வீடியோ கேம் பிரியர்களின் தாகத்தை தணிக்க சோனி முயற்சி

By Super
|
வீடியோ கேம் பிரியர்களின் தாகத்தை தணிக்க சோனி முயற்சி
வீடியோ கேம் பிரியர்களின் தாகத்தை தணிக்கும் வகையில், எக்ஸ்பீரியா ப்ளே போன்களில் புதிதாக 20 வீடியோ கேம்களை அப்லோடு செய்து விற்பனைக்கு கொண்டு வருவதாக சோனி எரிக்ஸன் அறிவித்துள்ளது.

ப்ளேஸ்டேஷன் சான்றிதழுடன் வந்துள்ள சோனி எரிக்ஸன் எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போன், ஏற்கனவே மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது.

குறிப்பாக, கம்ப்யூட்டர், டிவியில் விளையாடுவது போன்றே, இதில் வீடியோ கேம் விளையாடுவதற்கென்றே ஜாஸ்பேடு கன்ட்ரோல் ஸ்டிக் வசதியை கொண்டிருப்பதால், வீடியோ கேம் பிரியர்களிடேயே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில், எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போனுக்கு புதிதாக 20 வீடியோ கேம்களை அறிமுகம் செய்கிறது சோனி எரிக்ஸன். இதில், 10 வீடியோ கேம்கள் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டவை.

இதில், டாம் கிளான்ஸிஸ் ரெயின்போ சிஸ்க்: ஷேடோ வான்கார்டு, இஏ பேட்டில்பீல்டு பேட் கம்பெனி-2, ஸ்லீப்பி ஜாக் மற்றும் அர்மகெடான் ஸ்குவாட்ரான்-2 ப்ரம் போலார்பிட் உள்ளிட்ட பிரபலமான வீடியோ கேம்களை அறிமுகம் செய்ய இருப்பதாக சோனி எரிக்ஸன் தெரிவித்துள்ளது.

தவிர, மொத்தத்தில் 150 வீடியோ கேம்களுடன் ஆன்ட்ராய்டு பிளாட்பார்மில் அப்டேட் செய்த எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போனை மார்க்கெட்டிற்கு கொண்டு வரவும் சோனி திட்டமி்ட்டுள்ளது. மேலும், அப்டேட் செய்யப்பட்ட புதிய எக்ஸ்பீரியா ப்ளே ஸ்மார்ட்போனில் ஃபேஸ்புக் எளிய லாகின் மற்றும் இன்டர்பேஸ் வசதியுடன் வருகிறது.

வீடியோ கேம் விளையாடிக்கொண்டிருக்கும்போதே, அதிக புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றதை பேஸ்புக்கில் நேரடியாக பகிர்ந்து கொள்ள முடியும். டி300 மல்டிமீடியா டாக், பாக்கெட் யுஎஸ்பி கேபிள், ஆடியோ கேபிள் உள்ளிட்டவையும் இதனுடன் இணைத்துக்கொள்ளலாம்.

வீடியோ கேம் பிரியர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ள இந்த போன் ரூ.29,000 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X