ஜியோ அதிரடி: 8 திட்டங்கள் மீது நம்பமுடியாத விலைகுறைப்பு & 50% கூடுதல் டேட்டா.!

Written By:

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது மற்றொரு புத்தாண்டு பரிசை அதன் வாடிக்கையாளர்களுக்கு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது ஒரு ஜிபி அளவிலான அதிவேக டேட்டாவின் மதிப்பை ரூ.4/-க்கு கொண்டுவந்துள்ளது.

8 திட்டங்கள் மீது நம்பமுடியாத விலைகுறைப்பு & 50% கூடுதல் டேட்டா.!

இந்த அறிவிப்பு பார்தி ஏர்டெல், வோடாபோன் மற்றும் பிஎஸ்என்எல் போன்ற இதர டெலிகாம் நிறுவனங்களுக்கு எம்மாதிரியான நெருக்கடிகளை வழங்குமென்பதும் ஒருபக்கமிருக்க, ஜியோ திருத்தி (கிட்டத்தட்ட புதிதாக) அறிவித்துள்ள திட்டங்களின் நன்மைகள் மற்றும் செல்லுபடியாகும் காலம் ஆகிய விவரங்களை முதலில் காண்போம்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது

மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது

'ஹேப்பி நியூ இயர் 2018' திட்டத்தின் ஒரு பகுதியாக, ரிலையன்ஸ் ஜியோ அதன் கட்டண திட்டங்களின் விலையை குறைத்தும், நன்மைகளை அதிகரித்தும் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் கீழ் நாள் ஒன்றிக்கு 1ஜிபி வழங்கும் 4 திட்டங்களும், மற்றும் நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி வழங்கும் 4 திட்டங்களுமென மொத்தம் 8 திட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது.

தற்போது ரூ.149/-க்கு கிடைக்கும்

தற்போது ரூ.149/-க்கு கிடைக்கும்

ரூ.199/-க்கு கிடைத்த திட்டமானது தற்போது ரூ.149/-க்கு கிடைக்கும். மொத்தம் 28ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 28 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

தற்போது ரூ.349/-க்கு கிடைக்கும்

தற்போது ரூ.349/-க்கு கிடைக்கும்

ரூ.399/-க்கு கிடைத்த திட்டமானது தற்போது ரூ.349/-க்கு கிடைக்கும். மொத்தம் 70ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 70 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

தற்போது ரூ.399/-க்கு கிடைக்கும்

தற்போது ரூ.399/-க்கு கிடைக்கும்

ரூ.459/-க்கு கிடைத்த திட்டமானது தற்போது ரூ.399/-க்கு கிடைக்கும். மொத்தம் 84ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 84 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

தற்போது ரூ.449/-க்கு கிடைக்கும்

தற்போது ரூ.449/-க்கு கிடைக்கும்

ரூ.499/-க்கு கிடைத்த திட்டமானது தற்போது ரூ.449/-க்கு கிடைக்கும். மொத்தம் 91ஜிபி அளவிலான டேட்டாவை நாள் ஒன்றிற்கு 1ஜிபி என்கிற விகிதத்தில் வழங்கும் இந்த திட்டமானது 91 நாட்களுக்கு செல்லுபடியாகும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

மொத்தம் 42ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

மொத்தம் 42ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 28 நாட்களுக்கு 28ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ.198/- திட்டமானது இனி அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 42ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

மொத்தம் 105ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

மொத்தம் 105ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 70 நாட்களுக்கு 70ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ.398/- திட்டமானது இனி அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 105ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

மொத்தம் 126ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

மொத்தம் 126ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 84 நாட்களுக்கு 84ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ448/- திட்டமானது இனி அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 126ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

மொத்தம் 136ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

மொத்தம் 136ஜிபி அளவிலான 4ஜி டேட்டா

நாள் ஒன்றிற்கு 1ஜிபி டேட்டா என மொத்தம் 91 நாட்களுக்கு 91ஜிபி அளவிலான டேட்டாவை வழங்கி வந்த ரூ498/- திட்டமானது இனி அதே செல்லுபடி காலத்திற்குள், நாள் ஒன்றிற்கு 1.5ஜிபி டேட்டா என மொத்தம் 136ஜிபி அளவிலான 4ஜி டேட்டாவை வழங்கும். உடன் வரம்பற்ற இலவச அழைப்புகள், எஸ்எம்எஸ் மற்றும் ஜியோ ஆப்ஸ் அணுகல் ஆகிய நன்மைகளையும் வழங்கும்.

வருகிற ஜனவரி 9, 2018 முதல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்

வருகிற ஜனவரி 9, 2018 முதல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும்

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் வருகிற ஜனவரி 9, 2018 முதல் பயனர்களுக்கு ரீசார்ஜ் செய்ய கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரிலையன்ஸ் ஜியோவின் இந்த அதிரடியான கட்டண திருத்தங்களுக்கு இதர நிறுவனங்களின் பதிலடி திட்டங்கள் என்ன என்பதை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள தமிழ் கிஸ்பாட் வலைத்தளத்துடன் இணைந்திருங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Jio revises plans, Rs 149 recharge to now give you 1GB per day data. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot