விண்டோஸ் 10 பயனர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 7 டச்பேட் குறிப்புகள்

|

விண்டோஸ் பதிப்புகளில் மிகவும் பிரபலமானது என்ற இடத்தில் இருந்த பழைய விண்டோஸ் 7-யை பின்னுக்கு தள்ளி, அந்த இடத்தை விண்டோஸ் 10 பிடித்துள்ளது. இணைய பகுப்பாய்வு நிறுவனமான ஸ்டேட்கவுண்டரின் கூற்றுப்படி, டெஸ்க்டாப் சந்தையில் 42.78 சதவீதத்தை விண்டோஸ் 10 பெற்றுள்ள நிலையில், விண்டோஸ் 7-க்கு 41.86 சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. இதன்படி, தற்போதைக்கு டெஸ்க்டாப் ஆப்ரேட்டிங் சிஸ்டம் சந்தையில் முடிசூடா மன்னனாக விண்டோஸ் 10 உள்ளது எனலாம்.

விண்டோஸ் 10 பயனர்கள் கட்டாயம் அறிந்திருக்க வேண்டிய 7 டச்பேட் குறிப்பு

கடந்தாண்டு நவம்பர் மாதம் மைக்ரோசாஃப்ட் நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், 600 மில்லியனுக்கும் அதிகமான செயலில் உள்ள சாதனங்களில் விண்டோஸ் 10 இயங்கி வருகிறது என்று தெரிவித்திருந்தது. இந்த பட்டியலில் டெஸ்க்டாப்கள், டெப்லெட்கள், எக்ஸ்பாக்ஸ் ஒன் கான்சோல்கள், ஹாலோலென்ஸ் ஹெட்செட்கள் மற்றும் சர்ஃபேஸ் ஹப் சாதனங்கள் ஆகியவை உட்படும். பெரும்பாலான சாதனங்கள் (லேப்டாப்கள் அல்லது டெஸ்க்டாப்கள்) விண்டோஸ் 10-ல் தான் இயங்குகின்றன.

அதே நேரத்தில், இந்த ஆப்ரேட்டிங் சிஸ்டத்தின் எல்லா அம்சங்களையும் குறித்து நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை. எடுத்துக்காட்டாக, மைக்ரோசாஃப்ட் விண்டோஸ் 10-ல் பல டச்பேட் குறிப்புகள் காணப்படுகின்றன. அதில் நீங்கள் அறிந்திருக்க வேண்டிய முக்கியமான 7 டச்பேட் குறிப்புகளைக் கீழே பட்டியலிட்டுள்ளோம். இதில் உள்ள சில குறிப்புகள் நுட்பமான டச்பேட்களில் மட்டுமே இயங்கும், எனவே உங்களுக்கு அது செயல்படவில்லை என கவலைப்பட வேண்டாம்.

உருட்டுதல்:

உருட்டுதல்:

நீங்கள் டச்பேட்டில் இரு விரல்களை வைத்து, செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக உருட்ட வேண்டும்.

பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல்

பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதல்

பெரிதாக்குதல் அல்லது சிறிதாக்குதலுக்கு, இரு விரல்களை டச்பேட் மீது வைத்து இரண்டையும் சுருக்க வேண்டும் அல்லது விரிக்க வேண்டும்.

கூடுதல் கமெண்டுகளைக் காட்டுதல் (ரைட்-கிளிக் செய்வதற்கு ஒத்தது):

கூடுதல் கமெண்டுகளைக் காட்டுதல் (ரைட்-கிளிக் செய்வதற்கு ஒத்தது):

இதற்கு இரண்டு விரல்களைக் கொண்டு டச்பேட் மீது தட்ட வேண்டும் அல்லது கீழ் வலது ஓரத்தில் அழுத்த வேண்டும்.

திறந்த எல்லா விண்டோஸ்களைக் பார்க்க:

திறந்த எல்லா விண்டோஸ்களைக் பார்க்க:

டச்பேட் மீது மூன்று விரல்களை வைத்துவிட்டு, உங்களுக்கு எதிர் திசையில் தேய்க்க வேண்டும்.

விண்டோஸ் 10-யைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்டிவைரஸ்: பிட்டிஃபென்டர்விண்டோஸ் 10-யைப் பாதுகாக்கும் சிறந்த ஆன்டிவைரஸ்: பிட்டிஃபென்டர்

How to download your e-Adhaar using UIDAI - Official Website in Tamil.?
கார்டானா திறக்க:

கார்டானா திறக்க:

மைக்ரோசாஃப்டின் விரிச்சுவல் அசிஸ்டெண்ட் கார்டானாவை திறக்க, டச்பேட்டில் மூன்று விரல்களைக் கொண்டு தட்ட வேண்டும்.

திறந்த விண்டோக்களை இணைத்தல்:

திறந்த விண்டோக்களை இணைத்தல்:

திறந்த விண்டோக்களை இணைப்பதற்கு, டச்பேட் மீது மூன்று விரல்களை வைத்து வலது அல்லது இடதுபுறம் தேய்க்க வேண்டும்.

விரிச்சுவல் டெஸ்க்டாப்களை இணைத்தல்:

விரிச்சுவல் டெஸ்க்டாப்களை இணைத்தல்:

டெஸ்க்டாப் மீது நான்கு விரல்களை வைத்து, வலது அல்லது இடதுபுறம் தேய்க்க வேண்டும்.

Best Mobiles in India

English summary
Microsoft Windows 10 comes with many touchpad gestures. We have listed seven touchpad gestures that you should now.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X