விண்கற்களின் துகள்களை சேர்த்து செய்யப்பட்ட ஸ்மார்ட்போன்! என்ன விலை தெரியுமா?

|

உங்களில் சிலருக்கு ரஷ்ய நாட்டை சேர்ந்த லக்ஸரி பிராண்ட் (Luxury Brand) ஆன கேவியர்-ஐ (Caviar) பற்றி ஏற்கனவே தெரிந்து இருக்கலாம்.

அறியாதோர்களுக்கு ஆப்பிள் மற்றும் சாம்சங்கின் ஃபிளாக்ஷிப்-கிரேடு ஸ்மார்ட்போன்களில் "கூடுதலாக சில ஆடம்பரங்களை சேர்த்து" அதை பெரிய தொகைக்கு விற்கும் ஒரு நிறுவனம் தான் - கேவியர்!

கேவியர் கையில்

கேவியர் கையில் "சிக்கிய" லேட்டஸ்ட் சாம்சங் ஸ்மார்ட்போன்!

அப்படியாக சமீபத்தில் கேவியர் நிறுவனத்தின் கையில் சிக்கியது - சாம்சங் நிறுவனத்தின் லேட்டஸ்ட் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் ஒன்றான Samsung Galaxy Z Fold 4 மாடல் தான்!

ஆம்! கேவியரால் பெர்சனலைஸ்டு செய்யப்பட்ட சாம்சங் கேலக்சி இசட் ஃபோல்ட் 4 ஸ்மார்ட்போன் மாடல்கள் - பெரும் தொகைக்கு - அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் OnePlus பழனிக்கே பால் காவடி எடுத்தாலும் "இதை" ஒருத்தனும் கண்டுக்க மாட்டான்!

தங்கமெல்லாம் பழைய ஸ்டைல்! விண்கல் தான் புதிய ஸ்டைல்!

தங்கமெல்லாம் பழைய ஸ்டைல்! விண்கல் தான் புதிய ஸ்டைல்!

வழக்கமாக ஆடம்பரமான முறையில் பெர்சனலைஸ்டு செய்யப்படும் பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களில் தங்கம், வைரம் போன்றவைகள் உட்பொதிக்கப்படும் .

ஆனால் இம்முறை சற்றே வித்தியாசாக பெர்சனலைஸ்டு செய்யப்பட்ட சாம்சங் ஸ்மார்ட்போனின் வடிவமைப்பில் விண்கல் துகள்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.

முற்றிலும் வேறுபட்ட நான்கு டிசைன்கள்!

முற்றிலும் வேறுபட்ட நான்கு டிசைன்கள்!

கேவியர் பிராண்ட் ஆனது Heralds of the Galaxy என்று அழைக்கப்படும், முற்றிலும் வேறுபட்ட நான்கு டிசைன்களில் Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போன் மாடல்களை (BLACK RAIN, CANYON DIABLO, GOLDEN METEOR, SOLAR ECLIPSE) அறிமுகம் செய்துள்ளது.

அதாவது Samsung Galaxy Z Fold 4 ஸ்மார்ட்போனின் பேக் பேனல் ஆனது நான்கு வெவ்வேறு டிசைன்களில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டு உள்ளது.

VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!VLC மீடியா பிளேயர் மீதான தடையும், இந்திய அரசின் கம்பி கட்டுற கதையும்!

மூன்று வெவ்வேறு விண்கற்களில் இருந்து!

மூன்று வெவ்வேறு விண்கற்களில் இருந்து!

குறிப்பாக Golden Meteor மாடல் ஆனது மூன்று வெவ்வேறு விண்கற்களில் (Seymchan, Muonionalusta மற்றும் Canyon Diablo) இருந்த விண்கல் துகள்களுடன் வருகிறது.

இப்படியாக கேவியர் ஹெரால்ட்ஸ் ஆஃப் தி கேலக்ஸி சேகரிப்பின் அனைத்து மாடல்களுமே தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ளன.

மொத்தமே 29 யூனிட்கள் தான்! என்ன விலை?

மொத்தமே 29 யூனிட்கள் தான்! என்ன விலை?

கேவியர் பிராண்டின் கூற்றுப்படி, மொத்தமாகவே வெறும் 29 யூனிட்கள் மட்டுமே (பெர்சனலைஸ்டு செய்யப்பட்ட ஃபோல்ட் 4 மாடல்கள் மட்டுமே) விற்பனை செய்யப்படும்!

மேலும் ஒவ்வொரு ஸ்மார்ட்போனிலும் 24 கேரட் தங்கத்திலான கேவியர் லோகோவும் இருக்கும்.

Heralds of the Galaxy ஸ்மார்ட்போன்களின் விலை, இந்திய மதிப்பின்படி தோராயமாக ரூ.7,5,6098 ஆகும் மற்றும் மிகவும் விலையுயர்ந்த வேரியண்ட்டின் விலை சுமார் ரூ.7,98,414 ஆகும்.

திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!திடீரென்று ரூ.5000 விலைக்குறைப்பு; செம்ம டிமாண்டில் லேட்டஸ்ட் OnePlus போன்!

Galaxy Z Fold 4 அம்சங்களில் மாற்றம் இருக்குமா?

Galaxy Z Fold 4 அம்சங்களில் மாற்றம் இருக்குமா?

கேவியர், ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் மட்டுமே வேலை செய்துள்ளது. ஆகையால் அம்சங்களில் எந்த மாற்றமும் இருக்காது.

Samsung Galaxy Z Fold 4 ஆனது 2316 x 904 பிக்சல்ஸ் ரெசல்யூஷன் மற்றும் 48Hz மற்றும் 120Hz அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.2-இன்ச் அளவிலான HD+ டைனமிக் AMOLED 2X கவர் டிஸ்ப்ளேவையும், ​​1Hz மற்றும் 120Hz இடையேயான அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 7.6-இன்ச் டைனமிக் AMOLED 2X இன்ஃபினிட்டி ஃப்ளெக்ஸ் டிஸ்ப்ளேவையும் கொண்டுள்ளது.

இந்த டிஸ்ப்ளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ்+ உடன் பாதுகாக்கப்படுகிறது; மேலும் எஸ் பென்னிற்கான ஆதரவையும் வழங்குகிறது

என்ன ப்ராசஸர்?

என்ன ப்ராசஸர்?

Galaxy Z Fold 4 ஆனது Qualcomm-இன் லேட்டஸ்ட் சிப்செட் ஆன Snapdragon 8+ Gen 1 மூலம் இயங்குகிறது. இது 12GB LPDDR5 ரேம் மற்றும் 1TB ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.

கேமராக்கள் எப்படி?

கேமராக்கள் எப்படி?

Samsung Galaxy Z Flod 4 ஆனது மேம்படுத்தப்பட்ட கேமராக்களுடன் வருகிறது, ஏனெனில் (இம்முறை) இது 50MP மெயின் சென்சாரை கொண்டுள்ளது. இதனுடன் 12MP அல்ட்ரா வைட் சென்சார் மற்றும் 10MP 3X டெலிஃபோட்டோ ஜூம் லென்ஸும் உள்ளது. எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேவில் 10MP செல்பீ கேமரா உள்ளது மற்றும் அண்டர் டிஸ்ப்ளேவில் 4MP கேமரா ஒன்றும் உள்ளது!

இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!இவ்ளோ கம்மி விலையில் இதை விட நல்ல TV வேணும்னா.. இனிமே தான் தயாரிக்கணும்!

என்ன பேட்டரி?

என்ன பேட்டரி?

Galaxy Z Fold 4 ஆனது Android 12L ஓஎஸ் அடிப்படையிலான One UI 4.1.1 மூலம் இயக்கப்படுகிறது. இது 4400mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது மற்றும் இது 25W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Photo Courtesy: Caviar Global

Best Mobiles in India

English summary
Luxury Smartphone Maker Caviar Introduced Customized Samsung Galaxy Z Fold 4 Models. Check Price.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X