நோக்கிய 6 இந்தியாவில் ஜூலை 14 ம் தேதி விற்ப்பனைக்கு.!
நோக்கிய 6 : ஆண்ட்ராய்டு7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது.!
எச்எம்டி குளோபல் இறுதியாக இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் விற்ப்பனைக்கு கொண்டுவருகிறது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 14,999 விலையில் அமேசான் வலைதளத்தில் கிடைக்கும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

நோக்கிய 6 ஸ்மார்ட்போன் பல்வேறு மென்பொருள் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது, மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.
நோக்கிய 6 டிஸ்பிளே பொறுத்தமட்டில் 5.5 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1080-1920) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது. இதன் ரியர் கேமரா 16 மெகா பிக்சல் கொண்டவை . மேலும் முன்புற கேமரா 13மெகா பிக்சல் கொண்டுள்ளது.
இந்தக்கருவி3 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 32ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 162 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது. மேலும் இதனுடன் கைரேகை சென்சார் பொருத்தப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் பொறுத்தமட்டில் ஆக்டோகோர் ஸ்னாப்டிராகன் 430எஸ்ஒசி,ஆண்ட்ராய்டு7.0 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, 4ஜி வோல்ட் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 3310எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன்.


Click it and Unblock the Notifications