சாம்சங் கேலக்ஸி நோட் 8 என்னென்ன சிறப்பம்சங்கள்?

சாம்சங் கேலக்ஸி நோட் 8 : 6.13 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!

By Prakash
|

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சாம்சங் கேலக்ஸி நோட் 7 வெளியிடப்பட்டது, இவற்றில் பல்வேறு செயல்திறன் இருந்தது, மேலும் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றில் இடம்பெற்றிருந்தது. அதேபோல் தற்போது சாம்சங் கேலக்ஸி நோட் 8 இந்த வருடம் ஆகஸ்ட் மாதம் வெளியிட அதிக வாய்ப்பு உள்ளது.

ஹேக் செய்யப்பட்ட அப்பல்லோ சர்வர்.? ஜெயலலிதாவின் சிகிச்சை ரகசியங்கள் வெளியிடப்படுமா.?

சாம்சங் கேலக்ஸி நோட் 8 என்னென்ன சிறப்பம்சங்கள்?

சாம்சங் கேலக்ஸி நோட் 8 டுயல் கேமரா வசதியுடன் வெளிவருவதாக சில தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது, அதன்பின் அருமையாக செயல்படும் சென்சார்கள் இவற்றில் இடம்பெற்றுள்ளது, என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கைரேகை ஸ்கேனர் பொருத்தப்பட அதிக வாய்ப்பு உள்ளது இந்த ஸ்மார்ட்போனில்.

நோக்கிய 6 இந்தியாவில் ஜூலை 14 ம் தேதி விற்ப்பனைக்கு.!

சாம்சங் கேலக்ஸி நோட் 8 டிஸ்பிளே பொறுத்தமட்டில் 6.13 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 13 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 12மெகா பிக்சல் கொண்டுள்ளது.

இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 256 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர்- கிரின் மற்றும் ஸ்னாப்ராகன் 836 எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் : ரூ.16.999 விலையில் வெளிவரும் அற்புதமான மோட்டோ ஜி 5 பிளஸ்.!

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 4100எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் எனக் கூறப்படுகிறது.

Best Mobiles in India

Read more about:
English summary
Samsung Galaxy Note 8 With Dual Rear Cameras Tipped to Launch Mid-August : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X