ஆல்டைம் Low Price-ல் iPhone 16e விற்பனை.. Amazon Prime Day 2025 விற்பனையில் ஆர்டர் அள்ளுது!
அமேசான் இந்தியா வலைதளத்தில் நடக்கும் ப்ரைம் டே 2025 விற்பனையில் (Amazon Prime Day 2025 Sale) ஆப்பிளின் லேட்டஸ்ட் ஐபோன் மாடல் ஆன ஐபோன் 16இ (iPhone 16e) ஆனது முன் எப்போதும் இல்லாத அளவிலான மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.
அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது ஐபோன் 16இ மாடல் ஆனது ரூ.49,990 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இதுவே அசல் அறிமுக விலையை விட குறைவு தான். கூடுதலாக பேங்க் ஆபர் உடன் சேர்த்து இது ரூ.47,999 க்கு வாங்க கிடைக்கும் என்றும் அமேசான் பேனர் தெரிவிக்கிறது.

நினைவூட்டும் வண்ணம், அறிமுகத்தின் போது இந்தியாவில் ஐபோன் 16இ மாடலின் ஆரம்ப விலை ரூ.59,900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது இது மிகவும் மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது. அறியாதோர்களுக்கு ப்ரைம் டே 2025 சேல் ஆனது ஜூலை 12 முதல் 14 வரை நடக்கும் ப்ரைம் மெம்பர்களுக்கான ஒரு பிரத்யேக சிறப்பு விற்பனையாகும்.
ஆப்பிள் ஐபோன் 16இ மாடலின் விரிவான அம்சங்கள்: இது ஃபேஸ் ஐடி உடனான 6.1 இன்ச் ஓஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இது ஐபோன் எஸ்இ சீரீஸில் காணப்படும் பாரம்பரிய ம்யூட் சுவிட்சுக்கு பதிலாக ஒரு ஆக்ஷன் பட்டனையும் கொண்டு உள்ளது.
கேமராவை ஸ்டார்ட் செய்வது அல்லது டிஎன்டி மோட்-ஐ ஆன் செய்வது போன்ற பல்வேறு செயல்பாடுகளை விரைவாக அணுக, இந்த ஆக்ஷன் பட்டன் உதவும். கூடுதலாக, ஆப்பிள் ஐபோன் 16இ ஆனது யூஎஸ்பி-சி போர்ட்டுடன் வருகிறது. இது விரைவான டேட்டா பரிமாற்றம் மற்றும் சார்ஜிங்கிற்காக லைட்னிங் போர்ட்டை மாற்றுகிறது.
மேலும் இது ஆப்பிளின் ஏ18 சிப் மூலம் இயக்கப்படுகிறது. அதாவது ஐபோன் 16இ மாடல் ஆனது அதன் முன்னோடிகளை விட அதிக செயல்திறனை வழங்கும். ஏ18 சிப்பில் 6-கோர் சிபியு உள்ளது, இது ஐபோன் 11 மாடலில் உள்ள ஏ13 பயோனிக் சிப்பை விட 80 சதவிகிதம் வேகமானது என்று ஆப்பிள் கூறுகிறது.
மேலும் ஐபோன் 16இ மாடலில் 4-கோர் ஜிபியு மற்றும் 16-கோர் நியூரல் எஞ்சின் ஆகியவை மெஷின் லேர்னிங் பணிகளை மிகவும் திறமையாக கையாளும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, நியூரல் என்ஜின் ஏ13 -ஐ விட இது ஆறு மடங்கு வேகமாக ஏஐ மாடல்களை செயலாக்க முடியும்.
எல்லாவாற்றை விட முக்கியமாக ஐபோன் 16இ மாடல் ஆனது ஏஐ அம்சங்களின் தொகுப்பான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ்-ஐ ஆதரிக்கிறது. ஜென்மோஜி, ரைட்டிங் டூல்ஸ் மற்றும் சாட்ஜிபிடி உடனான ஒருங்கிணைப்பு போன்ற டூல்கள் இதில் அடங்கும், இது பல்வேறு ஆப்களில் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும்
கேமராக்களை பொறுத்தவரை இது சிங்கிள் 48எம்பி ஃப்யூஷன் ரியர் கேமராவுடன் வருகிறது, இது விரிவான ஹை ரெசல்யூஷன் புகைப்படங்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. இதன் கேமரா செட்டப் ஆனது 2எக்ஸ் டெலிஃபோட்டோ ஜூம் விருப்பத்தை வழங்குகிறது. இயல்பாக ஐபோன் 16இ ஆனது 24எம்பி புகைப்படங்களை தான் எடுக்கும், ஆனால் அதிக தெளிவுத்திறன் கொண்ட காட்சிகளுக்கு 48எம்பி மோட்-க்கு மாறலாம்.
இதன் கேமரா செட்டப்பில் போர்ட்ரெய்ட் மோட், நைட் மோட் மற்றும் எச்டிஆர் ஆகிய அம்சங்கள் உள்ளன முன்பக்கத்தில் ஐபோன் 16இ மாடலில் ஆட்டோஃபோகஸுடன் 12எம்பி ட்ரூ டெப்த் கேமரா உள்ளது. வீடியோ ரெக்கார்டிங்கை பொறுத்தவரை, ஐபோன் 16இ மாடல் ஆனது 4கே ரெக்கார்டிங்கை வினாடிக்கு 60 பிரேம்கள் வரை ஆதரிக்கிறது.
மேலும் இதிலுள்ள டால்பி விஷன் ஆனது மேம்பட்ட கலர்கள் மற்றும் காண்ட்ராஸ்ட் உடன் உயர்தர வீடியோவை ரெக்கார்ட் செய்ய அனுமதிக்கிறது. பேட்டரி லைஃப் மற்றும் கனெக்டிவிட்டியை பொறுத்தவரை இது 26 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது என்று ஆப்பிள் கூறுகிறது. இந்த மாடல் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.


Click it and Unblock the Notifications








