சூப்பாரன கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்கும் சோனி

By Karthikeyan
|
சூப்பாரன கேமராவுடன் புதிய ஸ்மார்ட்போனைக் களமிறக்கும் சோனி

கடந்த மாதம் சோனி நிறுவனம், எக்ஸ்பீரியா எஸ்எல் என்ற தனது புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. தற்போது இந்த போன் விற்பனைக்கு வத்திருக்கிறது. இந்த போன் ரூ.30,999க்கு விற்கப்படுகிறது.

இன்பிபீம் மற்றும் பிலிப்கார் போன்ற ஆன்லைன்களில் இந்த போனை வாங்கலாம். இந்த போன் ஏராளமான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.

குறிப்பாக இதன் 4.3 இன்ச் எச்டி திரை மிகவும் துல்லியமாக இருக்கும். அடுத்ததாக இந்த போனில் உள்ள கேமரா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் இந்த போன் ஆட்டோ போக்கஸ், 16எக்ஸ் டிஜிட்டல் சூம் மற்றும் எல்இடி ப்ளாஷ் போன்ற வசதிகளுடன் கூடிய 12.1எம்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. இந்த கேமரா மூலம் சூப்பரான வீடியோக்கள் மற்றும் போட்டோக்களை எடுக்க முடியும். அதோடு 1.3எம்பி முகப்பு கேமராவையும் இந்த போனில் பார்க்க முடியும்.

அடுத்ததாக இந்த போன் 32ஜிபி ப்ளாஷ் மெமரி மற்றும் 1ஜிபி ரேம் போன்ற வசதிகளையும் கொண்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு 4.0 இயங்கு தளத்தில் வரும் இந்த போனை ஆன்ட்ராய்டு 4.1 இயங்கு தளத்திற்கு அப்க்ரேட் செய்யவும் முடியும்.

இந்த போனில் 1.7 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் எம்எஸ்எம்8260 சினாப்ட்ராகன் டூவல் கோர் ப்ராசஸர் உள்ளதால் இந்த போன் தாறுமாறான வேகத்தில் இயங்கும் என்று நம்பலாம். மேலும் இணைப்பு வசதிகளுக்காக இந்த போன் வைபை, எச்டிஎம்ஐ சப்போர்ட் மற்றும் டிஎல்என்எ சான்று போன்றவற்றையும் கொண்டுள்ளது.

இந்த போனில் சோனியின் வாக்மேன் அப்ளிகேசன் உள்ளதால் இதில் சூப்பரா இசை கேட்கலாம்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X