Home
Mobile

லுமியா-920 மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

By Super
லுமியா-920 மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்கள் ஒப்பீடு!

மின்னணு சாதன உலகில் அதிகமாக ஆன்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் அதிக வரவேற்பு பெற்று வருகிறது. இதில் ஸ்மார்ட்போன் மார்கெட் சிறப்பாக கால் பதிக்க முடியவில்லை என்ற பெயரை பெற்று வந்த நோக்கியா தனது லுமியா ஸ்மார்ட்போன் வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் அதிகமாக ஆன்டராய்டு இயங்குதளத்தில் நிறைய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வந்த நிறுவனங்களும் கூட இப்போது, விண்டோஸ்-8 இயங்குதளத்தில் சில ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்கின்றன. இதனால் சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனிற்கு, விண்டோஸ்-8 ஸ்மார்ட்போனான நோக்கியா லுமியா-920, பலத்த போட்டியை ஏற்படுத்துமா? என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. இதனால் லுமியா-920 மற்றும் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப விவரங்களை கொஞ்சம் ஒப்பிட்டு பார்க்கலாம்.

லுமியா-920 ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் ஐபிஎஸ் திரை தொழில் நுட்பத்தின் மூலம் கண்ணாடி போன்ற தெளிவன காட்சியினை பெறலாம். இதன் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை வழங்கும். கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் இதன் பிரம்மாண்டமான திரைக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த பெயர் பெற்றது.

நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போனின் திரை, கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் திரையை விடவும் சற்று சிறிதயதாக தெரிகிறது. கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் 4.8 இஞ்ச் திரை வசதி கொண்டதாக இருக்கும். இதன் சூப்பர் அமோலெட் தொடுதிரை வசதி 1280 X 720 திரை துல்லியம் கொண்டது.

இந்த 2 ஸ்மார்ட்போன்களின் இயங்தளங்கள் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. நோக்கியா லுமிய-920 ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 இயங்குதளத்திலும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 4.0.4 ஐஸ் கிரீம் சான்ட்விச் இயங்குதளத்தினையும் கொண்டதாக இருக்கும்.

கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போன் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட்டையும், நோக்கியா லுமியா-920 ஸ்மார்ட்போன் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் கார்டெக்ஸ் சிப்செட் வசதியினையும் கொண்டதாக இருக்கும்.

ஆன்ட்ராய்டு ஐஸ் கிராம் சான்ட்விச் ஆப்ப்ரேட்டிங் சிஸ்டம் வசதி கொண்ட கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில், ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேஷனையும் கூடிய விரைவில் பெறலாம் என்று கருதப்படுகிறது.

மெயின் கேமராவினை பொருத்த வரையில் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் 8.7 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டதாக இருக்கும். லுமியா-920 ஸ்மார்ட்போனில் 1.2 மெகா பிக்ஸல் முகப்பு கேமராவும், கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 1.9 மெகா பிக்ஸல் கேமராவும் கொடுக்கப்பட்டுள்ளது.

மெமரி வசதியில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் சிறப்பு அபாரமாக இருக்கும் என்று கூறலாம். ஏனெனில் இதில் 16 ஜிபி, 32 ஜிபி மற்றும் 64 ஜிபி என்று 3 விதமான மெமரி மாடல்களை கொண்டிருந்தது கேலக்ஸி எஸ்-3. லுமியா-920 விண்டோஸ் போனில் 32 ஜிபி வரை இன்டர்னல் மெமரி வசதியினை பெறலாம்.

2,000 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரியினை கொண்ட லுமியயா-920 ஸ்மார்ட்போன் 10 மணி நேரம் டாக் டைம் மற்றும் 400 மணி நேரம் ஸ்டான்-பை டைம் வசதியினையும் வழங்கும். 2,100 எம்ஏஎச் லித்தியம் அயான் பேட்டரி வசதியினை கொண்ட இந்த கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனில் 11.5 மணி நேரம் டாக் டைம் மற்றும் 790 மணி நேரம் ஸ்டான்-பை டைமினை வழங்கும்.

பல தொழில் நுட்ப வசதிகளில் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் வசதி சிறப்பானதாக இருப்பினும், விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டிருப்பதால் பல புதிய வசதிகளை லுமியா-920 ஸ்மார்ட்போன் வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. லுமியா-920 ஸ்மார்ட்போனின் விலை பற்றியும் கூடிய விரைவில் தெரிந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X