Home
Mobile

ப்ரீ-ஆர்டரில் எக்ஸ்பீரியா மிரோ ஸ்மார்ட்போன்!

By Super
ப்ரீ-ஆர்டரில் எக்ஸ்பீரியா மிரோ ஸ்மார்ட்போன்!

எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபமாக நிறைய எக்ஸ்பீரியா வரிசை ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தது சோனி நிறுவனம்.

எக்ஸ்பீரியா டிப்போ, எக்ஸ்பீரியா டிப்போ டியூவல் ஆகிய ஸ்மார்ட்போன்களை வரிசையாக வெளியிடும் சோனி, அடுத்து எக்ஸ்பீரியா மிரோ என்ற ஸ்மார்ட்போன் பற்றியும் அறிமுகம் செய்கிறது. இந்த ஸ்மார்ட்போனை ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்டரில் பெறலாம்.

ப்ரீ-ஆர்டர் விலை விவரம் பற்றி தெரிந்து கொள்ளும் முன்பு இந்த ஸ்மார்ட்போனில் என்னென்ன வசதிகளை பெறலாம் என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்த ஸ்மார்ட்போனில் அசத்தலான ஆன்ட்ராய்டு வி4.0 ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வசதியினை பெறலாம்.

5 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும் இந்த எக்ஸ்பீரியா மிரோ ஸ்மார்ட்போனில், 0.3 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவினையும் எளிதாக பயன்படுத்த முடியும். ஏனெனில் இந்த ஸ்மார்ட்போனில் சிறப்பாக செயல்பாட்டுடன் டியூவல் கேமரா வசதி கொடுக்கப்படும்.

3.5 இஞ்ச் டிஎப்டி தொடுதிரையினை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கும். இந்த ஸ்மார்ட்போன் முதலில் கூறியது போல ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளம் கொண்டதாக இருப்பினும், பிராசஸரின் துணையும் தேவைப்படுகிறது. இதனால் இதில் 800 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ஸ்கார்பியன் பிராசஸர் வசதியினை பெற முடியும்.

இன்டர்நெட் பயன்பாடுகள் தேவை என்று கருதுபவர்கள் இதன் வைபை தொழில் நுட்ப வசதியினை பயன்படுத்தி கொள்ளலாம். 1,500 எம்ஏஎச் பேட்டரி இதில் சிறந்த தொழில் நுட்ப வசதிக்கு சப்போர்ட் செய்யும் வகையில் பயன்படும்.

ஃப்லிப்கார்ட் வலைத்தளத்தில் இந்த எக்ஸ்பீரியா மிரோ ஸ்மார்ட்போனை ரூ. 14,499 விலையில் ப்ரீ-ஆர்டரில் பெறலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X