கட்டண சலுகைகளுடன் வரும் புதிய பிளாக்பெர்ரி மொபைல்!

Posted By: Staff
கட்டண சலுகைகளுடன் வரும் புதிய பிளாக்பெர்ரி மொபைல்!

வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி கர்வ்-9350 என்ற புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த புதிய சிடிஎம்ஏ சிம் கார்டு தொழில்நுட்பம் கொண்ட புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனை எம்டிஎஸ், டாட்டா டோக்கோமோ, ரிலையன்ஸ் ஆகிய 3 தொலைதொடர்பு நிறுவனங்களும் விற்பனை செய்ய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ்-9350 ஸ்மார்ட்போன் சிடிஎம்ஏ சிம் கார்டு தொழில்நுட்பத்தை சப்போர்ட் செய்யும்  முதல் பிளாக்பெர்ரி 7 ஓப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல் ஏராளமான சிறப்பு கட்டணச் சலுகைகளுடன் விற்பனைக்கு கொண்டு வர தொலைதொடர்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

புதிய பிளாக்பெர்ரி கர்வ் 9350 ஸ்மார்ட்போனுக்கு எம்டிஎஸ் தொலைதொடர்பு நிறுவனம் முன்பணம் இல்லாமல் வாங்கிக்கொள்ளும் திட்டத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருப்பதாக மார்க்கெட் பரபரக்கிறது. இதற்கு முன்பு எச்டிசி பிளஸ் மொபைல்போனை முன்பணம் இல்லாமல் மாதம் ரூ.1,500 செலுத்தும் வகையில் தவணைத் திட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வந்தது.

இந்த திட்டத்தில் 1,500 நிமிடங்கள் டாக் டைம், 1,500 இலவச எஸ்எம்எஸ், 1,500 எம்பி அளவுக்கு டேட்டா டவுன்லோடு ஆகிய சலுகைகளையும் பெற டியும். இதேபோன்று, இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ் 9350 ஸ்மார்ட்போனுக்கும் சலுகை திட்டத்தை எம்டிஎஸ் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இது பற்றி இன்னும் எந்த விதமான அதிகார பூர்வமான தகவல்களும் வெளியாகவில்லை. இந்த புதிய பிளாக்பெர்ரி கர்வ்-9350 ஸ்மார்ட்போன் அதி நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பவர்களை தன் வசம் ஈர்க்கும் தன்மை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

பிளாக்பெர்ரி என்றாலே கியூவர்டி கீப்பேட் இல்லாமல் இருக்குமா? இதில் கியூவர்டி கீப்பேட் வசதியும் உள்ளது. இதில் ஜிபிஎஸ் மற்றும் வைபை தொழில் நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் கண்ணாடி போல் தெளிவான புகைப்படத்தையும், வீடியோ ரெக்கார்டிங் வசதியினையும் பெறலாம்.

512 எம்பி ரேம் கொண்ட இந்த மொபைல் 32ஜிபி விரிவுப்படுத்தக்கூடிய மெமரி ஸ்டோரேஜ் வசதியினையும் அளிக்கும். இதில் உள்ள விக்கிடியூடு அப்ளிகேஷன் மூலம் பிளாக்பெர்ரி மெஸஞ்ஜர் வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். என்எப்சி தொழில் நுட்பமும் இதில் உள்ளது. இதுபோன்ற ஏராளமான புதிய தொழில்நுட்ப வசதிகளையும் இந்த புதிய பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன் வழங்கும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்