4G போன் வாங்குவது சிறந்ததா அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா? ரெண்டுமே தள்ளுபடியில் இருக்கு.!

|

யாரிடமாவது 'புதுசா போன் வாங்கலாம்னு யோசிக்கிறேன்.. எந்த பிராண்ட் இப்போ பெஸ்ட்டா இருக்கு, எந்த ஸ்மார்ட்போன் (smartphone) மாடல் நல்ல மாடலாக இருக்கு சொல்லுங்க' என்று கேட்டால், பலர் யோசிக்காமல் உடனே Samsung பிராண்டை தான் குறிப்பிடுவார்கள். அந்த அளவிற்கு சாம்சங் நிறுவனம் உலகளவில் பேமஸ் ஆக இருக்கிறது. இதன் பிரபலத்திற்கு முக்கிய காரணம், இவர்களுடைய தரமான சேவை தான்.

4ஜி போன் வாங்குவது சிறந்ததா? அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா?

4ஜி போன் வாங்குவது சிறந்ததா? அல்ல 5G போன் வாங்குவது சிறந்ததா?

இப்படி பல ஆண்டு காலமாக உலகளவில் பெஸ்டான பிராண்டாக திகழும், சாம்சங் நிறுவனத்திடம் இருந்து ரூ. 7,000 விலை வரம்பு முதல் துவங்கி, இப்போது சிறந்த தள்ளுபடியுடன் வாங்க கிடைக்கும் பெஸ்டான சாம்சங் ஸ்மார்ட்போன் (Samsung smartphones) மாடல்களை இங்கு உங்களுக்காகப் பட்டியலிட்டுள்ளோம்.

இதில் 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டு மாடல்களும் இருக்கிறது. இருப்பினும் 4ஜி போன் (4G smartphone) வாங்குவது சிறந்ததா? அல்ல 5G போன் (5G Phone) வாங்குவது சிறந்ததா? என்ற சந்தேகம் அனைவரிடமும் உள்ளது. எது பெஸ்ட் என்பதை இறுதியில் லிஸ்டை பார்த்துவிட்டுத் தெரிந்துகொள்ளலாம்.

1. Samsung Galaxy A03 Core

1. Samsung Galaxy A03 Core

சாம்சங் நிறுவனத்திடம் இருந்து கிடைக்கும் மிகவும் மலிவான விலை ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். உண்மையில் இது டீசெண்டான என்ட்ரி லெவல் ஸ்பேஸ்களுடன் வருகிறது. இதன் அசல் விலை ரூ. 10,499 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் ஒரு பகுதியாக இதை நீங்கள் வெறும் ரூ. 7,670 என்ற விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ. 7,250 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இது 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது HD+ டிஸ்பிளே உடன் 8எம்பி கேமராவுடன் வருகிறது. இது 5000 mAH பேட்டரியை பேக் செய்கிறது.

Amazon:Samsung Galaxy A03 Core

50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?50 இன்ச் TV ஆர்டர் செஞ்சா 40 இன்ச் தான் வருது.! மீதி 10 இன்ச் எங்கனு கேட்டா அசிங்கப்படுத்துராங்க.! என்னாச்சு?

2. Samsung Galaxy M13

2. Samsung Galaxy M13

இப்போது உங்களுக்கு குறைந்த விலையில் வாங்க கிடைக்கும் லேட்டஸ்ட் பட்ஜெட் பிரைஸ் ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். ஆனால், இப்போது கிடைக்கும் சலுகையை பயன்படுத்திக்கொண்டால், இதை நீங்கள் ரூ.10,499 என்ற கம்மி விலையில் சலுகையுடன் வாங்கிவிட முடியும். இதன் அசல் விலை ரூ.14,999 ஆகும். இது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6000mah பேட்டரி உடன் வருகிறது. இது 50MP+5MP+2MP ட்ரிபிள் கேமரா மற்றும் 8MP முன்பக்க கேமரா உடன் வருகிறது.

Amazon:Samsung Galaxy M13

3. Samsung Galaxy M32

3. Samsung Galaxy M32

இப்போது கம்மி விலையில் வாங்க கிடைக்கும் பெஸ்டான ஸ்மார்ட்போன் மாடல் இதுவாகும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 16,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 10,999 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.4' கொண்ட FHD+ டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP+8MP+2MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 20 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது.

Amazon:Samsung Galaxy M32

லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!

4. Samsung Galaxy M52 5G

4. Samsung Galaxy M52 5G

பட்ஜெட் விலையில் வாங்க கிடைக்கும் 5ஜி டிவைஸ் இதுவாகும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 36,999 ஆகும். ஆனால், இன்று கிடைக்கும் சலுகையை நீங்கள் சரியாக பயன்படுத்திக்கொண்டால், இதை வெறும் ரூ. 28,999 விலையில் வாங்கலாம். இதன் மீது ரூ. 25,000 வரை எக்ஸ்சேஞ் சலுகையும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 64MP+12MP+5MP ட்ரிபிள் ரியர் கேமரா மற்றும் 32 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது.

Amazon:Samsung Galaxy M52 5G

5. Samsung Galaxy M32 5G

5. Samsung Galaxy M32 5G

உங்கள் கையில் இருக்கும் ஸ்மார்ட்போனில் லேட்டஸ்ட் அம்சங்கள் வேண்டும் என்றால், உங்கள் சாய்ஸ் இந்த போன் மீது இருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 25,990 ஆகும். இப்போது கிடைக்கும் சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 20,999 என்ற விலையில் வாங்கிடலாம். இந்த ஸ்மார்ட்போன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.5' கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 48MP+8MP+5MP+2MP குவாட் ரியர் கேமரா மற்றும் 13 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது.

Amazon:Samsung Galaxy M32 5G

உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

6. Samsung Galaxy A13

6. Samsung Galaxy A13

விலை குறைவாக இருக்கனும், ஆனால் உங்களுடைய ஸ்மார்ட்போனின் லுக் ராயலாகவும், பிரீமியம் தோற்றத்திலும் இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்பட்டால், இந்த Samsung Galaxy A13 மாடலை தான் தேர்வு செய்ய வேண்டும். இதன் அசல் விலை ரூ. 20,990 என்றாலும் கூட, இது இப்போது கிடைக்கும் சலுகைகளுடன் சேர்த்து, வெறும் ரூ. 15,999 என்ற விலையில் வாங்க கிடைக்கிறது. இதன் மீது நம்ப முடியாத வகையில் ரூ. 15,100 எக்ஸ்சேஞ் சலுகையாகக் கிடைக்கிறது. இது 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.6' இன்ச் கொண்ட FHD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 5000mah பேட்டரியை பேக் செய்கிறது.

Amazon:Samsung Galaxy A13

7. Samsung Galaxy A53

7. Samsung Galaxy A53

இப்போது பட்ஜெட் விலைக்குள் சிறந்த அம்சங்களுடன் ஒரு பெஸ்டான ஸ்மார்ட்போனை வாங்க நீங்கள் பிளான் செய்தால், உங்கள் தேர்வு இந்த Samsung Galaxy A53 மாடலாக இருக்க வேண்டும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ. 38,990 ஆகும். ஆனால், இன்றைய சலுகையின் மூலம் இதை நாம் வெறும் ரூ. 31,999 என்ற விலையில் வாங்க முடியும். இதன் மீது இப்போது ரூ. 25,000 வரை எக்ஸ்சேஞ் தள்ளுபடியும் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 5ஜி இணக்கத்துடன் வருகிறது. இது 64MP கொண்ட கேமரா அமைப்பை கொண்டுள்ளது. இது சூப்பர் AMOLED டிஸ்பிளேவுடன் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Amazon:Samsung Galaxy A53

WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் என்ன சிக்கல்களை எல்லாம் நீங்கள் சந்திக்க நேரிடும்?

5ஜி ஸ்மார்ட்போன்களை வாங்கினால் என்ன சிக்கல்களை எல்லாம் நீங்கள் சந்திக்க நேரிடும்?

இந்த பட்டியலில் 5ஜி மற்றும் 4ஜி ஆகிய இரண்டு நெட்வொர்க்குகளில் இயங்கும் ஸ்மார்ட்போன் மாடல்களை குறிப்பிட்டுள்ளோம். என்ன தான் 5ஜி அடுத்த தலைமுறை நெட்வொர்க் என்று கூறினாலும், அதிக காசு கொடுத்து 5ஜி டிவைஸை நீங்கள் வாங்கினால், அது உங்களுடைய செலவை அடுத்து வரப்போகும் ஆண்டுகளில் அதிகமாக்கிவிடும் என்பதே மறைக்கப்படும் உண்மையாக இருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

4ஜி ஸ்மார்ட்போன்களை ஏன் பெஸ்ட்னு சொல்றாங்க தெரியுமா?

4ஜி ஸ்மார்ட்போன்களை ஏன் பெஸ்ட்னு சொல்றாங்க தெரியுமா?

காரணம், 5ஜி திட்டங்களின் கட்டணங்கள் அதிகமாக இருப்பது ஒரு காரணம் பார்க்கப்படுகிறது. அதேபோல் 5ஜி வேகமாக தீர்ந்து விடும் என்பதை நினைவில்கொள்ளுங்கள். ஆம், சில நிமிடங்களில் உங்கள் ஒட்டுமொத்த 2ஜிபி தினசரி டேட்டாவை இது சில நிமிடங்களில் வேகமாக தீர்த்துவிடுகிறது. மறுபுறம், 4ஜி நிலையான வேகத்தில் உங்கள் தினசரி டேட்டா வரம்பை ஒரு நாள் முழுக்க வழங்கி நின்று செயல்படுவதனாலும், 4ஜி திட்டங்களின் கட்டணம் விலை குறைவாக இருப்பதன் காரணத்தினாலும், 4ஜி போன்களை வாங்குவது தான் சிறந்தது என்று பரிந்துரைக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Is it better to buy a 4G smartphone or a 5G phone? Both are on discount

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X