Home
Mobile

Amazon-க்கு ஓ போடு.. OFFER விலையில் புத்தம் புது OnePlus போன்.. எந்த மாடல்?

கடந்த ஜூலை 8 ஆம் தேதி அன்று இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 (OnePlus Nord CE 5) ஸ்மார்ட்போனானது அமேசான் வலைத்தளத்தில் நடக்கும் ப்ரைம் டே 2025 விற்பனையின் ஒரு பகுதியாக விற்பனைக்கு வந்துள்ளது. என்ன விலை? என்ன ஆபர்? என்னென்ன அம்சங்கள்? இதோ விவரங்கள்:

என்ன விலை? இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.24,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோலெ 8GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ரூ.26,999 க்கும் மற்றும் ஹை எண்ட் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.28,999 க்கும் வாங்க கிடைக்கிறது.

Amazon-க்கு ஓ போடு.. OFFER விலையில் புத்தம் புது OnePlus போன்!

என்னென்ன சலுகைகள்? ப்ரைம் வாடிக்கையாளர்களுக்கான விற்பனை சலுகைகளை பொறுத்தவரை,எஸ்பிஐ கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனையில் 10% உடனடி தள்ளுபடி (ரூ.1000 வரை), ஐசிஐசிஐ பேங்க் கிரெடிட் கார்டு இஎம்ஐ பரிவர்த்தனையில் 10% உடனடி தள்ளுபடி (ரூ.1000 வரை) உட்பட பல வங்கிகளின் கீழ் டிஸ்கவுண்ட் கிடைக்க்கிறது. கூடவே எக்ஸ்சேன்ஜ் ஆபரும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்னென்ன அம்சங்கள்? ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள் (OnePlus Nord 5 Specifications and Features): டூயல் சிம் ஆதரவுடன் வரும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான நிறுவனத்தின் ஆக்சிஜன் ஓஎஸ் 15 (OxygenOS 15) ஸ்கின் கொண்டு இயங்குகிறது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1400 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான சற்றே சிறிய 6.77-இன்ச் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த போன் 12GB வரை LPDDR5x RAM உடன் இணைக்கப்பட்ட மீடியாடெக் டைமன்சிட்டி 8350 அபெக்ஸ் (MediaTek Dimensity 8350 Apex) சிப்செட் கொண்டு இயங்குகிறது.

கேமராக்களை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமராவை கொண்டுள்ளது. இது சோனி LYT-600 சென்சார், ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) மற்றும் எப் /1.8 அபெர்க்ஷர் உடன் வருகிறது. ப்ரைமரி கேமராவுடன் எப்/2.2 அபெர்க்ஷர் உடனான 8-மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், இது OV08D10 சென்சார் மற்றும் எப்/2.0 அபெர்க்ஷர் உடன் கூடிய 16 மெகாபிக்சல் செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி LTE, வைஃபை 6, ப்ளூடூத் 5.4, NFC, GPS, NavIC மற்றும் USB Type-C போர்ட் ஆகியவைகளை வழங்குகிறது. பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்காக இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் ஸ்கேனர் உடன் வரும் இந்த ஸ்மார்ட்போனில் பல்வேறு டிவைஸ்களை கட்டுப்படுத்த பயன்படுத்தக்கூடிய இன்ப்ரா ரெட் (IR) டிரான்ஸ்மிட்டரும் உள்ளது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5 ஸ்மார்ட்போன் ஆனது 7,100mAh பேட்டரியை கொண்டுள்ளது, இது சேர்க்கப்பட்ட அடாப்டருடன் 80W SuperVOOC சார்ஜிங்கை ஆதரிக்கிறது. கடைசியாக இது தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான IP65 ரேடிங்கையும் கொண்டுள்ளது. அளவீட்டில் இது 163.5×76×8.2மிமீ உள்ளது மற்றும் எடையில் 199 கிராம் உள்ளது.

ஒன்பிளஸ் நோர்ட் 5 விலை விவரங்கள்: இந்தியாவில் ஒன்பிளஸ் நோர்ட் 5 ஸ்மார்ட்போனின் பேஸிக் 8GB ரேம் மற்றும் 128GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.31,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதே ஸ்மார்ட்போனின் 12GB ரேம் + 256GB இன்டர்னல் ஸ்டோரேஜ் மற்றும் 12GB ரேம் + 512GB இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் முறையே ரூ.34,999 மற்றும் ரூ.37,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
OnePlus Nord CE 5 Sale in Amazon Prime Day 2025 Check Price Offers Specifications
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X