொண்டு சிறப்பான முறையில் ஹானர் கையாண்டுள்ளது. இது பயனர் இடைமுகத்தை மென்மையாக, எளிமையாக இருக்கவும் வழிவகை செய்கிறது.

ஸ்பிலிட் ஸ்கிரீன் செயல்பாடு

ஸ்பிலிட் ஸ்கிரீன் செயல்பாடு

ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சமான ஸ்பிலிட் ஸ்கிரீன் செயல்பாடு ஆனது வேகமான பல மேலாண்மை அனுபவங்களை வழங்குகிறது மற்றும் பயனர்கள் ஒரே நேரத்தில் தங்கள் வாட்ஸ்ஆப் செய்தி அறிவிப்பையும், இணையத்தை உலாவலையும் நிகழ்த்த உதவுகிறது. பவர் ஆன்/ஆப் ஷெட்யூல் மூலம் உங்களின் ஒய்வு நேரகங்களில் ஹானர் 7எக்ஸ் ஸ்மார்ட்போனிற்கும் ஓய்வு அளிக்கலாம்.

எண்ட் டூ எண்ட் இணைப்பு தீர்வுகள்

எண்ட் டூ எண்ட் இணைப்பு தீர்வுகள்

ஒரே நேரத்தில் ஒரே பயன்பாட்டிற்கான இரண்டு வெவ்வேறு கணக்குகளில் உள்நுழைவதற்கு ஆப் ட்வீன் (App Twin) அனுமதிக்கும். உங்கள் ஸ்மார்ட்போன் பேட்டரி மற்றும் தரவு வேகத்தை முறையாக கண்காணிக்கும் பொருட்டு பேட்டரி சதவீதத்தையும், செல்லுலார் தரவு நெட்வொர்க்கையும் ஸ்டேட்டஸ் பட்டியிளிலும் காட்சிப்படுத்தலாம். இணைப்பு ஆதரவுகள் என்பது, ஹூவாய் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான எமோஷன் யூஐ-ன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஹானர் 7எக்ஸ் கருவியின் வைஃபை பிரிட்ஜ் அம்சமானது ஸ்மார்ட்போனை ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றும் இதன் வழியாக ஒரு நேரத்தில் 4 பிற சாதனங்களை இணைக்கலாம்.

எண்ட் டூ எண்ட் இணைப்பு தீர்வுகள்

எண்ட் டூ எண்ட் இணைப்பு தீர்வுகள்

இணைப்பு ஆதரவுகள் என்பது, ஹூவாய் நிறுவனத்தின் சொந்த தயாரிப்பான எமோஷன் யூஐ-ன் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். ஹானர் 7எக்ஸ் கருவியின் வைஃபை பிரிட்ஜ் அம்சமானது ஸ்மார்ட்போனை ஒரு வைஃபை ரவுட்டராக மாற்றும் இதன் வழியாக ஒரு நேரத்தில் 4 பிற சாதனங்களை இணைக்கலாம். ஹூவாய் அதன் க்ளவுட் சேவையின் வழியாக அனைத்து வகையான அணுகலையும், எப்போது வேண்டுமானாலும் வழங்கும். உங்கள் பழைய அண்ட்ராய்டு அல்லது ஐஓஎஸ் சாதனத்திலிருந்து உங்கள் ஹானர் 7எக்ஸ்-க்கு எந்த தொந்தரவும் இல்லாமல் தரவு பரிமாற்றத்தையும்எ நிகழ்த்த அனுமதிக்கும்.

கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்

கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ள ப்ரீலோடட் ஆப்ஸ்

அனுதினமும் மொபைல் பயனரின் அனுபவத்தை மேம்படுத்துவதற்கு, இதன் இஎம்யூஐ 5.1 ஆனது பல முன் ஏற்றப்பட்ட பயன்பாடுகளை கொண்டு வருகிறது. இவை வானிலை, கால்குலேட்டர், சவுண்ட் ரீடர், எஃப்எம் ரேடியோ, மிரர், ஹை கேர், ஹானர் சொசைட்டி, இமெயில் கிளையண்ட், ஹெல்த் பயன்பாடு ஆகியவைகளை கொண்டுள்ளது. இம்மாதிரியான பல மேம்பட்ட செயல்பாடுகளை கொண்ட ஹானர் 7 எக்ஸ்-ன் எமோஷன் யூஐ 5.1 ஆனது (EMUI 5.1) உயர் இறுதி பயனர்களுகளுக்கான சிறந்த தனிப்பயன் ஆண்ட்ராய்டு ஸ்கின்களில் ஒன்றென்பதில் எந்த சந்தேகமும் இல்லை.!

Best Mobiles in India

English summary
Honor 7X runs one the most feature rich custom skin- EMUI 5.1. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X