Home
Mobile

விண்டோஸ் போனிற்கு மாறும் எச்டிசி!

By Super

விண்டோஸ் போனிற்கு மாறும் எச்டிசி!
அடுத்து விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை எச்டிசி நிறுவனமும் களமிறக்க தயாராக உள்ளது. சாம்சங், நோக்கியா என்று பெரிய பெரிய நிறுவனங்கள் தங்களது விண்டோஸ் போனை அறிமுகம் செய்ய இருக்கின்றன.

இதற்கிடையில் எச்டிசி நிறுவனம் 8எக்ஸ் மற்றும் அக்கார்டு என்று 2 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த 2 ஸ்மார்ட்போன்களும் கிட்டத்தட்ட ஒரு மாதிரியான தொழில் நுட்ப விவரங்களை கொண்டதாக இருக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றது. இந்த அக்கார்டு ஸ்மார்ட்போன் பற்றி நமது தமிழ் கிஸ்பாட்டில் ஏற்கனவே சில தகவல்கள் வெளியானது.

இந்த அக்கார்டு மற்றும் 8எக்ஸ் ஆக்கா என்ற ஸ்மார்ட்போன்களை கூடிய விரைவில் ஸ்மார்ட்போன் சந்தையில் அறிமுகம் செய்கிறது எச்டிசி. இதில் 8எக்ஸ் ஆக்கா ஸ்மார்ட்போன் பற்றி தொழில் நுட்ப விவரங்கள் கூட தற்சமயம் வலைத்தளங்களில் கசிந்துள்ளது.

8எக்ஸ் என்ற எச்டிசி ஸ்மார்ட்போன் 4.3 இஞ்ச் திரையினை கொண்டதாக இருக்கும். இதன் பிராசஸர் கூட சிறப்பான வேகத்தினை கொண்டு இயங்கும். 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டியூவல் கோர் பிராசஸரினை கொண்டதாக இருக்கும். இந்த 8எக்ஸ் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், 16 ஜிபி மெமரி வசதியினையும் எளிதாக வழங்கும். இதில் சிறந்த என்எப்சி தொழில் நுட்ப வசதியினையும் பெறலாம். அக்கார்டு ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரம் பற்றிய தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

இது மட்டும் அல்லாது எச்டிசி ஒன் எக்ஸ் ஸ்மார்ட்போனின் மேம்படுத்தப்பட்ட ஒன்றாக ஒன் எக்ஸ் ப்ளஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது எச்டிசி. இப்படி எச்டிசி நிறுவனம் விண்டோஸ் இயங்குதளம் கொண்ட ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வாடிக்கையாளர்களின் பாராட்டுதல்களை பெற உள்ளது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X