வெகு துரிதமாக அறிமுகமாகும் ஐபோன்-5?

Posted By:

வெகு துரிதமாக அறிமுகமாகும் ஐபோன்-5?
வருகிற வெள்ளிக்கிழமையன்று அனைவரும் வெகுவாக எதிர்பார்த்து காத்திருந்த ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் நமது நாட்டில், எப்போது அறிமுகம் செய்யப்படும் என்று பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்தனர் வாடிக்கயாளர்கள்.

4 இஞ்ச் திரை கொண்ட இந்த ஸ்மார்ட்போனை ஏர்டெல் நிறுவனத்தின் வலைத்தளத்தில் ப்ரீ-ஆர்ட்ரில் பெறலாம் என்ற தகவல்களும் கூட வெளியானது. இந்நிலையில் ஆப்பிள் ஐபோன்-5 ஸ்மார்ட்போன் வருகிற வெள்ளிக்கிழமை நமது நாட்டில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனால் வாடிக்கையாளர்களுக்கு இருக்கும் ஐபோன்-5 ஸ்மார்ட்போனின் கனவு இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 8 மணி நேரம் டாக் டைம் மற்றும் 225 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

ஏர்டெல் நிறுவனத்தின் வலைத்தளத்தில் இந்த ஸ்மார்ட்போனை ரூ. 45,500 விலையில் பெறலாம். ஆனால் ஸ்டோர்களில் இந்த ஸ்மார்ட்போன் என்ன விலை கொண்டதாக இருக்கும் என்று இன்னும் கொஞ்சம் காத்திருந்து பெற வேண்டியுள்ளது.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்