நோக்கியா லூமியா 800 போனை வாங்கினால் ஒரு ஸ்பீக்கர் இலவசம்

Posted By: Karthikeyan
நோக்கியா லூமியா 800 போனை வாங்கினால் ஒரு ஸ்பீக்கர் இலவசம்

நோக்கியாவின் மொபைல்களுக்கு இந்தியாவில் எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. தற்போது இந்தியாவில் உள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய ஆபரை நோக்கியா அறிவித்திருக்கிறது.

அதாவது நோக்கியா லூமியா 800 என்ற போனை வாங்கினால் ரூ.9,350 மதிப்புள் நோக்கியா ப்ளே 360 என்ற ஸ்பீக்கரை இலவசமாக வழங்கப்படும் என்பதாகும். இதே அறிவிப்பை கடந்த மாதம் இங்கிலாந்தில் அறிவித்தது.

கடந்த டிசம்பரில் இந்த நோக்கியா லூமியா 800 போன் இந்தியாவில் ரூ.29,999க்கு விற்பனைக்கு வந்தது. கடந்த ஜனவரியில் இதன் விலை ரூ.2000 குறைக்கப்பட்டது. அதற்கடுத்து கடந்த மார்ச் மாதம் இதன் விலை மேலும் கணிசமாக குறைக்கப்பட்டது.

எனவே இப்போது இந்த போனின் விலையைக் குறைப்பதற்கு பதிலாக இந்த போனை வாங்குவோருக்கு நோக்கியா ப்ளே 360 என்ற ஸ்பீக்கரை இலவசமாக வழங்க முடிவெடுத்திருக்கிறது நோக்கியா.

அதிலும் குறிப்பாக வரும் செப்டம்பர் 23லிருந்து வரும் அக்டோபர் 23 வரை இந்த போனை வாங்குவோருக்கு மட்டுமே நோக்கியா ஸ்பீக்கர் வழங்கப்படும். அக்டோபர் 23ற்கு பிறகு இந்த ஆபர் வழங்கப்படமாட்டாது. மேலும் இமெயில் மற்றும் எஸ்எம்எஸ் மூலம் ஆபர் அறிவிக்கப்பட்டவர்களுக்கே இந்த சலுகை வழங்கப்படும்.

இந்த சிறப்பு சலுகை மூலம் தனது லூமியா 800 போனின் விற்பனை அதிகரிக்கும் என்று நோக்கியா நம்புகிறது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot