ஆன்லைன் வலைத்தளங்களில் உலா வரும் சோனி ஸ்மார்ட்போன்!

புதிய எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போனான எக்ஸ்பீரியா எஸ்எல், ஆன்லைன் வலைத்தளங்களில் குறைந்த விலையில் கிடைப்பதாக ஒரு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போனின் விலை விவரம் பற்றி பார்ப்பதற்கும் முன்பு இந்த தொழில் நுட்ப வசதியினையும் மீண்டும் ஒரு முறை தெரிந்து கொள்ளலாம்.
இந்த எக்ஸ்பீரியா எஸ்எல் ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதி மூலம் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். இதில் டிஎப்டி திரை தொழில் நுட்ப வசதியினால் தெளிவான தகவல்களை திரையில் காணலாம். ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன், ஜெல்லி பீன் அப்கிரேட் வசதியினையும் கூடிய விரைவில் பெறும். இதன் பிராசஸர் சிறப்பான வேகத்தினை கொடுக்கும் என்று கூறலாம். இதில் 1.7 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரையும் வழங்கும்.
எக்ஸ்பீரியா எஸ்எல் ஸ்மார்ட்போனின் கேமரா வசதி பற்றி நிச்சயம் பார்க்க வேண்டும். பொதுவாகவே சோனி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களின் கேமரா மிக பிரசித்தம் பெற்றதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனிலும் 12.1 மெகா பிக்ஸல் கேமராவினை எளிதாக பெறலாம். அதோடு 1.3 மெகா பிக்ஸல் கொண்ட முகப்பு கேமராவும் இதில் அளிக்கப்படும்.
எஃப்எம் வசதியில் இருந்து என்எப்சி தொழில் நுட்பம் வரை எல்லாவற்றையும் எளிதாக பெறலாம். இந்த ஸ்மார்ட்போன் ப்ளே ஸ்டேஷன் தர சான்றிதல் பெற்றதாக இருக்கும் என்பதால், இந்த ப்ளே ஸ்டேஷன் வசதி மூலம் நிறைய கேம்களை விளையாடலாம். இந்த ஸ்மார்ட்போனை ரூ. 30,999 விலையில் ஃபிலிப்கார்ட், இன்ஃபிபீம் மற்றும் ஸ்னாப்டீல் ஆகிய வலைத்தளங்களில் பெறலாம்.


Click it and Unblock the Notifications