விண்டோஸ் இயங்குதளத்தில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!

By Super
|

விண்டோஸ் இயங்குதளத்தில் புதிய எச்டிசி ஸ்மார்ட்போன்கள்!
விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்ட எலக்ட்ரானிக் சாதனங்கள் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அதிகமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தினை வழங்கும் எச்டிசி நிறுவனம் கூட நிறைய விண்டோஸ்-8 ஆப்பேரட்டிங் சிஸ்டம் கொண்ட ஸ்மார்ட்போனை வழங்குகிறது.

ரியோ, அக்கார்டு மற்றும் செனீத் போன்ற விண்டோஸ்-8 இயங்குதளத்தினை இந்த ஸ்மார்ட்போன் வழங்கும். இங்கே கூறப்பட்டுள்ள மூன்று ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப வசதியினை பற்றியும் தெளிவாக பார்க்கலாம்.

எச்டிசி ரியோ ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் கியூவல்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 ப்ளஸ் எம்எஸ்எம்8227 பிராசஸர் வசதியினை கொண்டதாக இருக்கும். 14.4 எம்பிபிஎஸ் வேகத்தில் எச்டிசி ரியோ ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். இந்த ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல்

கேமராவினையும் கொடுக்கும்.

எச்டிசி அக்கார்டு என்ற ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 இயங்குதளம் கொண்டதாக இருக்கும் என்றும் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. 4.3 இஞ்ச் திரை வசதியினை கொடுப்பதோடு எல்சிடி தொடுதிரை தொழில் நுட்பத்தினையும் வழங்கும். இன்னும் இந்த ஸ்மார்ட்போனில் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும் பெறலாம். என்எப்சி தொழில் நுட்பம்

அனைவராலும் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் அக்கார்டு ஸ்மார்ட்போனில் எச்டிசி என்எப்சி தொழில் நுட்பத்தினையும் பெறும் வகையில் இருக்கும்.

செனீத் என்ற எச்டிசி ஸ்மார்ட்போன், மேல் கூறிய மற்ற 2 ஸ்மார்ட்போன்களில் உள்ள திரையைவிடவும் அதிக திரையினை பெற முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. செனீத் ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த திரையின் மூலம் சிறந்த சூப்பர் எல்சிடி 2 திரை தொழில் நுட்ப வசதியினையும்

பெறலாம். இதன் 8 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறந்த புகைப்படங்களை பெறலாம் என்று தாராளமாக நம்பலாம்.

விண்டோஸ்-8 இயங்குதளத்தினை கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன்கள் அக்டோபர் மாதம் அறிமுகமாகும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வழக்கமாக ஆன்ட்ராய்டு இயங்குதளத்தினை வழங்கும் எச்டிசி ஸ்மார்ட்போனுக்கு மத்தியில் விண்டோஸ்-8 இயங்குதளத்துடன் வரும் எச்டிசி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்கள்

வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X