ஜியோ பீதியில் ஏர்டெல், ஐடியா: 4 திட்டங்களில் திருத்தம், கூடுதல் நன்மை அறிவிப்பு.!
நேற்று ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டதின் விளைவாகவும் அதனுடன் போட்டியிடும் முனைப்பிலும் இந்த நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதென்பது வெளிப்படை.
இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு இயக்குநர்களான பார்தி ஏர்டெல் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் தங்களின் பிரபலமான கட்டணத் திட்டங்கள் சிலவற்றை திருத்தியுளதாக அறிவித்துள்ளன.

நேற்று ரிலையன்ஸ் ஜியோவின் புதிய சலுகைகளுடன் அறிவிக்கப்பட்டதின் விளைவாகவும் அதனுடன் போட்டியிடும் முனைப்பிலும் இந்த நடவடிக்கைகள் நிகழ்த்தப்பட்டுள்ளதென்பது வெளிப்படை. ஐடியா செல்லுலார் ஆனது அதன் ரூ.449/- மற்றும் ரூ.509/- கட்டணத் திட்டங்களை நிறுத்தியுள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானது ரூ.448/- மற்றும் ரூ.509/- திட்டங்களை நிறுத்தியுள்ளது.

எந்தவொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும்
சுவாரசியமான விடயம் என்னவென்றால் ஏர்டெல் மற்றும் ஐடியாவின் இந்த திட்டங்கள் அனைத்துமே நாடு முழுவதும் செல்லுபடியாகும் திறந்தவெளி சந்தை திட்டங்களாகும். இதன் பொருள் எந்தவொரு ப்ரீபெய்ட் வாடிக்கையாளரும் இந்த திட்டங்களைப் பெற முடியும்.

தற்போது அது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும்
பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் கட்டண திருத்தங்களை பொறுத்தமட்டில், அதன் பிரபலமான ரூ.448/- கட்டணத் திட்டமானது முன்னர் 70 நாட்கள் செல்லுபடியாகும் வண்ணம் இருந்தது, தற்போது அது 82 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை வழங்குகிறது.

91 நாட்களுக்கு செல்லுபடியாகும்
அதேபோல், அதன் ரூ.509/- கட்டணத் திட்டமானது இப்போது நாள் ஒன்றிற்கு 1 ஜிபி அளவிலான தரவை மொத்தம் 91 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் வழங்குகிறது. இதே திட்டம் முன்னர் 84 நாட்கள் என்கிற செல்லுபடியை கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஏர்டெல் டிவி மற்றும் வைன்க் ம்யூசிக்
உடன் ரோமிங் உட்பட வரம்பற்ற அழைப்புகள், நாள் ஒன்றுக்கு 100 எஸ்எம்எஸ், மற்றும் ஏர்டெல் டிவி மற்றும் வைன்க் ம்யூசிக் போன்ற ஏர்டெல் சேவைகளுக்கான பிரீமியம் அணுகல் ஆகிய நன்மைகளையும் குறிப்பிட்டுள்ள செல்லுபடி காலம் வரையிலாக இந்த இரண்டு திட்டங்களும் வழங்குகின்றன.

82 நாட்களுக்கு செல்லுபடி
அடுத்ததாக, ஐடியா செல்லுலார் நிறுவனத்தின் கட்டணத் திட்ட திருத்தங்களை பொறுத்தமட்டில், அதன் ரூ.449/- மற்றும் ரூ.509/- ஆகிய ரீசார்ஜ் திட்டங்கள் திருத்திப்பட்டுள்ளன. மொத்தம் 70 நாட்கள் செல்லுபடியாகும் ரூ.449/-ஆனது இனி 82 நாட்களுக்கு செல்லுபடியாகும்.

வரம்பற்ற குரல் அழைப்புகள்
அதேபோல 70 நாட்களுக்கு செல்லுபடியாகும் வண்ணம் அறிமுகமான ரூ.509/- திட்டமானதும் இனி 91 நாட்களுக்கு செல்லுபடியாகும். இந்த இரண்டு திட்டங்களுமே வரம்பற்ற குரல் அழைப்புகள், ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஐடியா மூவிஸ் மற்றும் டிவி, ஐடியா மேகஸின்போ ன்ற ஐடியாவின் டிஜிட்டல் உள்ளடக்க பயன்பாடுகளுக்கான பிரீமியம் சந்தாவைவும் வழங்குகின்றன.

வரம்பை கொண்டுள்ளது
இருப்பினும், ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகியவற்றைப் போலல்லாமல், ஐடியா செல்லுலார் குரல் அழைப்புகளின் மீது ஒரு நாளைக்கு 250 நிமிடங்கள் மற்றும் வாரத்திற்கு 1000 நிமிடங்கள் என்ற வரம்பை கொண்டுள்ளது. ஏர்டெல் மற்றும் ஜியோ ஆகிய இரு நிறுவனங்களும் தினசரி அல்லது வாராந்திர அல்லது மாதாந்திர வரம்பு இல்லாமல் குரல் அழைப்புகளை வழங்குகின்றன.


Click it and Unblock the Notifications