அமேசானில் கூட்டம்.. வெறும் ரூ.7,999 க்கு 5ஜி, 5160mAh பேட்டரி, IP52 ரேட்டிங், 50MP கேமரா.. எந்த மாடல்?
2024 முதல் தற்போது வரை - பெஸ்ட் பட்ஜெட் விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆக திகழும்.. ரெட்மி நிறுவனத்தின் 5ஜி ஸ்மார்ட்போன் ஒன்று தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வெறும் ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. அதென்ன மாடல்? எவ்வளவு ஆபர் கிடைக்கிறது? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? அது ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G) ஸ்மார்ட்போன் ஆகும். தற்போது இந்த ஸ்மார்ட்போன் அமேசான் ப்ரைம் டே 2025 விற்பனையின் (Amazon Prime Day 2025 Sale) ஒரு பகுதியாக ரூ 7,999 க்கு வாங்க கிடைப்பதாக பட்டியலிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இது 2கடந்த 2024 இல் ரூ.8,499 க்கு அறிமுகமானது.

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்ள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, இது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை (LCD Display) கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி எல்பிடிஆர்4எக்ஸ் ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) மூலம் இயக்கப்படுகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது டூயல் ரியர் கேமரா செட்டப் (Dual Rear Camera Setup) உடன் வருகிறது. இதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உடன் குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா ஒன்றும் உள்ளது. முன்பக்க கேமராவை பொறுத்தவரை செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக, எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 5 மெகாபிக்சல் கேமரா உள்ளது.
பேட்டரியை பொறுத்தவரை இது 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. ஆனால் இந்த ஸ்மார்ட்போனின் பாக்ஸில் (Smartphone Retail Box) ரூ.1,999 மதிப்புள்ள 33W சார்ஜர் முற்றிலும் இலவசமாக அனுப்பப்படும் என்று அமேசான் இந்தியா வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை, இது 128ஜிபி வரையிலான யுஎப்எஸ் 2.2 ஸ்டோரேஜை கொண்டுள்ளது. சுவாரசியமாக இதன் ஸ்டோரேஜை மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டை (Micro SD Card Slot) பயன்படுத்தி 1டிபி வரை நீட்டிக்கவும் முடியும். கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இது 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை 5, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யூஎஸ்பி டைப் சி போர்ட் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவைகளை கொண்டுள்ளது.
மேலும் ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் (Finger Print Scanner) கொண்டுள்ளது. கூடவே தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி52 ரேட்டிங்கையும் (IP52 rating) கொண்டுள்ளது. கடைசியாக இது அளவீடுகளில் 171.88x77.80x8.22மிமீ உள்ளது மற்றும் எடையில் 212.35 கிராம் உள்ளது.
இதேபோல ஒன்பிளஸ் நிறுவனத்தின் லேட்டஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன் ஆக அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) மாடலும் கூட தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுகுறித்த விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
மேலும் ஆப்பிள் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பட்ஜெட் விலை ஐபோன் மாடல் ஆக அறிமுகமான ஐபோன் 16இ (iPhone 16e) மாடலும் கூட தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கிறது. அதுகுறித்த விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
பல்வேறு வகையான நிறுவனங்களின் 55-இன்ச் ஸ்மார்ட் டிவிகள் (55-inch Smart TV) குறித்த ஆபர்களை படிக்க இங்கே கிளிக் செய்யவும். ஆசஸ் கேமிங் மற்றும் நான்-கேமிங் லேப்டாப்கள் (Asus Gaming and Non-gaming Laptops) மீதான ஆபர்களை பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications








