Home
News

கேபிள் TV கதை முடிந்தது.. ரூ.151 க்கு 1000+ டிவி சேனல்.. BSNL IFTV க்கு பிரீமியம் சேனல்கள்.. இதை பண்ணுங்க!

பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனத்தின் எப்டிடிஎச் (FTTH) என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஃபைபர் டூ தி ஹோம் (Fiber to the home) சேவையை பெறும் கஸ்டமர்களுக்கு மாதத்துக்கு வெறும் ரூ.151 செலவில் 1000+ லைவ் டிவி சேனல்களின் (Live TV Channels) சந்தா கொடுக்கப்படுகிறது. இந்த லைவ் டிவி சேனல்களை பார்க்க டிடிஎச் தேவையில்லை, இன்டர்நெட் தேவையில்லை. கேபிள் டிவி போல எளிதாக பார்த்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் ஐஎப்டிவி (BSNL IFTV) சேவைகள் வழியாக லைவ் டிவி சேனல்களின் சந்தா கொடுக்கப்படுகிறது. ஐஎப்டிவி என்பது, இன்ட்ராநெட் ஃபைபர் டிவியை (Intranet Fiber TV) குறிக்கிறது. ஆகவே, ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் ஃபைபர் திட்டங்களில் லைவ் டிவி சேனல்களை பார்க்க இன்டர்நெட் தேவைப்படுவதை போல இதற்கு தேவையில்லை.

கேபிள் TV கதை முடிந்தது.. ரூ.151 க்கு 1000+ டிவி சேனல்.. BSNL IFTV!

கேபில் டிவியை போல நேரடியாக பார்த்து கொள்ளலாம். ஆகவே, ஃபைபர் டூ தி ஹோம் திட்டத்தில் டேட்டா இல்லாமல் போனாலும், லைவ் சேனல்களை எச்டி தரத்தில் பார்த்து கொள்ளலாம். இதில் லைட் பிளே எச்டி திட்டம் (Lite Play HD Plan) ரூ.151 விலைக்கு கிடைக்கிறது. ஸ்டார்டர் பிளே திட்டம் (Starter Play Plan) ரூ.61 விலைக்கு கிடைக்கிறது.

இந்த திட்டங்களை பெறுவது எப்படி?
1. பிஎஸ்என்எல் நிறுவனத்தின் ஃபைபர் டூ தி ஹோம் திட்டங்களை பெறும் கஸ்டமர்களாக இருக்க வேண்டும். மொபைல் நம்பருடன் ஃபைபர் டூ தி ஹோம் கனெக்சன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
2. புதிதாக பிஎஸ்என்எல் ஃபைபர் டூ தி ஹோம் திட்டங்களை பெற்றாலும், இந்த ஐஎப்டிவி திட்டங்களை பெற்று கொள்ளலாம். ஆகவே, ஃபைபர் டூ தி ஹோம் திட்டங்களுக்கான கட்டணத்தை செலுத்தி பெற்ற பிறகு, கூடுதலாக இந்த ரூ.151 அல்லது ரூ.61 விலை கொண்ட ஐஎப்டிவி திட்டங்களை பெற வேண்டும்.
3. பிஎஸ்என்எல் போர்டல், பிஎஸ்என்எல் செல்ப்கேர் ஆப் மற்றும் வாட்ஸ்அப் வழியாக இந்த ஐஎப்டிவி திட்டங்களை பெற்று கொள்ளலாம். வாட்ஸ்அப் வழியாக எளிதாக முடிக்கலாம்.
4. 1800-4444 என்னும் வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi என்று மெசேஜ் அனுப்பி கொள்ளுங்கள். உங்களது மொபைல் நம்பர் பிஎஸ்என்எல் ஃபைபர் திட்டங்களுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
5. இப்படி இணைக்கப்பட்டிருந்தால் மட்டுமே, ஐஎப்டிவி சேவையை ஆக்டிவேட் செய்ய முடியும்.
6. Hi மெசேஜ் அனுப்பியவுடன் எப்டிடிஎச்/லேண்ட்லைன் (FTTH/Landline) விருப்பம் தோன்றும். இதை கிளிக் செய்தால், ஆக்டிவேட் ஐஎப்டிவி (Activate IPTV) விருப்பம் தோன்றும். இதையும் கிளிக் செய்து கொள்ளுங்கள்.
7. இப்போது, ஐஎப்டிவி சேவையுடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும். பிறகு உங்களது விவரங்களை கொடுக்க வேண்டும்.
8. இதில் திட்டங்களும் தோன்றும். இதையும் தேர்ந்தெடுத்து கொள்ளலாம். ஐஎப்டிவி சேவையை ஆக்டிவேட் செய்தாலே, இலவசமாக கிடைக்கும். லைவ் டிவி சேனல்கள் கொடுக்கப்படும்.

ஏற்கனவே, பிஎஸ்என்எல் ரூ 625 திட்டத்தில் லைவ் டிவி சேனல்களின் சலுகை கூடுதலாக கொடுக்கப்படுகிறது. அதாவது, இந்த ஃபைபர் திட்டத்துக்கு கிடைக்கும் சலுகைகளுடன் கூடுதலாக லைவ் டிவி சேனல்களின் சலுகையும் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தை பெறும் கஸ்டமர்களுக்கு 75 எம்பிபிஎஸ் வேகத்தில் ஃபைபர் டேட்டா கிடைக்கும்.

மாதத்துக்கு 2500 ஜிபி டேட்டாவை பயன்படுத்தி கொள்ளலாம். 4 எம்பிபிஎஸ் வேகத்தில் போஸ்ட் டேட்டாவை பெறலாம். வாய்ஸ் கால்களின் சலுகையும் கிடைக்கும். மேலும், 600+ லைவ் டிவி சேனல்கள் கிடைக்கும். இதில் 127 பிரீமியம் சேனல்களும் கிடைக்கும். ஜியோஹாட்ஸ்டார் (JioHotstar) மற்றும் சோனிலிவ் (SonyLIV) ஆகிய 2 ஓடிடி ஆப்களின் சந்தாவும் கொடுக்கப்படும். இப்படி ஃபைபர் திட்டங்களில் லைவ் டிவி சேனல்கள் கிடைக்கின்றன.

More from GizBot

Best Mobiles in India

English summary
BSNL IFTV Rs 151 Lite Play HD Plan With 1000 Live TV Channels Every FTTH Customers Need To Know This
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X