Home
News

ஜியோ பீதி: வோடாபோனின் ரூ.458 மற்றும் ரூ.509/- செல்லுபடி நீட்டிப்பு.!

இந்த இரண்டு புதிய திட்டங்களுமே மும்பை, தமிழ்நாடு போன்ற வோடபோன் நிறுவனத்தின் பிரபலாமான 4ஜி வட்டங்களின் பெரும்பாலானவைகளில் செல்லுபடியாகும்.

By Muthuraj

இறுதியாக, வோடபோன் இந்தியா நிறுவனம் தற்போது இந்தியாவில் நிலவும் கட்டண யுத்தத்திற்கு செவி சாய்த்துள்ளது.

ஜியோ பீதி: வோடாபோனின் ரூ.458 மற்றும் ரூ.509/- செல்லுபடி நீட்டிப்பு.!

இதர நிறுவனங்களிடம் இருந்து கிடைக்கும் புதிய கட்டணத் திட்டங்களை எதிர் கொள்ளும் நோக்கத்தின் கீழ் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான வோடாபோன் அதன் இரு நீண்ட கால திட்டங்களின் செல்லுபடியை அதிகரித்துள்ளது.

ரூ.458/- மற்றும் ரூ.509/- ஆகிய இரண்டு திட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்கள் என்ன.? இந்த திட்டங்களின் நன்மைகள் என்ன.? போன்றவற்றை விரிவாக காண்போம்.

தமிழ்நாடு உட்பட

தமிழ்நாடு உட்பட

இந்த இரண்டு புதிய திட்டங்களுமே மும்பை, தமிழ்நாடு போன்ற வோடபோன் நிறுவனத்தின் பிரபலாமான 4ஜி வட்டங்களின் பெரும்பாலானவைகளில் செல்லுபடியாகும். இருப்பினும் பீகார், ஆந்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா போன்ற பல வட்டாரங்களில், இன்னுமும் பழைய திட்டங்களே கிடைக்கிறது.

மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடி

மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடி

திருத்தங்களை பொறுத்தமட்டில், வோடபோன் ரூ.458/- கட்டணத் திட்டம் இப்போது மொத்தம் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். நன்மைகளை பொறுத்தமட்டில், ஒரு நாளைக்கு1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடி

மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடி

மற்றொரு திட்டமான ரூ.509/- வோடாபோன் கட்டணத் திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அதன் நன்மைகளை வழங்கி வந்தது. இனி மொத்தம் 91 நாட்களுக்கு - ஒரு நாளைக்கு1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி ஆகிய நன்மைகளை வழங்குகிறது.

ரோமிங் அழைப்புகள் உட்பட

ரோமிங் அழைப்புகள் உட்பட

வோடாபோனின் ரூ.399/- திட்டமானதும் மேற்கண்ட அதே நன்மைகளை (ஒரு நாளைக்கு1ஜிபி அளவிலான 3ஜி / 4ஜி டேட்டா, நாள் ஒன்றிற்கு 100 எஸ்எம்எஸ், ரோமிங் அழைப்புகள் உட்பட வரம்பற்ற உள்ளூர் / எஸ்டிடி) மொத்தம் 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வோல்ட் சேவை

வோல்ட் சேவை

முக்கிய குறிப்பாக, வோடபோனின் வரம்பற்ற குரல் அழைப்புகள் நாள் ஒன்றுக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்ற வரம்பிற்கு உட்பட்டது. இந்த மாத இறுதியில் சில மெட்ரோ நகரங்களில் நிறுவனத்தின் 4ஜி எல்டிஇ நெட்வொர்க்கில் வோல்ட் சேவைகளை வழங்குமென வோடபோன் ஏற்கனவே அறிவித்துள்ளது.

வரம்பற்ற குரல் அழைப்பு

வரம்பற்ற குரல் அழைப்பு

வோல்ட் சேவைகளின் வெளியீட்டுக்குப் பிறகு, வோடபோன் நிறுவனமானது பாரதி ஏர்டெல் மற்றும் ரிலையன்ஸ் ஜியோவின் திட்டங்களை போலவே எந்தவிதமான வரம்பும் இல்லாமல் வரம்பற்ற குரல் அழைப்புகளை வழங்கி போட்டியாளர் ஆபரேட்டர்களுடன் பொருந்தலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.448/- மற்றும் ரூ.509

ரூ.448/- மற்றும் ரூ.509

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ஏர்டெல் நிறுவனம், சமீபத்தில் அதன் ரூ.448/- மற்றும் ரூ.509/- என்கிற திறந்தவெளி சந்தை கட்டணத்திட்டங்களில் சில மாற்றங்களை செய்தது. அதன்படி ரூ.448/- ஆனது இப்போது வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி அளவிலான டேட்டா ஆகிய நன்மைகளை 84 நாட்களுக்கு வழங்குகிறது.

குறைவான விலையில் ரிலையன்ஸ் ஜியோ

குறைவான விலையில் ரிலையன்ஸ் ஜியோ

மறுகையில் உள்ள ரூ.509/- திட்டமானது அதே நன்மைகளை (வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு ஒரு ஜிபி அளவிலான டேட்டா) மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. வோடாபோனை விட சிறப்பான சலுகைகளை பார்தி ஏர்டெல் வழங்க, அதை விட குறைவான விலையில் ரிலையன்ஸ் ஜியோ அதன் திட்டங்களை தொகுத்து வழங்கி வருகிறது.

Best Mobiles in India

English summary
Vodafone India Extends the Validity of Rs 458 and Rs 509 Tariff Plans to 84 Days and 91 Days. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X