4ஜிபி ரேம், ஆல்-பிளாக் டிசைனில் ரூ.8,999/-க்கு யு யுரேகா பிளாக்.!
இந்த யுரேகா பிளாக் கருவியுடன் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் யூ நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது சந்தையை தொடங்குகிறது.
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணைநிறுவனமான யூ பிராண்ட் அதன் யுரேகா பிளாக் என்றழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த யுரேகா பிளாக் கருவியுடன் மிக நீண்ட காலத்திற்கு பின்னர் யூ நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது சந்தையை தொடங்குகிறது. இறுதியாக கடந்த ஆகஸ்ட் 2016-ல் யூ நிறுவனம் அதன் ஒரு ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.
யூரேகா பிளாக் ஆனது கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான யூ மொனிகெர் கருவியின் மேம்பாடு என்பதும் மற்றும் ஒரு புதிய வடிவமைப்பு, மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் சில நவநாகரிகமான புதிய அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போனின் இதர தனித்துவமான அம்சங்களை அறிந்துக்கொள்ளும் முன்னரெ இதன் ஆல்-பிளாக் வடிவமைப்பு நமது கவனத்தை திருடுகிறது.

பிரீமியம்
இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் ஒரு அட்டகாசமான கருப்பு பூச்சுடன் முழு உலோக உடல் கொண்டுள்ளது. இந்த கருப்பு வண்ண பூச்சு ஜெட் கருப்பு பதிப்பாய் அளிப்பதால் இதனை ஐபோன் 7 என்றே எண்ண தோன்றுகிறது அந்த அளவிற்கு ஒரு நம்பமுடியாத பிரீமியம் வடிவமைப்பை வழங்குகிறது.

ரியர் பகுதி
கருவியின் ரியர் பகுதிகளின் மேல் மற்றும் கீழ் பாகங்கள் பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்பட்டுள்ளது. ரூ.10,000/- என்ற பட்ஜெட் கொண்ட கருவிகளுக்கு மிகபெரிய போட்டியாக அமையும் இக்கருவியின் அம்சங்களை பொறுத்தமட்டில்..

டிஸ்ப்ளே
க்வால்காம் ஸ்னாப்ட்ராகன் 430 எஸ்ஓசி உடனான 4ஜிபி ரேம் மற்றும் அட்ரெனோ 510 ஜிபியூ உடன் இணைக்கப்பட்டுள்ள இக்கருவி 5 அங்குல எச்டி ஐபிஎஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2.5 டி கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 டிஸ்பிளே உடன் 4ஜி வோல்ட்-ஐ ஆதரிக்கிறது.

பேட்டரி
கூடுதலாக 3000எம்ஏஎச் பேட்டரி, 32 ஜிபி உள் சேமிப்பு, மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக நீட்டிப்பு ஆதரவு, 3.5 மிமீ ஜாக் (இன்றைய காலத்தில் இது ஒரு அரிதான தன்மை கொண்டது) மற்றும் ஆண்ட்ராய்டு 6.0.1 மார்ஷ்மெல்லோ (பெட்டிக்கு வெளியே) ஆகிய அம்சங்களையும் கொண்டுள்ளது.

கேமரா
இமேஜிங் துறையை பொறுத்தமட்டில் யூரேகா பிளாக் ஒரு எல்இடிஃப்ளாஷ் கொண்ட 8எம்பி முன் கேமராவுடன் இணைந்து இரட்டை எல்இபி ப்ளாஷ் உடனான 13எம்பி ரியர் சோனி சென்சார் உடன் வருகிறது. யுரேகா பிளாக் ப்ளிப்கார்ட்டில் பிரத்தியேகமாக ரூ.8,999/-க்கு கிடைக்கும்.

சைகை
மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஒரு நேர்த்தியான அம்சத்துடன் வருகிறது, இது பயனர்கள் லாக்ஸ்கிரீனில் மியூசிக் பிளேயருக்கு எம் என்று எழுதுவதின் மூலமாகவும் கேமராவிற்கு ஓ என்று எழுதுவதின் மூலமாகவும் அதனை அணுகமுடியும்.

பயனர் அனுபவத்திற்காக
கூடுதலாக, திரையின் மேல் வலது மூலையில் இருந்து கீழே இழுப்பதன் மூலம் நீங்கள் சைகைகளை பயன்படுத்தலாம். சிறந்த பயனர் அனுபவத்திற்காக ஸ்மார்ட்போன் ஒரு கை பயன்பாடு முறை திறனும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications