ஹேக் செய்யப்பட்ட அப்பல்லோ சர்வர்.? ஜெயலலிதாவின் சிகிச்சை ரகசியங்கள் வெளியிடப்படுமா.?

By Staff
|

சமீபத்தில் 'லீஜியன்' என்ற ஹேக்கர் குழு காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் கணக்குகளில் புகுந்து விளையாடியது என்பதை நாம் அனைவரும் அறிவோம். முக்கியமாக காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி மட்டுமின்றி, சர்ச்சைக்குரிய மதுபான சீமான் ஆன விஜய் மல்லையா மற்றும் இப்போது டிவி செய்தியாளர்கள் பர்கத் தத் மற்றும் ரவீஷ் குமார் ஆகியோர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டன.

சமீபத்தில் ஒரு மறைகுறியாக்கப்பட்ட உடனடி செய்தி மென்பொருள் மூலம், லீஜியன் ஹேக்கர் குழுவானது வாஷிங்டன் போஸ்ட்டிற்கு அளித்த பேட்டி ஒன்றில் "சென்னை அப்பல்லோ மருத்துவமனை போன்ற சர்வர்களின் அணுகல் எங்களிடம் இருக்கிறது மற்றும் அந்த சர்வர்களில் இருந்து தரவுகளை வெளியிட்டால் இந்தியாவில் மாபெரும் குழப்பங்கள் ஏற்படும் என்று அறிவித்துள்ளது.

புள்ளிவிவரங்கள்

புள்ளிவிவரங்கள்

ஒரு சில வாரங்களுக்கு முன்பு வரை இந்த ஹேக்கர் குழுவிற்கு எந்த விதமான 'அரசியல் தரவு' மீதும் ஆர்வம் இல்லை. ஆனால் அதற்கு கிடைக்கப்பட்ட டெராபைட் அளவிலான அனைத்து வகையான டேட்டாவில், ஜிகாபைட் அளவிலான இந்திய பொது புள்ளிவிவரங்கள் தொடர்பான தகவல்களை கிடைக்கப்பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

40,000-க்கும் மேற்பட்ட

40,000-க்கும் மேற்பட்ட

மிகவும் அதிக அளவிலான தரவு உடைமை உங்களுக்கு எப்படி வந்தது என்று கேட்கப்பட்ட கேள்விக்கு போது, ஒரு தெளிவற்ற பதில் வழங்கப்பட்டுள்ளது. அதாவது அவர்களிடம் 40,000-க்கும் மேற்பட்ட இந்தியாவில் உள்ள சர்வர்களின் அணுகல் கொண்டுள்ளார்கள் என்று கூறப்பட்டுடுள்ளது

கிடைத்த தரவுகளுக்கு ஏற்ற டார்கெட்

கிடைத்த தரவுகளுக்கு ஏற்ற டார்கெட்

உடன் அவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தரவை அடிப்படையாக கொண்டு தான் அவர்களின் இலக்குகளை தேர்ந்தெடுக்கிறார்கள், அதாவது குறி வைத்து செய்யாமல் கிடைத்த தரவுகளுக்கு ஏற்ற டார்கெட்களை நிர்ணயம் செய்கிறாரக்ள். என்னென்ன கிடைக்கிறதோ அதை வெளியிட திட்டமிட்டுள்ளனர். அப்படியாகத்தான் தத் ட்விட்டர் கணக்கில் இருந்து 1.2 ஜிகாபைட் அளவிலான மின்னஞ்சல்கள் பகிரப்பட்டது.

எதிர்வரும் இலக்கு

எதிர்வரும் இலக்கு

இப்போது லீஜியன் ஹேக்கர் குழுவானது "தங்கள் அடுத்த இலக்கு ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி" என்று எச்சரித்துள்ளது. மற்றும் "எதிர்வரும் இலக்குகளை பொறுத்தவரை பெரிய விஷயங்களை அமைக்க வேண்டும்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வெளியிடப்படலாம்

வெளியிடப்படலாம்

அந்த பெரிய விடயங்களில் ஒன்றாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் மிகவும் ரகசியமான முறையில் மரணம் அடைந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலலிதாவை பற்றிய விடயங்கள் வெளியிடப்படலாம் என்று வியூகங்கள் கிளம்பியுள்ளன.

சிகிச்சை மற்றும் மரணம்

சிகிச்சை மற்றும் மரணம்

இந்தியாவின் 40,000 சர்வர்களில் சென்னை அப்போலோ மருத்துவமனை சர்வரும் ஒன்று எங்களுக்கு ஜெயலலிதாவின் ட்ரீட்மெண்ட் அன்ட் டெத் (சிகிச்சை மற்றும் மரணம்) சார்ந்த தரவுகளும் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்தியாவில் போதுமான குழப்பத்தை ஏற்படுத்த அந்த தகவல்கள் போதுமானது. இது தொடர்பாக அனைத்து தகவல்களை அம்பலப்படுத்த வேண்டும் என்று லீஜியன் ஹேக்கர் குழு கூறியுள்ளது.

மேலும் படிக்க

மேலும் படிக்க

பீதியில் பிற டிடிஎச் சேவை வழங்குநர்கள், அம்பானியின் அடுத்த பிளான்.?

Best Mobiles in India

Read more about:
English summary
Legion’ hacks server of Apollo hospital Chennai, secrets behind Jayalalithaa’s death to be out soon? Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X