லூமியா போன்களின் விலையைக் குறைக்கும் நோக்கியா

Posted By: Karthikeyan
லூமியா போன்களின் விலையைக் குறைக்கும் நோக்கியா

ஒரு காலத்தில் இந்தியாவில் மொபைல் வைத்திருப்பவர்களின் கைகளில் அதிகமாக நோக்கியாவின் மொபைல்கள்தான் இருக்கும். அந்த அளவிற்கு நோக்கியா நிறுவனம் வெற்றி கொடி நாட்டி வந்தது. ஆனால் ஆப்பிள், சாம்சங் மற்றும் எல்ஜி போன்ற பன்னாட்டு மொபைல் நிறுவனங்கள் மற்றும் மைக்ரோமேக்ஸ் மற்றும் கார்போன் போன்ற உள்நாட்டு மொபைல் நிறுவனங்களின் கடும் போட்டிக்கு மத்தியில் நோக்கியா தற்போது தனது இடத்தை தக்க வைக்க போராடிக் கொண்டிருக்கிறது.

அதற்காக தற்போது நோக்கியா பல புதிய திட்டங்களை அறிவித்து வருகிறது. அதாவது நோக்கியா லூமியா 800 மற்றும் லூமியா 900 என்ற போன்களைக் கடந்த ஆண்டு களமிறக்கியது. இந்த போன்கள் ஓரளவிற்கு விற்பனையையும் பெற்றுத் தந்தன.

தற்போது இந்த போன்களின் விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக இவற்றின் விலையை குறைத்திருக்கிறது நோக்கியா. குறிப்பாக லூமியா 800 போனிற்கு 15 சதவீதமும், லூமியா 900 போனிற்கு 10 சதவீதமும் விலைக் குறைப்பு செய்திருக்கிறது. இந்த விலைக் குறைப்பை இங்கிலாந்தில் மட்டும் தற்போது செய்திருக்கிறது. மற்ற நாடுகளுக்கும் விரைவில் செய்யும் என்று நம்பலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot