Home
Mobile

மீண்டும் நோக்கியா லுமியா விலை குறைப்பு!

மீண்டும் நோக்கியா லுமியா விலை குறைப்பு!

பல மின்னணு சதனங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வரும் நோக்கியா நிறுவனம் தற்பொழுது அதிக வரவேற்பு பெற்ற லுமியா-800 ஸ்மார்ட்போனின் விலையினை அதிரடியாக குறைத்திருக்கிறது. சமீபத்தில் தான் லுமியா-900 மற்றும் லுமியா-800 ஆகிய ஸ்மார்ட்போன்போன்களின் விலை வெளிநாடுகளில் குறைக்கப்படுவதாக ஒரு தகவலை கேட்டோம்.

இதை தொடர்ந்து லுமியா-800 ஸ்மார்ட்போனின் விலை குறைக்கப்படுவதாக தகவல் வெளியானது மட்டும் இல்லாமல், இந்த ஸ்மார்ட்போன்களின் விலை விவரமும் வெளியாகி உள்ளது. கடந்த மார்ச் மாதம் தான் லுமியா-800 ஸ்மார்ட்போனின் விலை ரூ. 23,790 என்று குறைக்கப்பட்டது. இதின் பின் மீண்டும் லுமியா-800 ஸ்மார்ட்போன் ரூ. 18,867 என்று விலைக்கு குறைக்கப்பட்டுள்ளது. சஹோலிக் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 18,867

விலையில் பெறலாம். சமீபத்தில் தான் லுமியா-800 ஸ்மார்ட்போனுடன் ஸ்பீக்கர் இலவசம் என்று அறிவித்தது நோக்கியா நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி ஆப்டிமஸ் 4-எக்ஸ் எச்டி, எச்டிசி ஒன் எஸ் மற்றும் டிசையர் வி ஆகிய ஸ்மார்ட்போன்களின் விலை தற்பொழுது தான் குறைக்கப்பட்டது. எல்ஜி ஆப்டிமஸ் 4-எக்ஸ் எச்டி ஸ்மார்ட்போன் நமது நாட்டில் அறிமுகம் செய்த சமயத்தில் 34,490 விலை கொண்டதாக இருந்தது. ஆனால் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 27,990 என்ற விலையில் ஃபிலிப்கார்ட்

வலைத்தளத்தில் வழங்கப்பட்டது.

சாம்சங் கேலக்ஸி எஸ்-3 ஸ்மார்ட்போனின் விலை கூட ரூ. 43,180 என்ற விலையில் இருந்து ரூ. 34,900 விலை வரை குறைக்கப்பட்டது. எல்ஜி, சாம்சங் நிறுவனங்கள் தனது உயர்ந்த ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு செய்கையில் எச்டிசி நிறுவனம் மட்டும் சும்மா இருக்குமா என்ன? இந்நிறுவனமும் தனது ஒன் எஸ் ஸ்மார்ட்போனிற்கு

ரூ. 33,590 விலையில் இருந்து ரூ. 28,900 விலை வரை குறைத்தது.

அதோடு டிசையர் வி ஸ்மார்ட்போன் குறைந்த விலையாக நமது நாட்டில் ரூ. 21,999 என்ற விலைக்கு கடந்த ஜூன் மாதம் விற்பனை செய்யப்பட்டது. இது மட்டும் அல்லாது எச்டிசி நிறுவனம் சமீபத்தில் தான் தனது டிசையர் எக்ஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ரூ. 19,799 விலையில் ஆன்லைன் வலைத்தளங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. அதோடு ஸ்மார்ட்போன்களின் விலை பற்றி அறிய கோப்ரோபோ வலைத்தளத்தை அனுகலாம்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X