WiFi பாஸ்வோர்ட் விபரம் தேவையில்லை.! டைரக்ட்டா WiFi உடன் இணைவது எப்படி? இதோ ட்ரிக்.!

|

How to connect to a Wi-Fi network without asking password details: ஸ்மார்ட்போன் பயனர்கள் அனைவருக்கும் இப்போது டேட்டா ஒரு முக்கிய தேவையாக மாறிவிட்டது. முன்னொரு காலத்தில் செல்போன் பயனர்களுக்கு டாக் டைம் நேரங்கள் தான் மிகவும் முக்கியமான விஷயமாகப் பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது மக்கள் அனைவருக்கும் டாக் டைமை விட, டேட்டாவின் தேவை தான் முக்கியமானதாக உள்ளது.

டேட்டா பற்றவில்லையா? சிக்கலாக இருக்கிறதா? அப்போ என்ன செய்யலாம்?

டேட்டா பற்றவில்லையா? சிக்கலாக இருக்கிறதா? அப்போ என்ன செய்யலாம்?

நம்முடைய ரீசார்ஜ் திட்டங்களுடன் நமக்கு கிடைக்கும் டேட்டா நன்மை சில நேரங்களில் நமக்கு போதியதாக இல்லை. உண்மையை சொல்ல போனால், மிகுந்த ஆர்வத்துடன் யூடியூப் பார்ப்பது, ரீல்ஸ் பார்ப்பது, OTT தளங்களில் விருப்பமான நிகழ்ச்சி மற்றும் திரைப்படங்களைப் பார்ப்பது என்று நமக்குக் கிடைக்கும் வரம்பிற்கு மேல் டேட்டாவை பயன்படுத்திவிடுகிறோம்.

கொஞ்சம் டேட்டா கடனா கிடைக்குமா? சுத்தமா நெட் இல்லை.!

கொஞ்சம் டேட்டா கடனா கிடைக்குமா? சுத்தமா நெட் இல்லை.!

நம்முடைய டேட்டா வரம்பு முடிந்த பிறகும் நமக்கு டேட்டாவின் தேவை அதிகமாகவே தேவைப்படுகிறது. இது போன்ற நேரங்களில் நாம் நம்முடைய நம்பர்கள் அல்லது குடும்பத்தினரிடம் கொஞ்சம் டேட்டாவை கடனாகக் கேட்க வேண்டிய சூழ்நிலை உருவாக்குகிறது. காசு கேட்டால் கூட கடன் கிடைத்துவிடும், ஆனால் டேட்டா கடன் கேட்டால் தான் தருவதற்குச் சிலர் அதிகம் யோசிக்கிறார்கள்.

நீங்க வாங்கும் புது போனில் நீங்க வாங்கும் புது போனில் "இந்த" சிப்செட் இல்லாட்டி வேஸ்ட்.! எந்த சிப்செட் போன் வாங்கினா பெஸ்ட்.!

மற்றவர் டேட்டாவை கடனாக பெற முடியுமா? அதை எப்படி கடனாக வாங்குவது?

மற்றவர் டேட்டாவை கடனாக பெற முடியுமா? அதை எப்படி கடனாக வாங்குவது?

தெரியாதவர்களுக்கு, உங்கள் நண்பர் அல்லது குடும்பத்தினரிடம் இருக்கும் டேட்டா பேலன்சில் இருந்து டேட்டாவை கடனாகப் பெற, நீங்கள் ஹாட்ஸ்பாட் அம்சத்தைப் பயன்படுத்தலாம். உங்கள் நண்பர் மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் செய்துவிட்டு, அதை உங்கள் போனில் ஒரு WiFi நெட்வொர்க்காக லாகின் செய்து பயன்படுத்தலாம். இதை எப்படிச் செய்வது என்று பார்க்கலாம்.

ஹாட்ஸ்பாட் அல்லது வைஃபை உடன் எப்படி இணைவது?

ஹாட்ஸ்பாட் அல்லது வைஃபை உடன் எப்படி இணைவது?

இது ஒரு வழி என்றாலும் கூட, மற்றொரு வழியாக உங்கள் நண்பர் வீட்டில் இருக்கும் வைஃபை டிவைஸ் அல்லது வைஃபை நெட்வொர்க் உடன் கனெக்ட் செய்து, உங்கள் மொபைலிற்கு தேவையான டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். ஹாட்ஸ்பாட் மூலமோ அல்லது வைஃபை மூலமாகவோ நீங்கள் எப்படி ஒரு நெட்வொர்க்கில் இணைய நினைத்தாலும் பாஸ்வோர்ட் உள்ளிட்ட வேண்டும்.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Wi-Fi நெட்வொர்க்கு உடன் கனெக்ட் செய்ய

Wi-Fi நெட்வொர்க்கு உடன் கனெக்ட் செய்ய "பாஸ்வோர்டு" தேவைப்படுகிறதா?

பெரும்பாலான வைஃபை நெட்வொர்க் மற்றும் ஹாட்ஸ்பாட் போன்ற நெட்வொர்க்குகளுடன் உங்கள் இணைப்பை உறுதிப்படுத்த, அந்த நெட்வொர்க்கின் உரிமையாளரிடம் இருந்து நீங்கள் அனுமதியைப் பெற வேண்டியதுள்ளது. இதற்குத் தான் பாஸ்வோர்டுகள் பயன்படுத்தப்படுகிறது. சரியான, பாஸ்வோர்ட் இல்லாமல் உங்களால் சரியான வைஃபை இணைப்புடன் இணைய முடியாது.

பாஸ்வோர்ட் சொல்ல தயக்கம் காட்டும் நண்பர்கள்.!

பாஸ்வோர்ட் சொல்ல தயக்கம் காட்டும் நண்பர்கள்.!

சிலர் பாஸ்வோர்ட் பற்றிய விபரங்களைக் கேட்கும் போது தயக்கம் கொள்கிறார்கள். இன்னும் சிலர் அவர்களுடைய வைஃபை பாஸ்வோர்ட் என்ன என்பதையே மறந்துவிடுகிறார்கள். திடீரென யாராவது வைஃபை பாஸ்வோர்ட் கேட்கும் போது, அதிகம் யோசித்து செட்டிங்ஸ் சென்று மீண்டும் நினைவுபடுத்திக்கொள்கிறார்கள்.

Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! Jio அறிமுகம் செய்த 5 புது பிளான்.! "இதை" ரீசார்ஜ் செய்ய ஒரு தனி கெத்து வேணும்.!

பர்சனல் விஷயங்களுடன் பாஸ்வோர்ட்

பர்சனல் விஷயங்களுடன் பாஸ்வோர்ட்

இதைவிடப் பெரிய சிக்கலாக இருப்பது, வைஃபை பாஸ்வோர்டை கூறும் போது, ஒரு சிறிய ரகசியம் கட்டவிழ்க்கப்படுகிறது. சிலர் அவர்களுடைய பாஸ்வோர்டை அவர்களுக்கு நெருக்கமான சில பர்சனல் விஷயங்களுடன் தொடர்புப்படுத்தி வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கான முக்கிய காரணம், பாஸ்வோர்டை எளிதில் மறந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான்.

பாஸ்வோர்ட் விபரங்கள் எல்லாம் இனி தேவையே இல்லை.!

பாஸ்வோர்ட் விபரங்கள் எல்லாம் இனி தேவையே இல்லை.!

இருப்பினும், சிலர் மறந்துவிடுகிறார்கள்.! இன்னும் சிலர் அவர்கள் பர்சனல் பாஸ்வோர்ட் தகவலை வெளிப்படையாக கூற தயக்கம் கொள்கிறார்கள் என்பதே உண்மையாக இருக்கிறது. இனி இது போன்ற சிக்கலை நீங்கள் சந்திக்க வேண்டியதில்லை - காரணம், இனி உங்கள் பாஸ்வோர்டை நீங்கள் மற்றவரிடம் எழுத்தின் பின் எழுத்தாகக் கூற வேண்டிய அவசியமில்லை.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

இனி பாஸ்வோர்ட் விபரம் இல்லாமல் வைஃபை உடன் கனெக்ட் செய்யலாம்.!

இனி பாஸ்வோர்ட் விபரம் இல்லாமல் வைஃபை உடன் கனெக்ட் செய்யலாம்.!

உங்கள் நண்பர்களுக்கு இனி உங்களுடைய பாஸ்வோர்ட் தகவலை நீங்கள் வாய் வழியாகக் கூற வேண்டிய அவசியமே இல்லை. இனி யாருக்கும் உங்கள் டேட்டாவை வைஃபை அல்லது ஹாட்ஸ்பாட் மூலமாக நீங்கள் ஷேர் செய்ய விரும்பினால், எளிமையாக அவர்களை சில நொடியில் பாஸ்வோர்ட் தகவலை வெளிப்படுத்தாமல் கனெக்ட் செய்துகொள்ள அனுமதிக்கலாம்.

எப்படி QR கோட் பாஸ்வோர்டை ஷேர் செய்வது?

எப்படி QR கோட் பாஸ்வோர்டை ஷேர் செய்வது?

உங்கள் ஸ்மார்ட்போனின் நெட்வொர்க் செட்டிங்கில் மறைந்திருக்கும் QR கோட் விபரங்களை ஸ்கேன் செய்வதன் மூலம் இதை நீங்கள் செய்து முடிக்கலாம். உங்கள் போன் Settings ஓபன் செய்து, WiFi & Network என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும். இப்போது WiFi என்றால் வைஃபை ஆப்ஷனையும், ஹாட்ஸ்பாட் என்றால் Hotspot என்ற ஆப்ஷனையும் தேர்வு செய்ய கூறவேண்டும்.

ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!ரூ.399 விலைக்கு 3TB டேட்டா! Airtel & Jio-ல இப்படி ரீசார்ஜ் பிளான் கூட இருக்கா? தெரியாம போச்சே.!

எப்படி பாஸ்வோர்ட் இல்லாமல் வைஃபை நெட்வொர்க்குடன் இணைவது?

எப்படி பாஸ்வோர்ட் இல்லாமல் வைஃபை நெட்வொர்க்குடன் இணைவது?

நீங்கள் WiFi நெட்வொர்க் உடன் இணைக்க விரும்பினால், லிஸ்டில் காண்பிக்கப்படும் வைஃபை நெட்வொர்க்கை கிளிக் செய்து, அதன் உள் இருக்கும் Share விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். இப்போது, நீங்கள் கனெக்ட் செய்திருக்கும் வைஃபை பாஸ்வோர்ட் விபரங்கள் QR கோட் வடிவில் காண்பிக்கப்படும். டேட்டா தேவைப்படும் நபர்கள் இதை ஸ்கேன் செய்து பாஸ்வோர்ட் இல்லாமல் நேரடியாக உங்கள் நபர்களை நெட்வொர்க்குடன் இணைந்துகொள்ளலாம்.

இனி பாஸ்வோர்ட் கேட்காமல் டீசெண்டான அப்ரோச் செய்யுங்க

இனி பாஸ்வோர்ட் கேட்காமல் டீசெண்டான அப்ரோச் செய்யுங்க

இதேபோல் ஹாட்ஸ்பாட் விருப்பத்தை கிளிக் செய்து, அதில் இருக்கும் Scan QR code ஆப்ஷனை கிளிக் செய்தால், உங்கள் பாஸ்வோர்டை வெளியில் சொல்லாமல் அவர்களை இணைத்துக்கொள்ள முடியும்.

உங்களுக்குப் பிற நெட்வொர்க்குடன் இணைய விருப்பம் இருந்தால், இந்த முறையில் பாஸ்வோர்ட் விபரம் இல்லாமல் நேரடியாக WiFi நெட்வொர்க்குடன் உங்களை இணைத்துக்கொள்ளலாம்.

இனி உங்கள் நண்பர்களிடம் நேரடியாக பாஸ்வோர்ட் விபரங்களை கேட்காமல் QR விபரங்களை கேளுங்கள். அதுவே டீசெண்டான அப்ரோச்சாக அமையும்.

Best Mobiles in India

English summary
How To Connect To a WiFi or Hotspot Network Without Saying Password Loud Use Share QR Scan Password

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X