தமிழக பேருந்துகளில் Gpay மூலம் டிக்கெட் எடுக்கலாமா? விரைவில் இ-டிக்கெட் & இலவச ஸ்மார்ட் கார்டு வசதி.!

|

கடந்த 2 வருடங்களில், இணைய வழி பணப் பரிவர்த்தனை மற்றும் ஆன்லைன் பேங்கிங் போன்ற டிஜிட்டல் பரிவர்த்தனை சேவைகள் இந்தியாவில் பெரிதும் பெருகிவிட்டது. உண்மையைச் சொல்லப் போனால், உங்கள் கையில் ரொக்கமாகப் பணம் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும், எந்தவித கட்டணமாக இருந்தாலும் அவற்றை சில நொடிகளில் செலுத்திவிட முடியும் என்ற வசதி இப்போது நம் கரங்களுக்குள் வந்துவிட்டது. காய், கறி வாங்குவது முதல் பெட்ரோல் போடுவது வரை அனைத்து இடங்களிலும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்படும் புதிய இ-டிக்கெட் வசதி

தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்படும் புதிய இ-டிக்கெட் வசதி

இப்படி, பல இடங்களில் பெரிதும் பயன்படுத்தப்பட்ட இந்த டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முறை விரைவில் நம்முடைய போக்குவரத்துத் துறையிலும் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. ஆம், தமிழகத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் இ-டிக்கெட் வசதி பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்படும் என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார். மக்களின் நீண்ட நாள் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு ஒருவழியாக இந்த ஆண்டின் இறுதிக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என்பது இப்போது உறுதியாகியுள்ளது.

மக்கள் கையில் காசை விட அதிகமாகப் புழங்கும் டிஜிட்டல் பேமெண்ட் சேவை

மக்கள் கையில் காசை விட அதிகமாகப் புழங்கும் டிஜிட்டல் பேமெண்ட் சேவை

இன்றைய காலகட்டத்தில் நம் அனைவரிடமும் குறைந்தது ஒரு ஸ்மார்ட்போன் சாதனமாவது இருக்கிறது. அதில், எல்லோரிடமும் இணைய சேவை இருக்கிறது. இதனால் இணைய வழி மூலம் பணப் பரிவர்த்தனை மேற்கொள்வோரின் எண்ணிக்கையும் சில ஆண்டுகளில் கிடுகிடுவென அதிகரித்துள்ளது. மக்கள் இப்போது பணத்தை விட டிஜிட்டல் பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்த அதிகம் விரும்புகிறார்கள். காரணம், வெறும் ஒரே ஒரு கிளிக்கில் சில நொடிகளில் பணப் பரிவத்தனை நடைபெறுகிறது.

ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..ஒட்டுமொத்த வாட்ஸ்அப் அனுபவத்தை மாற்ற போகும் 'அந்த' அம்சம்.. இது வந்தால் வேற லெவல்ல இருக்கும்..

சில்லறைக்காக இனி காத்திருக்க வேண்டாம் மக்களே

சில்லறைக்காக இனி காத்திருக்க வேண்டாம் மக்களே

இதில் உள்ள மற்றொரு சிறப்பு என்னவென்றால், சரியான தொகையை மட்டும் நாம் உள்ளிட்டு அவற்றை மிக கச்சிதமாகச் செலுத்திவிட முடியும். பணத்தைக் கொடுத்துவிட்டு மீத சில்லறைக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலைக்கு இங்கு இடமில்லை. இந்த செயல்முறை நிச்சயமாகப் பேருந்து பயணங்களில் பெரிதும் பயனளிக்கும் என்று மக்களால் நம்பப்படுகிறது. குறிப்பாக டிக்கெட் வாங்கிய பின்னர் சில்லறை தட்டுப்பாடு பற்றியோ அல்லது மீத சில்லறை பற்றியோ, காத்திருப்பு பற்றியோ நாம் கவலைப்பட வேண்டியதில்லை.

மக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்த அரசாங்கம்

மக்களின் கோரிக்கைக்குச் செவி சாய்த்த அரசாங்கம்

இது போன்ற சில முக்கிய காரணங்களால், பேருந்துகளில் டிஜிட்டல் கட்டண முறைப்படி கட்டணம் செலுத்த அனுமதிக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் முன்பே கோரிக்கை வைத்திருந்தனர். மக்களின் கோரிக்கை ஒரு வழியாக அரசாங்கத்தின் காதுகளுக்கு எட்டிவிட்டது. இதனை தொடர்ந்து, மிக விரைவில் தமிழக பேருந்துகளில் இ-டிக்கெட் வழங்கும் சேவை துவங்கப்படும் என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இப்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது, பேருந்து பயணிகளை மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளது.

100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?100 ஆண்டுகள் நீடித்து நிலைக்கும் பேட்டரி: டெஸ்லாவின் மாஸ் கண்டுபிடிப்பு எதிர்காலத்தின் புரட்சியா?

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சொன்னது என்ன?

தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் சொன்னது என்ன?

தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறுகையில், 'தமிழக பேருந்துகளில் இந்தாண்டு இறுதிக்குள் வழக்கமான பயணச்சீட்டிற்குப் பதிலாக இ- டிக்கெட் சேவை முறை அறிமுகப்படுத்தப்படும். இந்த திட்டம் செயல்பாட்டிற்கு வந்தவுடன் Google Pay, Phonepe, QR ஸ்கேனிங் போன்ற முறைகளில் பொதுமக்கள் பேருந்துகளில் டிக்கெட் வாங்கி பயன்பெறலாம். இதன் மூலம் பயணிகளின் பயண அனுபவம் மேம்படும் மற்றும் பாதுகாப்பானதாகும்'. என்று கூறியுள்ளார்.

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் கார்டு

தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் கார்டு

இதேபோல், தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக புதிய ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். இப்போது தமிழக பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வசதி நீண்ட காலமாகக் கிடைத்து வருகிறது. இந்நிலையில், பஸ் பாஸ் சேவையை மேம்படுத்த புதிய ஸ்மார்ட் கார்டு சேவையும் அறிமுகம் செய்யப்படவுள்ளது என்பதை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், புதிய ஸ்மார்ட் கார்ட் வழங்குவதற்குத் தேவையான டெண்டர் கோரப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நான்கு ஏலியன் நாகரிகங்களால் பூமிக்கு 'தீங்கா'? பூமி தாக்கப்படுமா? ஷாக் கொடுத்த ஆய்வின் ரகசியம்..நான்கு ஏலியன் நாகரிகங்களால் பூமிக்கு 'தீங்கா'? பூமி தாக்கப்படுமா? ஷாக் கொடுத்த ஆய்வின் ரகசியம்..

மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

மக்களிடம் அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

புதிய ஸ்மார்ட் அட்டை வழங்கப்படும் வரை மாணவ மாணவிகள் ஏற்கனவே வழங்கப்படப் பழைய பஸ் பாஸ் அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்துகளில் பயணம் செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை அமைச்சரின் இந்த அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட இந்த சேவைகள், இந்த ஆண்டின் இறுதிக்குள் களமிறக்கப்படும் என்பதால் இப்போது கூடுதல் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Best Mobiles in India

Read more about:
English summary
Cashless e-Ticketing System Will Be Introduced Soon in Chennai City Buses Says TN Transport Minister : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X