ஏர்டெல் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு 5ஜிபி இலவச டேட்டா.!
ஏர்டெல் வழங்கும் இலவச 5ஜிபி டேட்டாவை பெற முதலில் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் இயங்குதளங்களில் மைஏர்டெல் ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.
ஏர்டெல் நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி ஏர்டெல் மைஹோம் ரிவார்ட்ஸ் திட்டத்தின் கீழ் ஏர்டெல் போஸ்ட்பெயிட் அல்லது டிடிஎச் இணைப்புகளை பயன்படுத்தும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே கூடுதல் டேட்டா வழங்கப்பட்ட நிலையில் இப்போது 5ஜிபி இலவச டேட்டா அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல் வழங்கும் இலவச கூடுதல் டேட்டா பொறுத்தவரை போஸ்ட்பெயிட் மற்றும் பிராட்பேண்ட் இணைப்பை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் மைஏர்டெல் ஆப் மூலம் பெற முடியும்.
இப்போது ஏர்டெல் போஸ்ட்பெயிட் இணைப்பை பயன்படுத்தி வரும் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு இனிமேல் ஒவ்வோரு மாதமும் இலவசமாக 5ஜிபி மொபைல் டேட்டா வழங்கப்படும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.
ஏர்டெல் அறிவித்துள்ள இந்த புதிய இலவச திட்டம் பொறுத்தவரை ஒவ்வொரு வட்டராத்திலும் தேர்வு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிராட்பேண்ட் டேட்டா ரோல்ஓவர் வழங்கும் அனைத்து திட்டங்களிலும் கூடுதல் டேட்டா வழங்கப்படும் என ஏர்டெல் நிறுவனம் சார்பில் அறிவிப்பு வெளிவந்துள்ளது.
ஏர்டெல் வழங்கும் இலவச 5ஜிபி டேட்டாவை பெற முதலில் ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் இயங்குதளங்களில் மைஏர்டெல் ஆப் இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

அதன்பின்பு போஸ்ட்பெயிட் எண் கொண்டு அவற்றில் பதிவு செய்து, ஒரு முறை பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் உறுதி செய்ய வேண்டும்.
அடுத்து மைஏர்டெல் ஆப் பகுதியில் இலவசமாக வழங்கப்படும் 5ஜிபி டேட்டா விளம்பரத்தில் கிளிக் செய்து, அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி இலவச மாத டேட்டாவை பெற முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








