லட்ச ரூபாய் போனில் கூட இது இன்னும் கிடைக்கல.! ரூ.10,000-தில் பட்டைய கிளப்பும் Lava 5ஜி போன்.!

|

இந்தியாவில் இருந்து உள்நாட்டில் இயங்கும் நிறுவனமான லாவா (Lava), அதன் லாவா பிளேஸ் 5ஜி (Lava Blaze 5G) ஸ்மார்ட்போனை மிகவும் மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் (5G smartphone) சாதனமாக ரூ. 10,999 என்ற விலையில் அறிமுகம் செய்தது. இதன் முதல் அறிமுக விற்பனையின் ஒரு பகுதியாக இந்த போனை நிறுவனம் ரூ. 9,999 என்ற குறைந்த விலையில் விற்பனை செய்தது.

10 ஆயிரம் ரூபாய்க்குள் 5ஜி போன் கிடைக்குமா? கெத்து காட்டிய இந்திய நிறுவனம்.!

10 ஆயிரம் ரூபாய்க்குள் 5ஜி போன் கிடைக்குமா? கெத்து காட்டிய இந்திய நிறுவனம்.!

10 ஆயிரம் ரூபாய்க்குள் 5ஜி அம்சத்துடன் போன் கிடைக்குமா? என்ற சந்தேக கேள்வியை, இந்த ஸ்மார்ட் அடித்து தொம்சம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. மலிவு விலையில் 5ஜி அம்சம் மட்டுமில்லை, இன்னும் பல மிரட்டலான அம்சங்களுடன் ஒரு பெஸ்டான, தரமான ஸ்மார்ட்போன் மாடலை இந்தியர்களால் உருவாக்க முடியும் என்பதை இந்த Lava Blaze 5G ஆணித்தரமாக நம்ப வைத்துள்ளது.

புதிய Lava Blaze 5G போனிற்கு அதுக்குள்ள Android 13 அப்டேட்-ஆ.!

புதிய Lava Blaze 5G போனிற்கு அதுக்குள்ள Android 13 அப்டேட்-ஆ.!

லாவா நிறுவனம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிவிப்பின் படி, இந்த புதிய Lava Blaze 5G ஸ்மார்ட்போன்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும், ஒவ்வொரு காலாண்டு இடைவெளியிலும் சாஃப்ட்வெர் அப்டேட்களைப் பெறும் என்று அறிவித்துள்ளது. Lava VBlaze 5G போனுக்கு Android 13 இயங்குதளம் உறுதியாகக் கிடைக்குமென்பதை நிறுவனம் உத்தரவாதம் வழங்கியுள்ளது.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட்டிற்கு மாற்றாக இலவச விமான டிக்கெட்.! இந்த ஆப்ஸை நோட் பண்ணுங்க.!

ரூ. 9,999 விலையில் வாங்க கிடைத்த முதல் 5G ஸ்மார்ட்ஃபோன்.!

ரூ. 9,999 விலையில் வாங்க கிடைத்த முதல் 5G ஸ்மார்ட்ஃபோன்.!

இந்த போன் சில வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது மற்றும் தற்போது அமேசானில் விற்பனைக்கு வாங்கக் கிடைக்கிறது. இதன் அசல் விலை ரூ. 10,999 என்றாலும், அறிமுக சலுகையுடன் ரூ. 9,999 என்ற விலையில் வாங்க கிடைத்தது. மிகவும் குறைந்த விலையில் விற்பனையான முதல் 5G ஸ்மார்ட்ஃபோன் என்ற பெருமையை இந்த ஸ்மார்ட்போன் பெற்றுள்ளது.

Android 13 OS பற்றி உறுதியான வாக்குறுதியை வழங்கிய Lava தலைவர்.!

Android 13 OS பற்றி உறுதியான வாக்குறுதியை வழங்கிய Lava தலைவர்.!

லாவா இன்டர்நேஷனல் லிமிடெட்டின் (Lava International Limited) தலைவரும் வணிகத் தலைவருமான சுனில் ரெய்னா இதுகுறித்து ட்வீட் செய்துள்ளார். "லாவா பிளேஸ் 5ஜி அடுத்த 2 ஆண்டுகளுக்கு, ஒவ்வொரு காலாண்டிற்கும் மென்பொருள் புதுப்பிப்புகளைப் பெறும் மற்றும் ஆண்ட்ராய்டு 13-க்கு இந்த போன் விரைவில் மேம்படுத்தப்படும்!" என்று அவர் தெரிவித்திருக்கிறார். லட்ச ரூபாய் போன்களே இன்னும் Android 13 OS ஐ பெறவில்லை.

உங்க ஏரியாவில் உங்க ஏரியாவில் "பவர் கட் (shutdown)" எப்போது? ஆன்லைனில் செக் செய்வது எப்படி? இதோ ஈஸி டிப்ஸ்.!

Lava Blaze 5G இப்போது எங்கிருந்து வாங்க கிடைக்கிறது?

Lava Blaze 5G இப்போது எங்கிருந்து வாங்க கிடைக்கிறது?

ஆனால், லாவா நிறுவனம் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. Lava Blaze 5G இன் அதிகாரப்பூர்வ விற்பனை நவம்பர் 15 அன்று மதியம் 12 மணிக்கு Amazon வழியாக தொடங்கியது. இந்த சாதனத்தின் விலை 10,999 ரூபாய், இது இந்தியாவில் இப்போது கிடைக்கும் குறைந்த விலை 5G ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது Glass Blue மற்றும் Glass Green நிறங்களில் கிடைக்கிறது.

Lava Blaze 5G போன் சிறப்பம்சம்

Lava Blaze 5G போன் சிறப்பம்சம்

இந்த Lava Blaze 5G போன் ஆனது 720 x 1600 தெளிவுத்திறன் உடன் கூடிய 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் கொண்ட 6.5' இன்ச் HD+ டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது 4 ஜிபி ரேம் மற்றும் ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 700 SoC மூலம் இயக்கப்படுகிறது. கூடுதலாக, இந்த ஸ்மார்ட்போன் 3 ஜிபி வரையிலான விர்ச்சுவல் ரேம் அம்சத்தையும் ஆதரிக்கிறது. மொத்தமாக 7 ஜிபி ரேம் இத்துடன் கிடைக்கிறது.

இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!இந்த Smartwatch வாங்க எல்லாரும் கும்பலா படை எடுக்குறாங்க.! ஏன்னா இப்போ 90% விலை கம்மி.!

மலிவு விலையில் 5ஜி உடன் 1TB வரையிலான ஸ்டோரேஜ் கிடைக்கிறதா?

மலிவு விலையில் 5ஜி உடன் 1TB வரையிலான ஸ்டோரேஜ் கிடைக்கிறதா?

இந்த Lava Blaze 5G போனில் 128 ஜிபி ஸ்டோரேஜ் வழங்கப்பட்டுள்ளது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரையிலான ஸ்டோரேஜை நீங்கள் அதிகரிக்கலாம் என்பது சிறப்பு. இந்த 5ஜி ஸ்மார்ட்போன் டூயல் சிம் கார்டுகளை ஆதரிக்கிறது. இது இப்போது ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தில் இயங்குகிறது. விரைவில் இந்த Lava Blaze 5G போன் ஆண்ட்ராய்டு 13 இல் இயங்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.

Lava Blaze 5G டிவைஸின் கேமரா அம்சங்கள்

Lava Blaze 5G டிவைஸின் கேமரா அம்சங்கள்

இந்த புதிய மலிவு விலை 5ஜி ஸ்மார்ட்போன் ஆனா Lava Blaze 5G டிவைஸில் 50MP பிரைமரி கேமரா சென்சார், டெப்த் கேமரா மற்றும் எல்இடி ப்ளாஷ் கொண்ட மேக்ரோ லென்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 8MP முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த Lava Blaze 5Gஸ்மார்ட்போன் 5,000mAh ஆற்றலைக் கொண்ட பேட்டரியை பேக் செய்கிறது.

மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?மாயம் இல்ல மந்திரம் இல்ல.! இனி WhatsApp மெசேஜ் உங்க கண்னுக்கு மட்டும் தெரியும்.! எப்படி தெரியுமா?

அட்ராசக்கை..! 50 மணிநேர டாக் டைம் நேரம்-ஆ.!

அட்ராசக்கை..! 50 மணிநேர டாக் டைம் நேரம்-ஆ.!

லாவா ஸ்மார்ட்போன் அங்கீகாரத்திற்காக ஃபேஸ் அன்லாக்கை ஆதரிக்கிறது மற்றும் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சாரையும் இது கொண்டுள்ளது. இந்த போனை ஒருமுறை சார்ஜ் செய்தால் 50 மணிநேர டாக் டைம் நேரம் வழங்கப்படும் என்றும், 25 நாட்கள் வரை ஸ்டான்பை நேரத்தையும் வழங்கும் என்றும் Lava நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதை விட குறைந்த விலையில் 5G போன் வாங்க முடியுமா?

இதை விட குறைந்த விலையில் 5G போன் வாங்க முடியுமா?

கடந்த மாதம் நடைபெற்ற இந்திய மொபைல் காங்கிரஸ் 2022 (IMC) இல், Lava Blaze 5G ஸ்மார்ட்போன், தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அவர்களால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் இப்போது மிகவும் குறைந்த விலையில் கிடைக்கும் பெஸ்டான 5ஜி ஸ்மார்ட்போன் மாடலாக இந்த Lava Blaze 5G மாறியுள்ளது. இதை விட குறைந்த விலையில் இனி 5ஜி ஸ்மார்ட்போன் கிடைக்க வாய்ப்பே இல்லை.!

Best Mobiles in India

English summary
Lava Blaze 5G Smartphone Confirms Android 13 Software Update Soon

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X