Home
Computer

விண்டோஸ் 8ல் வரும் சாம்சங்கின் புதிய ஆல் இன் ஒன் கணினிகள்

By Karthikeyan
விண்டோஸ் 8ல் வரும் சாம்சங்கின் புதிய ஆல் இன் ஒன் கணினிகள்

மைக்ரோசாப்ட்டின் விண்டோஸ் 8 இயங்கு தளம் வரும் அக்டோபர் 26ல் விற்பனைக்கு வரவிருக்கும் நிலையில் இந்த புதிய இயங்கு தளத்தில் இயங்கவிருக்கும் புதிய கணினி சாதனங்களும் அணிவகுத்துக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் சாம்சங் நிறுவனம் இந்த புதிய விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய ஆல் இன் ஒன் கணினிகளை வெகு விரைவில் களமிறக்க இருக்கிறது.

குறிப்பாக விண்டோஸ் 8 இயங்கு தளத்தில் அமைந்த மூன்று ஆல் இன் மேசைக் கணினிகளைக் களமிறக்க இருக்கிறது. இந்த புதிய விண்டோஸ் கணினிகள் உயர் தரம் கொண்ட தொடு திரையைக் கொண்டிருக்கும். மேலும் இந்த கணினிகளில் இருக்கும் தொழில் நுட்ப வசதிகளைப் பொறுத்து இவற்றின் விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.

அதன்படி இந்த ஆல் இன் ஒன் மேசைக் கணினிகள் 749, 1,099 மற்றும் 1,699 அமெரிக்க டாலர்களுக்கு விற்கப்பட இருக்கிறது. இந்த ஆல் இன் ஒன் கணினிகள் இன்டல் ப்ராசஸர்களில் இயங்கும். மேலும் இந்த கணினிகளை தொடுதல், கீபோர்ட் அல்லது மவுஸ் மூலம் இயக்கலாம்.

சாம்சங்கின் இந்த புதிய ஆல் இன் ஒன் கணினிகள் இந்த வார இறுதியில் அறிமுகம் செய்து வைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X