உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

|

உங்க வீட்டில நீங்க 1000 விஷயம் பேசியிருந்தாலும், ஒரே நாளில் உங்க ஏரியாவில் இருக்கும் அனைவரின் வீட்டிலும் ஒரே மாதிரியான டயலாக் ஒலிப்பது பவர் கட் (Power cut) அல்லது மின்தடை (Electricity Shutdown) ஏற்படும் நேரத்தில் மட்டும் தான். சரி, உங்கள் பகுதியில் எப்போது மின்சார தடை ஏற்படுகிறது என்பதை ஆன்லைன் மூலம் எப்படி தெரிந்துகொள்வது என்பதைப் பற்றி தான் இந்த பதிவில் பார்க்கப்போகிறோம்.

ஐயையோ..! இன்னைக்கு ஷட் டவுன்-ஆ.!

ஐயையோ..! இன்னைக்கு ஷட் டவுன்-ஆ.!

சிலர் இதை "ஷட் டவுன்" என்கிறார்கள், இன்னும் சிலர் இதை டோட்டல் ஆஃப் என்கிறார்கள். சரி, எது எப்படியாக இருந்தாலும், அனைவரின் வீட்டிலும் மாதம் ஒரு முறையாவது "இந்த" டயலாக் கட்டாயம் ஒலித்துவிடுகிறது. அது என்ன டயலாக்னு கேட்குறீங்களா? இதோ சொல்கிறோம். "என்ன டான்னு 9 மணிக்கெல்லாம் கரண்ட் போய்டுச்சு.! ஐயையோ..! இன்னைக்கு ஷட் டவுன்-ஆ.!

டோட்டல் ஆஃப்-ஆ இன்று? இனி பக்கத்து வீட்டில் கேட்க வேண்டாம்

டோட்டல் ஆஃப்-ஆ இன்று? இனி பக்கத்து வீட்டில் கேட்க வேண்டாம்

போச்சுடா.. இன்னைக்கு வேலை எல்லாம் கெட்டுடுச்சு.. பக்கத்து வீட்ல கரண்ட் இருக்கானு பாரு.. டோட்டல் ஆப் தானா கேளு" என்ற வார்த்தைகளைக் கட்டாயம் ஒலிக்க நாம் கேட்டிருப்போம். தினமும் நியூஸ்பெபேர் படிப்பவர்களுக்குக் கட்டாயம் மின்தடை ஏற்படும் நாட்கள் பற்றிய தகவல்கள் தெரிந்திருக்கும். ஆனால், பேப்பர் வாங்கி படிக்கும் பழக்கம் இல்லாதவர்கள் எப்படி இந்த தகவலை அறிந்துகொள்வது?

இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!

மின்சார தடை தகவலை ஆன்லைனில் பார்க்கலாமா? எப்படி?

மின்சார தடை தகவலை ஆன்லைனில் பார்க்கலாமா? எப்படி?

அதற்காக தான், TNEB இப்போது ஷட் டவுன் அல்லது மின்சார தடை ஏற்படும் நாட்கள் மற்றும் பகுதிகள் பற்றிய முழு விபரத் தகவலை ஆன்லைன் மூலமாகவும் வழங்குகிறது. இனி உங்கள் பகுதியில் மின்சார தடை எப்போது ஏற்படுகிறது என்பதை நீங்கள் முன்கூட்டியே அறிந்துகொள்ள இந்த அம்சம் பெரிதும் உதவுகிறது. வீட்டில் இருந்தபடி எப்படி ஷட் டவுன் விபரங்களைத் தெரிந்துகொள்வது என்று தெரிந்துகொள்ளலாமா?

TANGEDCO அறிமுகம் செய்துள்ள பயனுள்ள சேவை

TANGEDCO அறிமுகம் செய்துள்ள பயனுள்ள சேவை

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TANGEDCO) அறிவுரையின் படி, மாதம் ஒரு முறை ஒவ்வொரு பிரிவாக, ஏரியா வாரியாக பராமரிப்பு காரணத்திற்காக மின்தடை மேற்கொள்ளப்படுகிறது. நீண்ட நேரம் மின்சார தடை ஏற்படும் இந்த நாட்கள் பற்றிய விபரங்களை TNEB இப்போது ஆன்லைனில் பதிவிடுகிறது. இதைத் தெரிந்துகொள்ள உங்கள் கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதுமானது.

குழந்தைகள் ஆதார் அட்டைக்கு முக்கிய அறிவிப்பு.! உடனே குழந்தைகள் ஆதார் அட்டைக்கு முக்கிய அறிவிப்பு.! உடனே "இதை" கட்டாயம் செய்ய சொல்லி உத்தரவு.!

உங்கள் பகுதியில் இன்று பவர் கட் -ஆ என்பதை அறிந்துகொள்வது எப்படி?

உங்கள் பகுதியில் இன்று பவர் கட் -ஆ என்பதை அறிந்துகொள்வது எப்படி?

 • முதலில் நீங்கள் www.tangedco.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
 • பிறகு மேல் மெனுவில் CONSUMER INFO என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
 • அதிலிருந்து காண்பிக்கப்படும் விருப்பங்களில் இருந்து Scheduled Outage Information கிளிக் செய்யவும்.
 • சரியான வட்டத்தை தேர்வு செய்து சிங்கிள் கிளிக் செய்யுங்க மக்களே.!

  சரியான வட்டத்தை தேர்வு செய்து சிங்கிள் கிளிக் செய்யுங்க மக்களே.!

  • அடுத்து காண்பிக்கப்படும் பக்கத்தில் Select circle என்ற விருப்பத்தில் உங்கள் நகரத்தைத் தேர்வு செய்யுங்கள்.
  • தமிழ்நாட்டில் உள்ள அணைத்து நகரங்களும் இதில் பட்டியலிடப்பட்டிருக்கும்.
  • நீங்கள் வசிக்கும் நகரத்தைத் தேர்வு செய்யுங்கள்.
  • இப்போது அந்த பகுதியில் அடுத்து ஏற்படப்போகும் மின்தடை நாட்கள் காண்பிக்கப்படும்.
  • பகுதிகளின் விபரங்கள், காரணங்கள் போன்ற தகவல்கள் அனைத்தும் பட்டியல் வாரியாக காண்பிக்கப்படும்.
  • கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!கடலில் அடித்துவரப்பட்ட Nokia 3210.! பழைய போனை வைத்து பள்ளியில் பாடம் எடுத்த சிறுமி.!

   தமிழில் எப்படி மின்தடை விபரங்களைத் தெரிந்துகொள்வது? தமிழர்களுக்கான தமிழ் சேவை.!

   தமிழில் எப்படி மின்தடை விபரங்களைத் தெரிந்துகொள்வது? தமிழர்களுக்கான தமிழ் சேவை.!

   ஆங்கிலத்தில் வேண்டாம், சுத்தமான தாய் மொழியான தமிழில் இந்த இணையத்தள பக்கத்தை மாற்றி, எப்படி ஷட் டவுன் விபரங்களை தெரிந்துகொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

   • இதனைச் செய்த நீங்கள் மீண்டும் www.tangedco.gov.in இணையதள பக்கத்திற்குச் செல்ல வேண்டும்.
   • தமிழில் TANGEDCO பக்கத்தை மாற்ற இதை கிளிக் செய்யுங்கள்.!

    தமிழில் TANGEDCO பக்கத்தை மாற்ற இதை கிளிக் செய்யுங்கள்.!

    • இப்போது பக்கத்தின் இடது மேல் முலையில் "தமிழ் வடிவம்" என்று எழுதப்பட்டிருக்கும்.
    • தமிழ் வடிவம் என்ற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
    • இப்போது ஒட்டுமொத்த பக்கமும் தமிழிற்கு மாறிவிடும்.
    • அடுத்தபடியாக நீங்கள் "நுகர்வோர் தகவல்கள்" என்ற விருப்பத்தை மெனுவில் இருந்து தேர்வு செய்ய வேண்டும்.
    • ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!ஐயோ சாமி.! இந்த OnePlus டிவிய முதல்ல வெளியவிடுங்கப்பா.! கூப்பாடு போட்டு வெயிட் பண்ணும் ரசிகர்கள்.!

     அவ்வளவு தான் ஒட்டுமொத்த

     அவ்வளவு தான் ஒட்டுமொத்த "பவர் கட் ஏரியா" லிஸ்ட்டும் காண்பிக்கப்படும்

     • அதிலிருந்து வரும் விருப்பங்களில் "திட்டமிடப்பட்ட மின்தடை தகவல்கள்" என்று விருப்பத்தை கிளிக் செய்க.
     • அடுத்து காண்பிக்கப்படும் பக்கத்தில் Select circle என்ற விருப்பத்தில் உங்கள் நகரத்தைத் தேர்வு செய்யுங்கள்.
     • நீங்கள் வசிக்கும் நகரத்தை தேர்வு செய்து Submit கிளிக் செய்யுங்கள்.
     • தேதி வாரியாக எப்போது, எந்த பகுதியில் என்ன காரணத்திற்காக மின்தடை மேற்கொள்ளப்படுகிறது என்பது காண்பிக்கப்படும்.
     • இனி EB shutdown பற்றிய விபரங்களைத் தெரிந்துகொண்டு முன்கூட்டியே பிளான் செய்யுங்க

      இனி EB shutdown பற்றிய விபரங்களைத் தெரிந்துகொண்டு முன்கூட்டியே பிளான் செய்யுங்க

      இனி மின்தடை எப்போது ஏற்படுகிறது என்பதை முன்கூட்டியே அறிந்துகொண்டால், உங்கள் தினசரி வேலைகள் குறிப்பிட்ட அந்த நாளில் தடை பெறாமல் எப்படி அட்ஜஸ்ட் செய்வது என்று நீங்கள் தெளிவாகத் திட்டமிடலாம். குறிப்பாக, உங்கள் ஸ்மார்ட்போனிற்கு முன்கூட்டியே முழுமையாக சார்ஜ் செய்துகொள்வது. மோட்டார் ஆன் செய்து, தண்ணீர் பிடித்து வைப்பது போன்ற வேலைகளை திட்டமிட்டுச் செய்துகொள்ளலாம். இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

Read more about:
English summary
How To Check Power Cut Shutdown In My Area Online Using Smartphone

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X