புதிய எச்டிசி டேப்லெட்: காட்டுத் தீயாய் பரவும் வதந்தி!

எச்டிசி நிறுவனம் ஒரு புதிய உயர்தர போன் டேப்லெட்டைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக இருக்கிறது என்று பல வதந்திகள் உலா வர ஆரம்பித்திருக்கின்றன. இந்த புதிய டேப்லெட்டுக்கு எச்டிசி பாப்லெட் என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த புதிய டேப்லெட் சாம்சங் கேலக்ஸி நோட்டுக்கு போட்டியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. வரும் செப்டம்பரில் வேரிசன் கேரியர் சர்வீஸ் வழியாக இந்த எச்டிசி புதிய டேப்லெட்டை வாங்கலாம் என்று வதந்திகள் வருகின்றன.
இந்த புதிய டேப்லெட்டைப் பற்றி இணைய தளங்களில் ஏராளமான தகவல்கள் வந்தாலும் அவற்றை எச்டிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை. இந்த எச்டிசி டேப்லெட் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக இதன் 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கிறது. அதனால் இதில் சூப்பராக வீடியோ பார்க்க முடியும்.
மேலும் இந்த டேப்லெட் ஆன்ட்ராய்டு ஆன் ஸ்க்ரீன் பட்டன்களோடு வருகிறது. அதோடு ஆன்ட்ராய்டு 4.0.4 ஐசிஎஸ் இயங்கு தளத்தில் இந்த டேப்லெட் இயங்க இருக்கிறது. மேலும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளம் இதில் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.
இந்த எச்டிசி டேப்லெட் 1.5 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் ப்ராசஸர் கொண்டிருப்பதால் இதன் இயங்கு வேகமும் மிக அபாரமாக இருக்கும். அதோடு இதில் அட்ரினோ 320 ஜிபியு கொண்டிருப்பதால் க்ராபிக்ஸ் வேலைகளையும் மிக சூப்பராக செய்ய முடியும்.
இணைப்பு வசதிகளுக்காக இந்த டேப்லெட் யுஎஸ்பி, ப்ளூடூத் மற்றும் டபுள்யுலேன் போன்ற தொழில் நுட்பங்களை கொண்டிருக்கிறது. அதனால் இந்த டேப்லெட்டில் தகவல் பரிமாற்றத்தை மிக அழகாகச் செய்ய முடியும். மேலும் பல வசதிகளுடன் வரும் இந்த டேப்லெட்டின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications