2011 ஆண்டின் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்!

By Super
|

2011 ஆண்டின் சிறந்த டாப் 10 ஸ்மார்ட்போன்கள்!
நாளுக்கு நாள் மொபைல்போன் மார்க்கெட் அபரிதமான வளர்ச்சி கண்டு வருகிறது. இதனால், ஏராளமான நிறுவனங்கள் மொபைல்போன் மார்க்கெட்டில் அடியெடுத்து வைத்து வருகின்றன. மேலும், கடும் போட்டி நிலவுவதால் புதிய புதிய மாடல்கள் தொடர்ந்து அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன.

இருப்பினும், அதில் ஒரு சில மாடல்கள் மட்டுமே வாடிக்கையாளர்களிடம் அமோக ஆதரவை பெறுகின்றன. அந்த வகையில், வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று மார்க்கெட்டில் தனி இடம் பிடித்துள்ள இந்த ஆண்டின் சிறந்த 10 ஸ்மார்ட்போன்களின் தொகுப்பை வழங்குகிறோம்.

1.சாம்சங் கேலக்ஸி எஸ்-2:

இந்த ஆண்டில் வாடிக்கையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற ஸ்மார்ட்போன் மாடல்களில் சாம்சங் கேலக்ஸி எஸ்-2வும் ஒன்று, இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு வி 2.3(ஜிஞ்சர்பிரெட்)ஆப்பரேட்டிங்

சிஸ்டத்தில் இயங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையை கொண்டிருக்கிறது.

சூப்பர் ஆக்டிவ்-மேட்ரிக்ஸ் ஆர்கானிக் லைட் தொழில் நுட்பத்தினையும் இதன் மூலம் பெறலாம். இந்த கேலக்ஸி எஸ்-2 வாடிக்கையாளர்கள் எதிர் பார்ப்பை அதிகம் பெற்ற ஸ்மார்ட்மொபைல் ஆதலால் பிரம்மிக்க வைக்கும் விற்பனையை கொடுத்து அசத்தி உள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எஸ்-2 ஸ்மார்ட்போன். உயர்ந்த தொழில் நுட்பத்தினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,000 விலையில் பெறலாம்.

2.ஆப்பிள் ஐபோன் 4-எஸ்:

மொபைல் சாம்ராஜ்யத்தில் சாதனை படைத்த ஆப்பிள் ஐபோன் பற்றிய சில சுவாரஸ்யமான தகவல் இங்கே வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனம் அதி நவீன தொழில் நுட்பம் வாய்ந்த ஐபோன் 4-எஸ் என்ற ஸ்மார்ட்போனை சமீபத்தில் வெளியிட்டது.

உலக புகழ் வாய்ந்த ஆப்பிள் ஐபோன் 4-எஸ் ஸ்மார்ட்போன் எல்இடி பேக்கலிட் ஐபிஎஸ் டிஎப்டி தொடுதிரை தொழில் நுட்பத்தினை கொண்டிருக்கிறது. இது 4.7 இஞ்ச் திரை வசதியையும், 16எம் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் திரையையும் மற்றும் ஐஓஎஸ்-4 இயங்குதளத்துடன் ஐஓஎஸ்-5 இயங்குதளத்தை பதிவேற்றம் செய்யும் வசதியுடன் வந்துள்ளது.

இந்தியாவில் 16ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.44,500 விலையிலும், 32ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.50,900 விலையிலும், 64ஜிபி கொண்ட ஐபோன் 4-எஸ் மொபைல் ரூ.57,500 விலையிலும்,கிடைக்கிறது. அற்புதமான தொழில் நுட்பத்தினை பெற வாடிக்கையாளர்களுக்கு இது ஒர் அரிய வாய்ப்பு என்று தான் சொல்ல வேண்டும்.

3.எல்ஜி பிரடா 3.0 ஸ்மார்ட்போன்:

மொபைல் உலகில் அதிக தொழில் திறமையை காட்டி இருக்கும் எல்ஜி நிறுவனம் சர்வதேச அளவில் தனது படைப்புகளை கொடுத்து வருகிறது. பிராடா 3.0 என்ற ஸ்மார்ட்போனை சர்வதேச சந்தையில் அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஏகபோக வசதிகளையும், தொழில் நுட்பங்களையும் வழங்கும் என்று பெரிதும் நம்பப்படுகிறது. பிராடா 3.0 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை கொண்டு இயங்கும்.

ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் வி2.3 சிஸ்டத்தில் இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் தொடுதிரை வசதியை கொண்டது. 1 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனிலும் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால், 1080பி வீடியோ துல்லியத்தினை கொடுக்கும். ஜிஎஸ்எம் நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும் இந்த எல்ஜி பிராடே 3.0 ஸ்மார்ட்போன் ரூ.30,000 ஒட்டிய விலையில் கிடைக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


4.பிளாக்பெர்ரி கர்வ்-9350:

கியூவர்டி கீபேட் வசதிக்கு பெயர்போன நிறுவனம் பிளாக்பெர்ரி நிறுவனம் கர்வ்-9350 என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கியுள்ளது. இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ்-9350 ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ சிம் கார்டு தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும் முதல் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன். மேலும், இந்த புதிய ஸ்மார்ட்போன் புதிய பிளாக்பெர்ரி 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தை கொண்டிருக்கிறது.

இதில், பொருத்தப்பட்டிருக்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்ணாடி போல் தெளிவானபுகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம். இந்த பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் ரூ.20,990 ஒட்டிய விலை கொண்டதாக இருக்கும்.


5.சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா ப்ளே:

புதிய எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுக்கும் சிறந்த நிறுவனங்களில் நிச்சயம் சோனி எரிக்ஸன் நிறுவனமும் ஒன்று . சோனி எரிக்ஸனின் எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்களின் கனவில் பெரிதும் ஆக்கிரமித்த ஸ்மார்ட்போன்.

எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போனின் மூலம் புதிய விளையாட்டுகளை ஆடி பொழுதை இனிமையானதாக கழிக்க கியாரண்டி. இதல் கேம்ஸ் வசதியை பொருத்த வரையில் சோனி எரிக்சன் நிறுவனம் 20 வித்தியாசமான கேம்களை கொடுத்து உள்ளது. இதில் உள்ள அனைத்து விளையாட்டுகளுமே வாடிக்கையாளர்களுக்கு மிகுந்த ஆர்வத்தை கொடுப்பது தான்.


சோனி எரிக்சனின் எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன் ரூ.29,000 விலையை ஒட்டிதாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இருக்கும் இடத்தை, விளையாட்டு களமாகவே மாற்றிவிடும் வல்லமை கொண்டுள்ளது இந்த அதிரடி தொழில் நுட்பம் கொண்ட எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன்.

6.எச்டிசி ரேடார்:

சிறந்த தொழில் நுட்பத்தினை கொடுக்க வேண்டும் என்பது எந்த அளவு முக்கியமோ அந்த அளவு முக்கியம் மக்கள் மனதில் இடம்பிடிப்பது. நவீன தொழில் நுட்பத்தினை கொடுத்தால் மட்டுமே வாடிக்கையாளர்களின் வரவேற்பை பெற முடியும் என்பது மிக முக்கியமான ஒன்று. ரேடர் என்ற அற்புதமான தொழில் நுட்பம் கொண்ட சிறந்த ஸ்மார்ட்போனை எச்டிசி நிறுவனம் வெளியிட்டது.

இது விண்டோஸ் 7.5 மேங்கோ ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். இதன் 1ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர், ஓஎஸ் எளிதாக இயங்க துணை புரிகிறது. இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா உள்ளதால் சிறந்த புகைப்படங்களை எடுக்கலாம். போதுமான துல்லியம் இந்த கேமராவின் மூலம் கிடைக்கும். இது மக்கள் மத்தியில் மிக பிரசித்தி பெற்ற ஸ்மார்ட்போன்.


மெட்டாலிக் வடிவமைப்பு என்றதும் அதிக எடை கொண்டதாக இருக்கும் என்று கருதிவிட முடியாது. இந்த ஸ்மார்ட்போன் 137 கிராம் இலகு எடை கொண்டது. இந்திய சந்தையில் இந்த எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போன் ரூ.23,500 ஒட்டிய விலையில் கிடைக்கும். மகத்தான விலையில், மகத்தான எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போனை பெறலாம்.

7.நோக்கியா டி-7:

மக்கள் அதிகம் மொபைல்களை பயன்படுத்தாத காலத்திலேயே சிறந்த மொபைல்களை வெளியிட்ட நிறுவனம் நோக்கியா. இந்த பெருமை நோக்கியா நிறுவனத்தையே சேரும். இந்நிறுவனத்தின் புதிய படைப்பான நோக்கியா டி-7 ஸ்மார்ட்போனை பற்றி பார்க்கலாம்.

16 மில்லியன் கலர்களுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் 3.4 இஞ்ச் திரை வசதியினையும், 360 X 640 பிக்ஸல் துல்லியத்தையும் வழங்கும். டி-7 ஸ்மார்ட்போன் அனைவரையும் ஆச்சர்யபடுத்த 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தினை தரும் 8 மெகா பிக்ஸல் கேமராவுடன் அவதாரம் எடுத்துள்ளது. இதன் விலை இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை. இந்த அறஅபுதமான சிறந்த ஸ்மார்ட்போனை பற்றி விளக்கமாக பார்ப்போம்.


8.சாம்சங் கேலக்ஸி ஒய் மற்றும் டபிள்யூ:

நிறைய வாடிக்கையாளர்களை தனது திறமையான தொழில் நுட்பத்தின் மூலம் கவர்ந்து இருக்கிறது சாம்சங் நிறுவனம். இந்நிறுவனத்தின் இரண்டு புதிய படைப்பாக ஒய் மற்றும் டபிள்யூ என்ற இரண்டு ஸ்மார்ட்போன்களை பற்றிய பதிவுகளை இங்கே பார்க்கலாம்.


சாம்சங் கேலக்ஸி ஒய் மொபைல் 3 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். கேலக்ஸி டபிள்யூ மொபைல் சற்று அதிகமான திரையை கொண்டிருக்கும். இதில் 3.7 இஞ்ச் திரையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தை பொறுத்த வரையில் இந்த கேலக்ஸி ஒய் மற்றும் டபிள்யூ ஆகிய இரண்டு மொபைல்களுமே ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரீட் இயங்குதளத்தில் இயங்கும். சாம்சங் கேலக்ஸி ஒய் ஸ்மார்ட்போன் ரூ.8,000 விலை கொண்டதாக இருக்கும்.


9.மோட்டோரோலா டிராய்டு ரேசர்:

மொபைல் உலகில் பிரண்மாண்டமான வரலாற்றை இதுவரை பதித்து கொண்டிருந்த மோட்டோரோலா நிறுவனம், டிராய்டு ரேசர் என்ற ஸ்மார்ட்போனை மொபைல் பிரியர்களுக்கு அளித்திருக்கிறது. இது ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் தன்மை கொண்ட ஸ்மார்ட்போன்.

மற்ற சிறந்த ஸ்மார்ட்போன்களுன் போட்டியிட இந்த டிராய்டு ரேசர் ஸ்மார்ட்போன் எல்லாவிதத்திலும் தகுதியுடையது என்பதை, இந்த மொபைலை பயன்படுத்தும் போது நிச்சயம் புரியும். இந்திய சந்தையில் ரூ.25,550 விலைக்கு இந்த டிராய்டு ரேசர் ஸ்மார்ட்போன் கிடைக்கும்.

10.எச்டிசி ரைம், எச்டிசி ரேடார்:

அனைவராலும் உலக அளவில் அங்கீகரிக்கப்பட்ட மொபைல் நிறுவனம் என்ற பெயரை தட்டி சென்றுள்ளது எச்டிசி நிறுவனம். இதன் சிறந்த படைப்பாக ரைம் மற்றும் ரேடார் ஸ்மார்ட்போன்களை கூறலாம். எச்டிசி ரேடார் மொபைல் 3.8 இஞ்ச் திரையின் மூலம் 480 X 800 பிக்ஸல் துல்லியத்தை கொடுக்கும்.

எச்டிசி ரைம் மொபைல் 3.7 இஞ்ச் திரையை கொண்டுள்ளது. இந்த இரண்டு மொபைல்களிலும் 5 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டிருக்கிறது. இரட்டை சகோதரர்கள் என்று அழைக்கப்படும் இந்த ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்பம் சிறந்தது என்பதை இதை பயன்படுத்தும் போது வாடிக்கையாளர்களால் நிச்சயம் உணர முடியும். எச்டிசி ரேடர் ஸ்மார்ட்போன் ரூ.23,500 விலையில் இருக்கும். எச்டிசி ரைம் ஸ்மார்ட்போன் ரூ.27,499விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X