Home
Mobile

லுமியா-920 ஸ்மார்ட்போனின் விலை?

By Super

லுமியா-920 ஸ்மார்ட்போனின் விலை?
லுமியா-920 ஸ்மார்ட்போன் வருகிற நவம்பர் மாதம் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்த ஸ்மார்ட்போன் அறிமுகமாகும் மாதம் மட்டும் அல்லாமல் இதன் விலை பற்றிய சில தகவல்களை வெளியிட்டிருக்கிறது நோக்கியா.

ஆரம்பத்திலிருந்தே லுமியா-920 ஸ்மார்ட்போன், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடப்பட்டு வந்தது. இப்போது வெளியாகியிருக்கும் விலையும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனுடன் ஒப்பிடும் வகையில் தான் இருக்கும்.

ஐரோப்பாவில் வருகிற நவம்பர் மாதமும் அறிமுகம் செய்யப்படும் இந்த லுமியா-920 ஸ்மார்ட்போன் ரூ. 41,000 விலை கொண்டதாக இருக்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜெர்மன் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் வருகிற அக்டோபர் மாதம் அறிமுகமாவதாகவும், இந்த ஸ்மார்ட்போன் ரூ. 42,000 விலை கொண்டதாகவும் இருக்கும் என்று கருதப்படுகிறது.

லுமியா-920 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் போதே லுமியா-820 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகுமா? என்பது பற்றிய எந்த தகவல்களும் இன்னும் சரிவர வெளியாகவில்லை. விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டு அறிமுகமாகும் இந்த ஸ்மார்ட்போன், என்எப்சி போன்ற உயர்தரமான தொழில் நுட்ப வசதிகளை வழங்கும். இதனால் நாளுக்கு நாள் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து கொண்டோ போகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X