Home
Mobile

விண்டோஸ் ஆயுதத்துடன் போட்டி களத்தில் இறங்கும் நோக்கியா!

By Super

விண்டோஸ் ஆயுதத்துடன் போட்டி களத்தில் இறங்கும் நோக்கியா!
விண்டோஸ் இயங்குதம் கொண்ட லுமியா-900 ஸ்மார்ட்போனை நமது நாட்டில் அறிமுகம் செய்கிறது நோக்கியா நிறுவனம். இதன் விலை விவரமும் வெளியாகி உள்ளது.

லுமியா வரிசை ஸ்மார்ட்போன்கள் ஏற்கனவே வாடிக்கையாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இதில் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன் என்றதும், வாடிக்கையாளர்களின் ஆர்வம் இன்னும் அதிகமாகி கொண்டே வருகிறது.

இந்த ஸ்மார்ட்போன் விண்டோஸ்-7.5 ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதில் விண்டோஸ்-8 ஆப்பரேட்டிங் சிஸ்டமும் கூடிய விரவில் அப்டேட் செய்யப்படும். அகன்ற திரை வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமானாதக இருக்கும்.

லுமியா-900 ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரை வசதியின் மூலம் தெளிவான தகவல்களையும், புகைப்படம, வீடியோ போன்றவற்றை பார்க்க முடியும்.

இதன் திரை துல்லியமாக 480 X 800 பிக்ஸலையும் இது வழங்கும். டபிள்யூவிஜிஏ திரை தொழில் நுட்பத்தை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் இரட்டை கேமராவை கொண்டது. இதனால் வாடிக்கையாளர்களுக்கும் இரட்டை மகிழ்ச்சி தான். 8 மெகா பிக்ஸல் கொண்ட ஒரு கேமராவையும், 1.3 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்ட கேமராவினையும்

இந்த ஸ்மார்ட்போனில் எளிதாக பெறலாம்.

3ஜி நெட்வொர்க், வைபை, எப்எம் ரேடியோ போன்ற நவீன் தொழில் நுட்ப வசதிகளை இந்த ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்த முடியும். 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதியினையும் லுமியா-900 ஸ்மார்ட்போன் வழங்கும். 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் பிராசஸரையும் இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை நமது நாட்டில் அறிமுகம் செய்கிறது நோக்கியா நிறுவனம். இந்த ஸ்மார்ட்போனின் விலை ரூ. 29,999 விலை கொண்டதாக இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X