நிலவின் தென்துருவத்தில் பனிக்கட்டியை தேடும்‌ ரோவர்!

|

பென்சில்வேனியாவை தலைமையிடமாக கொண்ட ஆஸ்ட்ரோபோடிக் என்ற விண்வெளி நிறுவனம் நாசாவிற்கு ஒரு புதிய வியத்தகு பணியை மேற்கொண்டுள்ளது. அப்பணி என்னவெனில் சந்திரனுக்கு ஒரு வைப்பர்-ஐ(கட்டுவிரியன் பாம்பு) அனுப்பவேண்டும்.

ஒரு பாம்பு நிலவுக்கு செல்கிறது என நினைக்கவேண்டாம்

ஒரு பாம்பு நிலவுக்கு செல்கிறது என நினைக்கவேண்டாம்

வைப்பர் என்பதும் ஒரு பாம்பு நிலவுக்கு செல்கிறது என நினைக்கவேண்டாம். ஆஸ்ட்ரோபோடிக் பேலோட் என்பது சந்திர மேற்பரப்பிற்குக் கீழே புதைந்துள்ள நீர் பனியை வெளியேற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு பெரிய ரோவர் ஆகும். இது ஆவியாக்கல் துருவ ஆய்வு ரோவர் (Volatiles Investigating Polar Exploration Rover - VIPER) என்ற செல்லப்பெயரில் அழைக்கப்படுகிறது. தற்போதைக்கு 2023 இன் பிற்பகுதியில் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஏவுதல், 2024 இன் பிற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்தில் மனிதர்களை தரையிறக்கும் நாசாவின் ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு முக்கிய பகுதியாகும்.

வைப்பர் நிலவில் பனியை தேடும் திட்டம்

வைப்பர் நிலவில் பனியை தேடும் திட்டம்

"சந்திரனில் ஒரு நிலையான நீண்டகால இருப்புக்கான நாசாவின் இறுதி இலக்கை நோக்கி ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கு, வைப்பர் நிலவில் பனியை தேடி வளங்களின் வரைபடத்தை உருவாக்கும்.இது செவ்வாய் கிரகத்தையும் அதற்கு அப்பாலும் ஆராய்வதை மனிதர்களுக்கு சாத்தியமாக்கும்." என்று கடந்த புதன்கிழமை(ஜூன் 11) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நாசாவின் அறிவியல் இணை நிர்வாகி தாமஸ் சுர்பூச்சென் தெரிவித்தார்.

சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!சுஷாந்த் சிங் தீராத கனவுகள்., இதுதான்!

நாசாவின் வணிக நிலவு பேலோட் சேவைகள்

நாசாவின் வணிக நிலவு பேலோட் சேவைகள்

இந்த விநியோக ஒப்பந்தம் நாசாவின் வணிக நிலவு பேலோட் சேவைகள் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ் நாசாவின் கருவிகளை சந்திரனின் மேற்பரப்பிற்கு கொண்டு செல்லவும் சோதனைகளை மேற்கொள்ளவும் தனியார் நிறுவனங்களை பணியமர்த்த முடியும்.

ஆய்வு மற்றும் வர்த்தகம்

ஆய்வு மற்றும் வர்த்தகம்

"சந்திரனில் விஞ்ஞானம், ஆய்வு மற்றும் வர்த்தகம் ஆகியவற்றின் புதிய சகாப்தத்திற்கான மற்றொரு அற்புதமான மைல்கல்லை இன்று குறிக்கிறது. இந்த ரோவர் ஒரு வரலாற்று சிறப்புமிக்க மிஷனாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை."என்று ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஜான் தோர்டன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

199.5 மில்லியன் டாலர் மதிப்பு

199.5 மில்லியன் டாலர் மதிப்பு

199.5 மில்லியன் டாலர் மதிப்புடைய இந்த புதிய தரையிறங்கும் ஒப்பந்தம், ஏவுதல் மற்றும் தரையிறங்குதல் உள்ளிட்ட ஒவ்வொரு அம்சத்திற்கும் ஒரு நிலையான செலவுக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது என நாசா அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிஷனை செயல்படுத்த ஆஸ்ட்ரோபோடிக் நிறுவனம் சுயாதீனமாக ஒரு ராக்கெட் ஏவுதள நிறுவனத்தை பணியமர்த்தும் நிலையில், அந்நிறுவனம் குறித்து இன்னும் தீர்மானிக்கப்படவில்லை .

கமர்சியல் லூனார் பேலோட் சர்வீஸ்

கமர்சியல் லூனார் பேலோட் சர்வீஸ்

கமர்சியல் லூனார் பேலோட் சர்வீசஸ் திட்டத்தின் கீழ் முதல் இரண்டு மிஷன்களில் ஒன்றை ஆஸ்ட்ரோபோடிக் வைத்திருக்கிறது. இதன் மூலம் அடுத்த ஆண்டு சந்திரனில் சிறிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பேலோடுகளை ஏற்றிச் செல்லும் ஒரு லேண்டரை வழங்குவுள்ளது. அந்த பூர்வாங்க ஆஸ்ட்ரோபோடிக் பணி பெரேக்ரின் என்ற சிறிய லேண்டர் மூலம் தொடங்கப்படும். 1,000 பவுண்டுகள் (450 கிலோகிராம்) எடை கொண்டது என்பதால், வைப்பருக்கு மிகப்பெரிய ஏவுகலன் தேவைப்படும். பெரிய பேலோடுகளுக்கான ஆஸ்ட்ரோபோடிக் லேண்டர் கிரிஃபின் என்று அழைக்கப்படுகிறது.

சந்திரனின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள்

சந்திரனின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள்

சந்திரனின் மேற்பரப்பில் பனிக்கட்டிகள் எங்கு ஒளிந்திருக்கும் என்பதைக் குறிக்கும் சுற்றுப்பாதை தரவை விஞ்ஞானிகள் நன்கு புரிந்துகொள்ள உதவுவதே வைபரின் முதன்மை பங்கு. அந்த தரவுகளில் பெரும்பாலானவை 2009முதல் செயல்பாட்டில் உள்ள நாசாவின் சந்திர மறுமதிப்பீட்டு ஆர்பிட்டரிலிருந்து வந்தவை‌. ஆனால் அதன் தசாப்த கால அவதானிப்புகள் சந்திர அளவீடுகளின் மதிப்புமிக்க தரவுகளை உருவாக்கியிருந்தாலும், விஞ்ஞானிகள் அவற்றை உண்மையாக புரிந்து கொள்ள மேற்பரப்புடன் நெருங்க வேண்டும்.

வைபரின் உதவி தேவைப்படுகிறது

வைபரின் உதவி தேவைப்படுகிறது

எனவே தான் வைபரின் உதவி தேவைப்படுகிறது. நாசாவின் கோட்பாடு என்னவென்றால், சந்திரனின் தென் துருவத்தின் ஒரு சிறிய பகுதியில் இந்த ரோவர் பனியைப் ஆராய முடியும். பனியின் மிகுதியை அளவிடுதல், அது எந்த வடிவத்தை எடுக்கும் என்பதைப் புரிந்துகொள்வது மற்றும் எவ்வளவு தூய்மையானது என்பதை அளவிடுவது ஆகியவை ரோவரின் பணிகளில் அடங்கும். விஞ்ஞானிகள் அந்த அவதானிப்புகளை சுற்றுப்பாதை தரவுகளுடன் ஒப்பிடலாம். அந்த ஒப்பீடு சந்திரனைச் சுற்றியுள்ள பனி பற்றிய அவர்களின் புரிதலைக் கூர்மைப்படுத்த வேண்டும்.

நம்பமுடியாத அரிய வகை 'பேபி டிராகன்கள்'.! இரகசிய குகையிலிருந்து இனி மக்களின் பார்வைக்காக.!நம்பமுடியாத அரிய வகை 'பேபி டிராகன்கள்'.! இரகசிய குகையிலிருந்து இனி மக்களின் பார்வைக்காக.!

நான்கு கருவிகளை ரோவர் கொண்டு செல்லும்

நான்கு கருவிகளை ரோவர் கொண்டு செல்லும்

இவற்றையெல்லாம் செய்ய, சந்திரனின் மேற்பரப்பிலிருந்து சுமார் 3 அடி (1 மீட்டர்) அடையக்கூடிய ஒரு துளையிடும் சாதனம் உட்பட நான்கு கருவிகளை ரோவர் கொண்டு செல்லும். நான்கு கருவிகளில் மூன்றின் நகல்கள், ரோவர் விண்ணில் செலுத்தப்படுவதற்கு முன்பு அவற்றின் செயல்திறனை சோதிக்கும் முயற்சியாக அதற்கு முந்தைய மிஷன்களில் விண்ணிற்கு அனுப்பப்படும் என்றது சுர்பூச்சென் இன்று தெரிவித்தார்.

source: space.com

Best Mobiles in India

English summary
Astrobotic taken on dramatic new task for NASA.,deliver VIPER to the moon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X