Home
Mobile

புதுமையை வழங்கும் சோனி!

By Super
புதுமையை வழங்கும் சோனி!

எக்ஸ்பீரியா வரிசையில் தனது மூன்று ஸ்மார்ட்போன்களுக்கு ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷன் வசதியினை வழங்குகிறது சோனி நிறுவனம்.

எக்ஸ்பீரியா கோ, எக்ஸ்பீரியா யூ, எக்ஸ்பீரியா சோலா ஆகிய ஸ்மார்ட்போன்களில் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினை வழங்குகிறது சோனி.

ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தினை அதிகம் அப்டேட் செய்து வந்த எச்டிசி நிறுவனத்திற்கு அடுத்ததாக, சோனி நிறுவனமும் தனது எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்களுக்கு ஐசிஎஸ் இயங்குதள அப்டேஷன் வசதியினை வழங்குகிறது.

நேற்றிலிருந்த இந்த ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் அப்டேஷன் வசதியை துவங்கியுள்ளது சோனி நிறுவனம். எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் திரை வசதியினையும், 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொடுக்கும். இதில் 2592 X 1944 பிக்ஸல் கேமார துல்லியத்தினை வழங்கும் 5 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனும் 3.5 இஞ்ச் திரை வசதியினை வழங்கும். ஆனால் எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனின் திரை துல்லியம், எக்ஸ்பீரியா கோ ஸ்மார்ட்போனை விடவும் கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனால் இதில் 480 X 854 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா மட்டும் அல்லாமல், விஜிஏ முகப்பு கேமராவும் கொடுக்கப்பட்டிருக்கும்.

எக்ஸ்பீரியா கோ மற்றும் எக்ஸ்பீரியா யூ ஸ்மார்ட்போனை விடவும், எக்ஸ்பீரியா சோலா ஸ்மார்ட்போன் சற்று அகன்ற திரையினை வழங்கும். இதில் 3.7 இஞ்ச் திரை வசதியினை பெறலாம். இதில் 2592 X 1944 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். இதில் 5 மெகா பிக்ஸல் கேமராவும் வழங்கப்படும்.

இப்படி சிறந்த தொழில் நுட்ப வசதியினை கொடுக்கும் இந்த மூன்று எக்ஸ்பீரயா வரிசை ஸ்மார்ட்போன்களிலும் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனை பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X